Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூச்சடை - த்தல் | mūccaṭai- v. intr. <>id.+. To cause choking; மூச்சுத்திணறச்செய்தல். |
| மூச்சடைப்பான் | mūccaṭaippāṉ n. <>மூச்சடை-. See மூச்சடைப்பு, 2. (R.) . |
| மூச்சடைப்பு | mūccaṭaippu n. <>id. 1. Difficulty in respiration; hard breathing; panting for breath; மூச்சுவாங்குகை. 2. Choking, asphyxia; |
| மூச்சன் | mūccaṉ n. <>மூச்சு. Powerful, strong person; வலியவன். (J.) |
| மூச்சிழுப்பு | mūcciḻuppu n. <>id.+. Asthma; சுவாசகாசம். Loc. |
| மூச்சு | mūccu n. [M. mūccu.] 1. Respiration, breath; சுவாசம். மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும் (தனிச். சிந். 111, 1). 2. Manliness; 3. Strength; 4. Effort; |
| மூச்சுக்காட்டாமை | mūccu-kāṭṭāmai, n. <>மூச்சுக்காட்டு- + ஆ neg. Breathless silence; நிச்சத்தமாயிருக்கை. |
| மூச்சுக்காட்டு - தல் | mūccu-k-kāṭṭu- v. intr. <>மூச்சு +. 1. To show signs of life; ஆளரவஞ்செய்தல். 2. To show signs of courage; |
| மூச்சுக்காண்கை | mūccu-k-kāṇkai n. <>id.+. Breathing hard, as a sign of expiring; மரணக்குறியாக மேன்மூச்சுத் தோன்றுகை. Loc. |
| மூச்சுக்குத்து | mūccu-k-kuttu n. <>id.+. A kind of gout; ஒருவகை வாதநோய் (W.) |
| மூச்சுண்டை | mūccuṇṭai n. See மூசுண்டை. மூச்சுண்டை விற்று ... பாடுபட்டு (ஆதியூரவதானி, 3). |
| மூச்சுத்தாங்கல் | mūccu-t-tāṅkal n. <>மூச்சு +. See மூச்சடைப்பு. (யாழ். அக.) . |
| மூச்சுப்பறிதல் | mūccu-p-paṟital n. <>id.+. (யாழ். அக.) 1. Breathing out; exhalation; சுவாசம் வெளியே செல்கை. 2. Becoming weak; |
| மூச்சுப்பிடி - த்தல் | mūccu-p-piṭi- v. intr. <>id.+. 1. To control or suppress the breath; மூச்சை உள்ளடக்குதல். (W.) 2. To be short of breath; 3 To be sprained at the hip; 4. To strain one's powers; |
| மூச்சுப்பிடிப்பு | mūccu-p-piṭippu n. <>id.+. 1. Pleurisy; pleurodynia; ஒருவகைச் சுவாச நோய். 2. Suppression of breath; 3. Sprain at the hip; |
| மூச்சுப்பேச்சு | mūccu-p-pēccu n. <>id.+. 1. Talk; பேசுகை. (W.) 2. Sign of life; |
| மூச்சுப்பொறு - த்தல் | mūccu-p-poṟu- v. intr. <>id.+. To suppress breath; மூச்சை யுள்ளடக்குதல். (W.) |
| மூச்சுமுட்டல் | mūccu-muṭṭal n. <>id.+. 1. Suffocation; மூச்சுத்திணறுகை. 2. Asthma; |
| மூச்சுவாங்கு - தல் | mūccu -vāṅku- v. intr. <>id.+. 1. To restrain breath, as in making an effort or dragging a heavy thing; சுவாசத்தை உள்ளேயடக்குதல். (யாழ். அக.) 2. To breathe hard; 3. To crack, split open; to give way, as a wall; |
| மூச்சுவாங்குதல் | mūccu-vāṅkutal n. <>id.+. Colloq. 1. Panting, breathing hard, as in fatigue; இளைப்பினால் பெருமூச்சு வருகை. 2. Long-drawn breathing at the moment of death; |
| மூச்சுவிடாமல் | mūccu-viṭāmal adv. <>மூச்சுவிடு- + ஆ neg. Loc. 1. In breathless silence; வாய் திறவாமல். 2. Without break or intermission; |
| மூச்சுவிடு - தல் | mūccu-viṭu - v. intr. <> மூச்சு +. 1. To breathe, respire; உட்கொண்ட வாயுவை வெளியிற் போக்குதல். மூச்சுவிடு முன்னமே (தனிப்பா. i, 80, 160). 2. See மூச்சுவாங்கு-, 3. |
| மூச்செடுத்தல் | mūcceṭuttal n. <> id.+ எடு -. 1. Gasping one's last breath; மேல்மூச்சு எழுகை. (யாழ். அக.) 2. Holding one's breath; |
| மூச்செறி - தல் | mūcceṟi- v. intr. <>id.+. See மூச்சுவிடு-, 1. (W.) . |
| மூச்சை | mūccai n. See மூர்ச்சை. (W.) . |
| மூச்சொடுங்குகை | mūccoṭuṅkukai n. <>மூச்சு + ஒடுங்கு-. Ceasing to breathe, as when dying; பிராணன் ஒடுங்குகை. (W.) |
| மூசடை | mūcaṭai n. cf. ஊசடை. [K. musari.] 1. Rancidity; பழுதாய்ப்போகை. 2. Anything that has become rancid; anything unclean; |
| மூசல் | mūcal n. <>மூசு-. 1. Swarming, thronging; மொய்க்கை. (பிங்.) 2. Death; 3. Being spoiled; |
