Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூலைக்கப்புப்பாய்தல் | mūlai-k-kappu-p-pāytal n. <>id.+. A children's game; குழந்தைகளின் விளையாட்டுவகை. Loc. |
| மூலைக்கார்த்திகை | mūlai-k-kārttikai n. <>id.+. The days of month of Kārttikai after Tiru-k-kārttikai; கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகைக்குப் பின்வரும் நாட்கள். Loc. |
| மூலைக்கால் | mūlai-k-kāl n. <>id.+. See முகூர்த்தக்கால்.மூலைக்கால் நாட்டும் விதி (சர்வா. சிற். 39). . |
| மூலைக்காற்று | mūlai-k-kāṟṟu n. <>id.+. Wind blowing from an intermediate point of the compass; மூலைத்திசையினின்று அடிக்குங் காற்று. (W.) |
| மூலைக்குடா | mūlai-k-kuṭā n. <>id.+. 1. Corner of a bay, harbour, etc.; குடா துறைமுகம் முதலியவற்றின்மூலை. 2. Out-of-the-way room in a large house; remote corner of a large field; |
| மூலைக்குத்து | mūlai-k-kuttu n. <>id.+. 1. Position of a house in which its main doorway faces a corner of the courtyard; முற்றத்து மூலைக்கு எதிராக விட்டுத் தலிவாயிலின்நிலை அமையப்பெற்றிருக்கை. 2. See முலைப்பார்வை. |
| மூலைக்குமூலை | mūlaikku-mūlai adv. <>id.+. In a scattered manner; சிதறுபட. Colloq. |
| மூலைக்குமூலைவரிசை | mūlaikku-mūlai-varicai n. <>id.+. Diagonal bond, herringbone work, rows of parallel lines in which the alternate rows slope in different directions; ஒன்றுவிட்டொருகல் எதிர்முகமாகச் சாயும்படி அமைக்கும் கட்டடமுறை. (C. E. M.) |
| மூலைக்கை | mūlai-k-kai n. <>id.+. Beam from a corner to the ridge of a roof; வீட்டின் மூலைமுகட்டுச் சட்டம். (W.) |
| மூலைகா - த்தல் | mūlai-kā- v. intr. <>id.+. To lie mourning in a corner of house, as a recently widowed woman; புருஷனையிழந்த மனைவி வீட்டுக்குள் ஓருமூலையிற் கிடந்து துக்கங் கொண்டாடுதல். Loc. |
| மூலைத்தாய்ச்சி | mūlai-t-tāycci n. <>id.+. A game. See நாலுழலைத்தாய்ச்சி. |
| மூலைத்திசை | mūlai-t-ticai n. <>id.+. Intermediate point of the compass; பெருந்திசைகளுக்கு ஊடேயுள்ள கோணத்திக்கு. (W.) |
| மூலைப்பார்வை | mūlai-p-pārvai n. <>id.+. 1. Position of house facing an intermediate point of the compass, considered inauspicious; கோணத்திசையை நோக்கிய வீட்டுநிலை. 2. Fixed, oblique look of the eyes at the time of death; |
| மூலைமட்டப்பலகை | mūlai-maṭṭa-p-palakai n. <>மூலைமட்டம்+. Mason's set-square; மூலைமட்டம்பார்க்கும் கருவி. (C. E. M.) |
| மூலைமட்டம் | mūlai-maṭṭam n. <>மூலை+. 1. Right angle; நேர்கோணம். 2. See மூலைமட்டப்பலகை. (கட்டட. நாமா.) |
| மூலைமட்டம்பார்த்தல் | mūlai-maṭṭam-pārttal n. <>மூலைமட்டம்+. Testing a doorframe by diagonal measurement; வாயில்நிலையில் மூலைகளின் சரிசமத்தை அளவிட்டுப் பார்க்கை. |
| மூலைமுடக்கு | mūlai-muṭakku n. <>மூலை+. 1. See மூலைமுடுக்கு. . 2. Crooked way; |
| மூலைமுடுக்கு | mūlai-muṭukku n. <>id.+. Nook, corner; சந்துபொந்து. |
| மூலையடியே | mūlai-y-aṭiyē adv. <>id.+அடி3. At one's pleasure, as one likes; யதேச்சையாய். மூலையடியே சுகானுபவம் பண்ணித் திரிந்தார்களாம்படி. (ஈடு, 4, 9, 5). |
| மூலையடிவழி | mūlai-y-aṭi-vāḻi n. <>id.+. id.+. Short cut; குறுக்குவழி. எனக்கு இங்ஙனேயிருப்பதொரு மூலையடிவழி யுண்டாவதே (ஈடு, 10, 8, 3). |
| மூலையரம் | mūlai-y-aram n. <>id.+. Threesided rasp or file; மூன்று பட்டையுள்ள அரம். (W.) |
| மூலையோட்டம் | mūlai-y-ōṭṭam n. <>மூலையோடு-. Angular extension, diagonal extending out of square; நேர்கோணமின்றி மூலையாய். அமைகை. (W.) |
| மூலையோடு 1 | mūlai-y-ōṭu n. <>மூலை+ஓடு2. 1. Ridge-tile; கூரை முகட்டில் வேயும் ஓட்டுவகை. Mod. 2. A kind of tile used for covering the valley of a roof; |
| மூலையோடு - தல் | mūlai-y-ōṭu-, n. v. intr. <>id-.+ஓடு2. To be elongated, as a corner; to run out of square; நேர்கோணமின்றி மூலைவாக்காயமைதல். (W.) |
| மூலைவாக்கு 1 | mūlai-vākku n. <>id.+. Diagonal position, oblique position; மூலைகோணியநிலை. (W.) |
| மூலைவாங்கல் | mūlai-vāṅkal n. <>id.+ வாங்கு-. See மூலையோட்டம். (W.) . |
