Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூலைவாசல் | mūlai-vācal n. <>id.+. Gate or door-way at or near a corner of a house; வீட்டின் நேராகவன்றி ஒதுக்கமா யமைந்த வாயில். |
| மூலைவாட்டம் | mūlai-vāṭṭam n. <>id.+. See மூலைவாக்கு. . |
| மூலைவாட்டு | mūlai-vāṭṭu n. <>id.+. See மூலைவாக்கு. . |
| மூலைவிட்டம் | mūlai-viṭṭam n. <>id.+. Diagonal; நாற்கோணத்திலுள்ள எதிர்மூலைகளைச் சேர்க்குங் கோடு. |
| மூலைவேர் | mūlai-vēr n. <>id.+. Root running aslant; நேராகவன்றிச் சரிவாய்ச் செல்லும் வேர். (W.) |
| மூலோங்காரம் | mūlōṅkāram n. <>mūla+ōṅkāra. Praṇava, the mystic syllable ōm; பிரணவம். ஆதி பராபரதின் பாலாய் மூலோங்காரப் பொருளாயிருந்தாள் (கந்தபு. அநந்த. சாப. 2). |
| மூலோதாரணம் | mūlōtāraṇam n. <>mūlōdāharaṇa. Illustration embodied in the text; மூலத்துடன் அமைந்த உதாரணம் தண்டியாசிரியர் மூலோதாரணங் காட்டினாற் போல (பி. வி. 3, உரை). |
| மூவசைச்சீர் | mū-v-acai-c-cīr n. <>மூ2+ஆசை+. Metrical foot of three syllables; உரிச்¢சீர். வெண்பா வினமா நேரசையாலிற்ற மூவசைச்சீர் (காரிகை, உறுப். 6). |
| மூவட்சி | mū-v-aṭci n. <>id.+அட்சி. Coconut, as having three eyes; தேங்காய். (தைலவ. தைல.) |
| மூவடிமுப்பது | mū-v-aṭi-muppatu n. <>id.+அடி3+. A poem of 30 stanzas of three lines each, attributed to Iṭai-k-kāṭar; இடைக்காடர் செய்ததாகக் கூறப்படுவதும் சிந்தடிச்செய்யுள் முப்பதுகொண்டாதுமான ஒரு நூல் (தொல். பொ. 548, உரை.) |
| மூவடிவு | mū-vaṭivu n. <>id.+ வடிவு. The three forms of living things, viz., āṇ, peṇ, ali; ஆண் பெண் அலி என்ற மூவகை உருவம். (பிங்.) |
| மூவணை | mū-v-aṇai n. <>id.+ அணை3. Three yokes of oxen; மூன்று சோடி ஏர்மாடு. (W.) |
| மூவர் | mūvar n. <>id. 1. The Hindu Trinity. See திரிமூர்த்திகள். பலர்புகழ் மூவருந்தலைவராக (திருமுரு. 162). 2. See மூவேந்தர். வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் (தொல். பொ. 391). 3. The three šaiva saints, viz., Appar, Cuntarar, Campantar, authors of the Tēvāram hymns; |
| மூவரசர் | mū-v-aracar n. <>id.+. See மூவேந்தர். (W.) . |
| மூவராயர் | mūvarāyar n. <>மூவரையர். See மூவேந்தர். மூவராயர் கண்டன் (S. I. I. i, 110). . |
| மூவரியணில் | mū-vari-y-aṇil n. <>மூ2+ வரி+. Striped squirrel, Sciurus palmarum, as having three longitudinal stripes along its back; முதுகில் நீளமாக மூன்று வரிகளுடைய அணில் வகை. மூவரியணிலோடாங்கவை நான்குங் குட்டிக்குரிய (தொல். பொ. 561). |
| மூவரையர் | mū-v-araiyar n. <>id.+ அரையன். See மூவராயர். (Insc.) . |
| மூவறிவுயிர் | mū-v-aṟivuyir n. <>id.+அறிவி+உயிர். Creatures such as ants, having only three senses, viz., ūṟu, cuvai, nāṟṟam; ஊறு சுவை நாற்றம் ஆகிய மூவறிவுமட்டுமேயுள்ள சிதலெறும்பாதியான பிராணிகள். (தொல். பொ. 585.) |
| மூவாசை 1 | mū-v-ācai n. <>id.+. The three desires or passions, viz., maṇ-ṇ-ācai, peṇ-ṇ-ācai, poṉ-ṉ-ācai; மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்ற மூவகைப்பட்ட பற்று. |
| மூவாசை 2 | mūvācai n. prob. முகவாசை2. Cloth spread over a corpse; சவத்தின்மேல் மூடுஞ்சீலை. Loc. |
| மூவாதியார் | mūvātiyār n. A poet, author of Aintiṇai-y-eḻupatu; ஜந்திணையெழபது என்ற நூலை இயற்றிய ஆசிரியர். |
| மூவாமருந்து | mūvā-maruntu n. <>மூ-+ஆ neg.+. Nectar, as preventing old age; அமிர்தம். மூவாமருந்தின் முன்னர்த் தோன்றலின் (சிலப். 2, 46). |
| மூவாமலை | mūvā-malai n. <>id.+ id.+. The Mount Mēru; மேருமலை. (பிங்.) |
| மூவாமுதல் | mūvā-mutal n. <>id.+ id.+. God; கடவுள். (யாழ். அக.) |
| மூவாயிரவர் | mū-v-āyiravar n. <>மூ2+ ஆயிரம். The community of 3000 Brahmins, being special devotees of the God at Chidambaram. See தில்லைமூவாயிரவர்.மூவாயிரவாக்கு மூர்த்தி யென்னப்பட்டானை (தேவா. 17, 7). |
| மூவார் | mūvār n. <>மூ-+ஆ neg. The Dēvas, as never aging; [மூப்பில்லாதவர்] தேவர். மூவார் தொழுதெழு வடிவம் (மேருமந். 874). |
| மூவிசை | mū-v-icai n. <>மூ2 + இசை5. (Mus.) Pitch of three grades, viz., mantam, mattimam, uccam; மந்தம் மத்திமம் உச்சம் என்ற மூன்றான சுரவகை. (W.) |
