Word |
English & Tamil Meaning |
|---|---|
| முன்னதாக | muṉṉatāka adv. <>முன்1+ஆ-. [K. muntāgi.] Before; முன்பு. |
| முன்னந்தம் | muṉ-ṉ-antam n. <>id.+ அந்தம்1. Front view; முன்பார்வை. (W.) |
| முன்னந்தலை | muṉṉan-talai n. <>id.+. Forepart of the head, sinciput; நெற்றியிலிருந்து உச்சிவரையுள்ள தலைப்பாகம். (C. G.) |
| முன்னந்தொடை | muṉṉan-toṭai n.<>id.+தொடை4. (W.) 1. Upper part of the thigh; தொடையின் மேற்பாகம். 2. Fore-quarter of mutton; |
| முன்னபாவம் | muṉ-ṉ-apāvam n. <>id.+. Previous non-existence, one of four apāvam, q.v.; அபாவம் நான்கனுள் முன்பு இல்லாமை. (தருக்க சங். 96.) |
| முன்னம் 1 | muṉṉam adj. & adv. <>id. [K. munnam.] See முன்1. நம்மினு முன்ன முணர்ந்தவளை (குறள், 1277). . |
| முன்னம் 2 | muṉṉam n. <>முன்னு1-. 1. Thought, intention; கருத்து. முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3). 2. Mind; 3. Sign, indication; 4. Implication, suggestion; 5. Indication of the person speaking and the person addressed, in a stanza; |
| முன்னம் 3 | muṉṉam n. (பிங்.) 1. Lion; சிங்கம். 2. Black sirissa. |
| முன்னம்பல் | muṉṉam-pal n. <>முன்னம்1+. Front tooth, incisor; வாயின் முன்புறத்துள்ளபல். (C. G.) |
| முன்னர் | muṉṉar adv. <>முன்1. [K. munna.] 1. Before; inadvance; in front of; முன்பு. (பிங்.) வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள், 435). 2. In former times; |
| முன்னர்விலக்கு | muṉṉar-vilakku n. See முன்னவிலக்கு. (W.) . |
| முன்னல் | muṉṉal n. <>முன்னு1-. [T. munnu.] (சூடா) 1. Thinking; நினைவு. 2. Mind; |
| முன்னவள் | muṉṉaval n. <>முன்1. 1. Elder sister; தமக்கை. (பிங்.) 2. Goddess of Misfortune; |
| முன்னவன் | muṉṉavaṉ n. <>id. 1. The First Being; God; கடவுள். முன்னவன் போதியில் (மணி. 28, 141). 2. šiva; 3. Elder brother; |
| முன்னவிலக்கு | muṉṉa-vilakku n. <>முன்னம்2+. (Rhet.) A figure of speech in which a statement is heightened in effect by the suggestion of an apparent contradiction; குறிப்பினால் ஒன்றனைமறுத்து மேன்மைதோன்றச் சொல்லும் விலக்கணிவகை. (தண்டி. 42.) |
| முன்னறிகுறி | muṉ-ṉ-aṟikuṟi n. <>முன்1+. Portent, presage; பின்னிகழ்ச்சிக்கு அறிகுறியாக முன்னிகழ்வது. |
| முன்னன் | muṉṉaṉ n. <>id. See முன்னவன், 3. பெட்பொடு முன்னனைக் காணும் (இரகு. அவதாரநீங். 13). . |
| முன்னா - தல் | muṉ-ṉ-ā- v. intr. <>id.+. To be first; to be early; முன்னதாதல். முன்னான பூதங்கள் (கம்பரா. இரணியன்வதை. 170). |
| முன்னாடி | muṉṉāṭi adv. <>id.+ நாடு-. Formerly; previously; already; முன்னமே. Colloq. |
| முன்னாலே | muṉṉālē adv. <>id. See முன்னாடி. Colloq. . |
| முன்னாள் 1 | muṉṉāḷ n. <>id.+ நாள். 1. Yesterday; previous day; முன்தினம். 2. Former days; |
| முன்னாள் 2 | muṉṉāḷ n. <>id. Elder sister; தமக்கை. (W.) |
| முன்னிசிவு | muṉ-ṉ-icivu n. <>id.+. A kind of rheumatism in which the body is bent forward; உடம்பை முன்பக்கமாக வளையச் செய்யும் தம்பவாதநோய். (சீவரட். 165.) |
| முன்னிட்டி | muṉ-ṉ-iṭṭi n. prob. முன்னிடு-. Crib, manger, trough for fodder; விலங்கிற்கு உணவிடுந்தொட்டி. (W.) |
| முன்னிடு - தல் | muṉ-ṉ-iṭu- v. <>முன்1+. [T. munnidu, K. mundidu, M. munniduga.] intr. 1. To advance; to go in front; முந்துதல். 2. To be ready, prompt; 3. To succeed, be successful; 1. To put before; 2. To meet; 3. To let one go before or in advance; 4. To bear in mind; 5. To invoke the aid of; |
