Word |
English & Tamil Meaning |
|---|---|
| முன்னிருட்டு | muṉ-ṉ-iruṭṭu n. <>id.+. Darkness in the early hours of the night, as during the dark fortnight; அபரபட்சத்து இரவின் முன்னேரத்திலுள்ள இருள். Colloq. |
| முன்னிருப்பு | muṉ-ṉ-iruppu n. <>id.+. 1. Former condition; முன்னிலைமை. 2. Ancestral property; 3. Balance on hand; 4. Balance brought fordward; |
| முன்னில் - தல் [முன்னிற்றல்] | muṉ-ṉil- v. intr. <>id.+நில்-. 1. To appear before; முன்தோன்றுதல். முன்னின்றாண்டாய் (திருவாச. 21, 2). 2. To stand by; to assist, guide; 3. To take the lead; 4. To assume responsibility; |
| முன்னிலவு | muṉṉilavu n. <>id.+நிலவு. See முன்னிலா. (W.) . |
| முன்னிலா | muṉṉilā n. <>id.+நிலா. Moonlight in the early hours of the night, as during the bright fortnight; பூர்வபட்சத்து இரவின் முன்னேரத்திலுள்ள நிலவு. |
| முன்னிலை | muṉṉilai n. <>id.+நிலை. 1. Person or thing that stands in front; முன்னிற்ப-வன்-வள்-து. முன்னிலையாக்கல் (தொல். பொ. 101). 2. (Gram.) Second person, the person or thing spoken to; 3.Cause; 4. That which is essential; 5. Presence; 6. Place of manifestation; |
| முன்னிலைக்காட்சி | muṉṉilai-k-kāṭci n. <>முன்னிலை+. Realising God as being immediately present; இறைவனை அணித்துறக் காணும் காட்சி. (பிரபஞ்சலி.) |
| முன்னிலைக்காரன் | muṉṉilai-k-kāraṉ n. <>id.+. 1. Headman of the caste, as of Kammāḷaṉ, Vaṇṇāṉ, etc.; கம்மாளர் வண்ணார் முதலிய சாதிகளின் தலைவன். (யாழ். அக.) 2. A petty officer; |
| முன்னிலைப்படர்க்கை | muṉṉilai-p-paṭarkkai n. <>id.+. (Gram.) Word which in form is in the third person, but is used in the second person; முன்னிலைப்பொருளில் வழங்கும் படர்க்கைச்சொல். எம்பி முன்னிலைப் படர்க்கை (சீவக. 1760, உரை). |
| முன்னிலைப்பரவல் | muṉṉilai-p-paraval n. <>id.+. Praise addressed to God; கடவுளை முன்னிலைப்படுத்திப் புகழுகை. (சிலப். 17, பக். 448.) |
| முன்னிலைப்பாடு | muṉṉilai-p-pāṭu n. <>id.+ படு-. Bail, security, pledge; புணைப்பொருள். (W.) |
| முன்னிலைப்புறமொழி | muṉṉilai-p-puṟamoḻi n. <>id.+. (Akap.) Speech intended for one who is present but spoken as if to a third person; முன்னிலையாக நிற்பாரைக் குறித்துப் பிறனைக் கூறுமாறுபோலக் கூறுஞ் சொல். (தொல். பொ. 165, இளம்பூர.) |
| முன்னிலைப்பெயர் | muṉṉilai-p-peyar n. <>id.+. (Gram.) Second personal pronoun or noun; முன்னிலையிடத்துவரும் பெயர்ச்சொல். (தொல். எழுத். 321.) |
| முன்னிலையசை | muṉṉilai-y-acai n. <>id.+. (Gram.) Expletive used with the second person sing., as miyā in ceṉmiyā; முன்னிலையில் வழங்கும் அசைச்சொல். (புறநா. 40, உரை). |
| முன்னிளவல் | muṉ-ṉ-iḷaval n. <>முன்1+. See முன்றோன்றல். (திவா.) . |
| முன்னின்மை | muṉ-ṉ-iṉmai n. <>id.+.இன்-மை. (Log.) Previous non-existence. See முன்னபாவம் முன்னின்மையோடு பின்னின்மையன்றி (வேதா. சூ. 35). |
| முன்னீடு 1 | muṉ-ṉ-iṭu n. <>முன்னிடு-. 1. Going before; முன்செல்லுகை. 2. Placing before; 3. Leadership; 4. Responsible person; 5. An ear-ornament, worn by women; |
| முன்னீடு 2 | muṉ-ṉ-iṭu n. <>முன்1+. First or prior mortgage; முதல் அடைமானம். |
| முன்னீர் | muṉṉīr n. <>முன்1 +நீர். [T. mun-niru K. munnir.] Sea, as having been formed before land; [நிலத்துக்குமுன்தோன்றியது] கடல். முன்னீர் விழவி னெடியோன் (புறநா. 9, பாடபேதம்) . |
| முன்னீர்க்கோவை | muṉṉīr-k-kōvai n. <>id.+. Catarrh; ஜலதோஷவகை. (சீவரட்.) |
| முன்னு 1 - தல் | muṉṉu- 5 v. tr. cf. உன்னு- [K. munnu.] To think, contemplate; கருதுதல். வேறுபுல முன்னிய விரகறி பொருந (பொருந. 3). |
