Word |
English & Tamil Meaning |
|---|---|
| முன்புத்தை | muṉputtai adv. cf. முன்புற்றை. See முன்பு. (திவ். திருவாய். 1, 4, 2, பன்னீ.) . |
| முன்புருவம் | muṉ-puruvam n. <>முன்பு1+. Anterior bicipital ridge; அடிக்கை எலும்பின் முனைப்பாகம். (W.) |
| முன்புள்ளார் | muṉpuḷḷār n. <>முன்பு+ உள்ளார்1. The ancients; forefathers; predecessors; பூர்விகர். முன்புள்ளார். . . என்பார்கள் (திருவிருத். 34, வ்யா. பக். 206). |
| முன்புற்றை | muṉpuṟṟai adv. cf. முன்புத்தை. See முன்பு. முன்புற்றையிற் காட்டில் (ஈடு, 7, 9, 4). |
| முன்மடி | muṉ-maṭi n. <>முன்1+. [Tu.munmadi.] Tuck or fold in the cloth serving the purpose of a bag or receptacle; ஆடையின் மடியிற் செய்துகொள்ளும் பை. (W.) |
| முன்மற - த்தல் | muṉ-maṟa- v. intr. <>முன்மறம். To grow vehement; to burst into a passion; உக்கிரங்கொள்ளுதல். (W.) |
| முன்மறம் | muṉ-maṟam n. <>முன்1+. See முன்கோபம். முன் மறத்திலே சொல்லாதே. (W.) |
| முன்மாதிரி | muṉ-mātiri n. <>id.+. Example; precedent; model ; திருட்டாந்தம். Mod. |
| முன்மாரி | muṉ-māri n. <>id.+. Cultivation when the seed is sown before the rains; பருவமழைக்குமுன் செய்யும் விதைப்பு. (J.) |
| முன்முகப்பு | muṉ-mukappu n. <>id.+. Entrance, as of a palace; அசாரவாசல். (யாழ். அக.) |
| முன்முகனை | muṉ-mukaṉai n. <>id.+. Commencement; தொடக்கம். (யாழ். அக.) |
| முன்முடுகுவெண்பா | muṉ-muṭuku-veṇpā n. <>id.+முடுகு-+. A kind of veṇpā having a quick flowing rhythm in the first two lines; முன்னிரண்டடிகள் முடுகியசந்தங்கொண்டு வரும் வெண்பாவகை. |
| முன்முறை | muṉ-muṟai n. <>id.+. Previous or past birth; முற்பிறப்பு. முன்முறை செய்தவத்தினிம்முறை யியைந்தே (பரிபா, 11, 138). |
| முன்மொழி | muṉ-moḻi n. <>id.+. 1. Old saying, proverb; பழமொழி. (W.) 2. (Gram.) The second member of a compound word; |
| முன்மொழிந்துகோடல் | muṉ-moḻintu-kōṭal n. <>id.+மொழி-+. (Gram.) Mention at the commencement of what must needs be stated frequently in the course of a treatise, one of 32 utti. q.v.; உத்தி முப்பத்திரண்டனுள் பின்னர் அடிக்கடி கூறவேண்டியவறை முன்னர் எடுத்துக் கூறும் உத்திவகை. (நன். 14.) |
| முன்மொழிநிலையல் | muṉ-moḻi-nilaiyal n. <>id.+. Compound word in which there is emphasis of meaning on the second member; தொகைமொழியுள் இரண்டாவது மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்கை. (தொல். சொல். 419). |
| முன்வளம் | muṉ-vaḷam n. <>id.+ வள்ளம். (J.) 1. Prow or bow of a vessel; தோணியின் முன்பக்கம். 2. Front, forepart; |
| முன்வாய் | muṉ-vāy n. <>id.+. 1. Forepart of the mouth; வாயின் முற்பக்கம். 2. Lip; 3. The direction opposite to that whence the wind blows, in winnowing; 4. Grain found mixed with chaff even after winnowing. |
| முன்வாய்ப்பல் | muṉvāy-p-pal n. <>முன்வாய்+. Incisor. See முன்னம்பல். (M. L.) |
| முன்றணிவு | muṉṟaṇivu n. prob. முன்1+தணிவு. A defect in cattle; மாட்டுக்குற்றவகை. (பெ.மாட்.17.) |
| முன்றளை | muṉṟaḷai n. <>id.+தளை. See முன்னணை 4. (யாழ். அக.) . |
| முன்றாங்கி | muṉṟāṅki n. <>id.+தாங்கு-. A kind of ring worn by women, on the toes ; மகளிர் கால்விரல்களிலணியும் அணிவகை. Nā. |
| முன்றாதை | muṉṟātai n. <>id.+தாதை2. Grand-father; பாட்டன். (யாழ். அக.) |
| முன்றாய் | muṉrāy n. <>id.+தாய். Grand-mother; பாட்டி. (யாழ். அக.) |
| முன்றானை | muṉṟāṉai n. <>id.+தானை. 1. The outer end of a saree or cloth; சீலைத்தலைப்பு. முன்றானையிலே முடிந்தாளலாம்படி (ஈடு, 1, 10, 11). 2. Upper garment; |
| முன்றானைபோடு - தல் | muṉṟāṉai-pōṭu- v. intr. <>முன்றானை+. See மூன்றானைவிரி-. Loc. . |
| முன்றானைவிரி - த்தல் | muṉṟāṉai-viri- v. intr. <>id.+. To be one's wife; to yield to a man's embrace; ஒருவனுக்குப் பெண்டாயிருத்தல். Loc. |
| முன்றிணைமுதல்வன் | muṉṟiṇai-mutal-vaṉ n. <>முன்1+திணை+. Progenitor, ancestor; குலமுன்னோரில் முதல்வன். நின்முன்றிணை முதல்வர் போல நின்று (பதிற்றுப். 14, 20). |
