Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூக்குப்பொடி | mūkku-p-poṭi n. <>id.+. Snuff; மூக்கால் உறிஞ்சப்படும் புகையிலைத்தூள். Mod. |
| மூக்குயர் - த்தல் | mūkkuyar- v. intr. <>id.+உயர்- To pinch up the nose of a new-born infant to prevent it being flat-nosed; பிறந்த குழந்தையின் மூக்கைச் சப்பையாகாமலிருப்பதற்காக இழுத்துவிடுதல். அண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார் (சீவக. 2703). |
| மூக்குரட்டை | mūkkuraṭṭai n. See மூக்கிரட்டை. (பைஷஜ.) . |
| மூக்குரத்தம் | mūkku-rattam n. <>மூக்கு1+. Bleeding from the nose. See இரத்தபீனசம். |
| மூக்குரி - த்தல் | mūkkuri- v. tr. <>id.+. See மூக்கறு-. அவனை மூக்குரித்துவிட்டான். . |
| மூக்குவட்டகை | mūkku-vaṭṭakai n. <>id.+. Cup with a nose-shaped lip; விளிம்பில் மூக்குப்போன்ற வாயுடைய கிண்ணம் (S. I. I. ii, 418.) |
| மூக்குவாளி | mūkku-vāḷi n. <>id.+. A ring worn in the nose; மூக்கணிவகை. (W.) |
| மூக்குறட்டை | mūkkuṟaṭṭai n. See மூக்கிரட்டை. (பதார்த்த. 348.) . |
| மூக்குறாங்காற்று | mūkkuṟāṅ-kāṟṟu n. perh. முக்கு5 +உறு-+. Cyclone; சுழல்காற்று. Loc. |
| மூக்குறிஞ்சு - தல் | mūkkuṟicu- v. intr. <>மூக்கு1+. To sniff; ஓசையுண்டாக மூக்கினால் மூச்சை உள்வாங்குதல். மூக்குறிஞ்சி முலையுணாயே (திவ்.பெரியாழ், 2, 2, 2). |
| மூக்கூளை | mūkkūḷai n. <>id.+ ஊளை2. See மூக்குச்சளி. (யாழ். அக.) . |
| மூக்கை | mūkkai n. <>மொக்கு. [K. magge.] Bud; மொட்டு. (சங். அக.) |
| மூக்கைச்சுளி - த்தல் | mūkkai-c-cuḷi- v. intr. <>மூக்கு1+. See மூக்குச்சுழி-. (W.) . |
| மூக்கைச்சொறி - தல் | mūkkai-c-coṟi- v. intr. <>id.+. To plead poverty or abject condition, as by rubbing the tip of one's nose. எளிமை காட்டுதல். தயங்கவைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து (திருப்பு. 695). |
| மூக்கைநெறி - த்தல் | mūkkai-neri v. intr. <>id.+. See மூக்குச்சுழி-. (W.) . |
| மூக்கைப்பிடி - த்தல் | mūkkai-p-piṭi- v. intr. <>id.+. 1. To control the breath, as in devotional exercises; பிராணாயாமஞ்செய்தல். 2. To mutter mantras; |
| மூக்கொலியன் | mūkkoliyaṉ n. <>id.+. Chank; சங்கு. (மூ. அ.) |
| மூக்கொற்றி | mūkkoṟṟi n. <>id.+ ஒற்று-. 1. See மூக்குத்தி, 1, 2. (W.) . 2. See மூக்கொற்றிக்கோரை. (சங். அக.) 3. A climber, Thumbergia racemosa; 4. See மூக்குத்தி, 3, 4. Loc. |
| மூக்கொற்றிக்கோரை | mūkkoṟṟi-k-kōrai n. <>மூக்கொற்றி+. A kind of club grass, Scirpus antarcticus; புல்வகை. (W.) |
| மூக்கொற்றிப்பூடு | mūkkoṟṟi-p-pūṭu n. <>id.+. [T. mukkidi.] A plant, Inula indica; சிறுசெடிவகை. (W.) |
| மூக்கொற்றிப்பூண்டு | mūkkoṟṟi-p-pūṇṭu n. <>id.+. See மூக்கொற்றிப்பூடு. (W.) . |
| மூக்கொற்றைக்கோரை | mūkkoṟṟai-k-kōrai n. <>id.+. See மூக்கொற்றிக்கோரை. (W.) . |
| மூக்கோட்டை 1 | mūkkōṭṭai n. <>மூக்கு1+. Nostril; நாசித்துவாரம். |
| மூக்கோட்டை 2 | mūkkōṭṭai n. See முக்கோட்டை. (திவ். பெரியதி. 8, 10, 10, வ்யா.) . |
| மூகம் | mūkam n. <>mūka. 1. Dumbness; ஊமை. 2. Speechlessness; silence; 3. Poverty; 4. A kind of fish; 5. A class of devils; |
| மூகன் 1 | mūkaṉ n. <>mūka. 1. Dumb man; ஊமையன். சீறிச்சமண்மூகர் (தக்கயாகப். 189). 2. An Asura; 3. Poor man; |
| மூகன் 2 | mūkaṉ n. <>மூக்கன்2. Low, mean person; கீழ்மகன். (திவா.) |
| மூகா - த்தல் | mūkā- v. intr. <>மூகம்+ஆ7 -. To be mute or silent; மௌனமாயிருத்தல். (யாழ். அக.) |
| மூகி | mūki n. Ragi; கேழ்வரகு. (நாமதீப. 354.) |
| மூகை 1 | mūkai n. <>mūka. Dumb person; ஊமை. (பிங்.) |
| மூகை 2 | mūkai n. 1. Liver ஈரற்குலை. (பிங்.) 2. [T. mūka.] Vast horde; 3. of மூதை2. Mistletoe berrythorn; |
| மூகைமை | mūkaimai n. <>மூகை1. Dumbness; ஊமையாயிருக்குந் தன்மை. மூகைமைக் கொள்கையே மிக்கான் (தணிகைப்பு. வீராட்ட. 43). |
