Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூடு 2 | mūṭu n. <>மூடு-. [T. mōdu, M. mūṭu] 1. Root; வேர். மன்னு புனன் மூட்டில் விடக் கொப்பெலாந் தழைத் தோங்கும் (குற்றா. தல. மூர்த்தி. 17). 2. Cause; origin; 3. cf. பூடு. Small bush; 4. Ewe; 5. Stand, as of a chariot; |
| மூடு 3 | mūṭu n. prob. முகடு. See மூட்டுப்பூச்சி1. மூட்டுக்குங் கொதுகுக்கும் (அருட்பா, vi, தனிப்பா. பக். 750). |
| மூடு 4 | mūṭu n. See மூடன், 1. மூடாய முயலகன் (தேவா. 878, 3). |
| மூடுகுப்பாயம் | mūṭu-kuppāyam n. <>மூடு-+. 1. Mantle; long coat; நீண்ட அங்கி. (J.) 2. Overcoat; |
| மூடுசன்னி | mūṭu-caṉṉi n. <>id.+. Catalepsy; சன்னிநோய்வகை. (யாழ். அக.) |
| மூடுசாந்து | mūṭu-cāntu n. <>id.+. Lime mortar used in flooring, terracing, etc.; தளம் முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தும் அரைசாந்து. (J.) |
| மூடுசீலை | mūṭu-cīlai n. <>id.+. Wrapper, cloth-cover; போர்க்கும் ஆடை. (W.) |
| மூடுசூளை | mūṭu-cūḷai n. <>id.+. A kind of brick kiln; செங்கற் காளவாய்வகை. (W.) |
| மூடுடமரம் | mūṭuṭa-maram n. <>id.+ perh. உடை5+. East Indian satinwood. See முதிரை, 3. (L.) |
| மூடுதார் | mūṭu-tār n. <>id.+ தாறு2. See மூடுசீலை. (W.) . |
| மூடுதிரை | mūṭu-tirai n. <>id.+. See மூடுசீலை. (W.) . |
| மூடுபல்லக்கு | mūṭu-pallakku n. <>id.+. A kind of covered palanquin; மூடிய பல்லக்கு வகை. |
| மூடுபனி | mūṭu-paṉi n. <>id.+. Fog, mist; அடர்ந்து பெய்யும் பனி. Colloq. |
| மூடுபாறை | mūṭu-pāṟai n. <>id.+. Covering stone of a tunnel or sluice; தூம்பின்மேல் மூடுங் கல். (W. G.) |
| மூடுமந்திரம் | mūṭu-mantiram n. <>id.+. Profound secret; பரமரகசியம். (W.) |
| மூடுவழி | mūṭu-vaḻi n. <>id.+. Subterranean passage, as in a fort; கோட்டை முதலியவற்றில் கட்டிடத்தால் மூடிக்காக்கப்பட்ட வழி (கட்டட. நாமா.) |
| மூடை | mūṭai n. <>id. [T. muṭa K. mūde M. mūda.] 1. Sack, sack-load, pack; பண்ட மூட்டை. பொதிமூடைப் போரேறி (பட்டினப்.137). 2. Packed bundle, as of paddy; 3. A large receptacle for grains; |
| மூண்டன் | mūṇṭaṉ n. cf. மூடனம்1. Black pepper; மிளகு. (மலை.) |
| மூண்டாணி | mūṇṭāṇi n. cf. முண்டாணி. See மூன்றுவீசம். Nā. . |
| மூத்தண்ணா | mūttaṇṇā n. <>மூ-+அண்ணா. Eldest brother; தமையன். Loc. |
| மூத்ததிகாரம் | mūttatikāram n. <>id.+ அதிகாரம். Supreme authority; தலைமையதிகாரம். (T. A. S.) |
| மூத்ததிருப்பதிகம் | mūtta-tiruppatikam n. <>id.+. A poem in Patiṉorāntirumuṟai by Kāraikkāl-ammalyār; காரைக்காலம்மையாரியற்றியதும் பதினொராந்திருமுறையிலுள்ளதுமான ஒரு பதிகம். (பெரியபு. காரைக்கா. 63.) |
| மூத்தநயினார் | mūtta-nayiṉār n. <>id.+. Gaṇēša, as the eldest son of šiva; [சிவபிரானது மூத்த புதல்வர்] விநாயகர். பெருச்சாளியை மூத்தநயினார் மொடுவாய்க் கொடுபோனார் (குற்ற.குற. 93, 2). |
| மூத்தநாயனார் | mūtta-nāyaṉār n. <>id.+. See மூத்தநயினார். மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை. (பதினொ.) |
| மூத்தப்பன் | mūttappaṉ n. <>id.+அப்பன். [M. muttappan]. Father's father; பாட்டன். எம்மு னெந்தை மூத்தப்பன் (தேவா, 1086, 9). தம்மூத்தப்பன் (திவ், திருப்பல். 6). |
| மூத்தபிள்ளை | mūtta-piḷḷai n. <>id.+ A title conferred on the Vēḷāḷas of Nācināṭu, by Travancore kings; திருவாங்கூர் அரசரால் நாஞ்சில் நாட்டு வேளாளர்க்குக் கொடுக்கப்படும் பட்டவகை. Nā. |
| மூத்தபிள்ளையார் | mūtta-piḷḷaiyār n. <>id.+. See மூத்தநயினார். மூத்த பிள்ளையார் திருமும் மணிக்கோவை. (பதினொ.) |
| மூத்தம் | mūttam n. See முகூர்த்தம். மூத்த மொன்றின் முடிந்தவர் (கம்பரா. கரன்வதை. 189). |
| மூத்தமாமியார் | mūtta-māmiyār n. <>மூ-+. 1. First wife of one`s father-in-law; மாமனாரின் மூத்தமனைவி. 2. Elder sister-in-law; |
| மூத்தவன் | mūttavaṉ n. <>id. 1. One who is senior in age; வயதிற்பெரியவன். 2. Elder brother; 3. Superior; |
