Word |
English & Tamil Meaning |
|---|---|
| மெய்மாசு | mey-mācu n. <>id.+. 1. Dirt in the body; உடலழுக்கு. (பிங்.) 2. Excreta; |
| மெய்மேலாதனம் | mey-mēl-ātaṉam n. <>id.+மேல்+. (Yōga.) A posture in which the body is raised and supported by both the hands placed on the ground; இரண்டுகையையு ழன்றி உடலை உயர்த்தி நிறுத்தும் ஆசனவகை (தத்துவப்.109, உரை.) |
| மெய்மேனிற்றல் | mey-mēṉiṟṟal n. <>id.+id.+நில்-.(Yōga.) See மெய்மேலாதனம். வீரவாதன மாமை மெய்மேனிற்றல் (தத்துவப். 109). . |
| மெய்யவத்தை | mey-y-avattai n. <>id.+. See மெய்க்குற்றம். (சூடா.) . |
| மெய்யவற்குக்காட்டல்வினா | mey-y-avaṟku-k-kāṭṭal-viṉā. n. <>id.+அவன் + காட்டு-+. Question put to a person with a view to instructing him ; பிறனை யறிவுறுத்தற்குக் கேட்கும் வினாவகை. (தொல்.சொல்.13, சேனா.) |
| மெய்யன் | meyyaṉ n. <>id. 1. One who has realised the truth; உண்மையுணர்ந்தவன். 2. True, honest, trustworthy, faithful person; 3. Sage; 4. Brahmin; 5. One who speaks the truth; 6. God, as the Embodiment of Truth; 7. Son; |
| மெய்யாப்பு | mey-yāppu n. <>id.+யா-. Coat; cloak; சட்டை. (சங். அக.) |
| மெய்யீறு | mey-y-īṟu n. <>id.+. (Gram.) Word ending in a consonant; மெய்யெழுத்தை இருதியிலுடைய சொல். மெய்யீறெல்லாம் (தொல்.எழுத்.105, இளம்பூ.) |
| மெய்யுணர்தல் | mey-y-uṇartal n. <>id.+. See மெய்யுணர்வு.. (குறள், அதி. 36.) . |
| மெய்யுணர்வு | mey-y-uṇarvu n. <>id.+. Knowledge of reality; தத்துவஞானம். (குறள், 352, உரை.) |
| மெய்யுதகம் | mey-y-utakam n. <>id.+. See மெய்வழிநீர். (மூ. அ.) . |
| மெய்யுரை | mey-y-urai n. <>id.+. 1.Faithful commentary, as true to the text; நூற்குப்பொருத்தமான உரை. (இறை. 1, உரை, பக். 8.) 2. True word; |
| மெய்யுவமம் | mey-y-uvamam n. <>id.+. (Rhet.) Comparison based on form or shape; வடிவுபற்றி வரும் உவமை. (தொல்..பொ.276, உரை.) |
| மெய்யுறுபுணர்ச்சி | mey-y-uṟu-puṇarcci n. <>id.+ உறு-+. (Akap.) Copulation, embrace; சரீரத்தாற் கூடுங் கூட்டம். (தொல்.பெர.145, உரை.) |
| மெய்யுறை | mey-y-uṟai n. <>id.+. See மெய்க்கவசம்.(சூடா.) . |
| மெய்யெழுத்து | mey-y-eḻuttu n. <>id.+. (Gram.) Consonant, as the body to which the vowel gives life; (உயிரெழுத்திற்கு உடம்பாயிருப்பது) ஒற்றேழுத்து. (வீரசோ.சந்திப.1, உரை.) |
| மெய்வசை | mey-vacai n. <>id.+. (Rhet.) A poem holding up a person to ridicule; ஒருவனைப்பற்றி வசைதோன்றக்கூறும் பாட்டுவகை. (இலக்.வி.753.) |
| மெய்வருக்கை | mey-varukkai n. <>id.+. varga. The series of consonants; மெய்யெழத்துக்களின்- வரிசை. (W.) |
| மெய்வலி | mey-vali n. <>id.+. Physical, bodily strength ; உடலின் பலம். நிரம்பிய மெய்வலியினையுடைய மாக்கள் (பெரும்பாண். 61, உரை). |
| மெய்வழிநீர் | mey-vaḻi-nīr n. <>id.+ வழி-+. Urine; சிறுநீர். (யாழ். அக.) |
| மெய்வார்த்தை | mey-vārttai n. <>id.+. (Rhet.) See மெய்யுரை, 2. (சிலப். 30, 192, அரும்.) . |
| மெய்வாழ்த்து | mey-vāḻttu n. <>id.+. (Rhet.) A poem in praise of a person; ஒருவனை வாழ்த்திக்கூறும் பாட்டுவகை (இலக். வி. 753.) |
| மெய்விடு - தல் | mey-viṭu- v. intr. <>id.+. To die, as casting off one's body ; இறத்தல். இரங்கி மெய்விடவும் (சிலப். 27, 97). |
| மெய்விரதன் | mey-virataṉ n. <>id.+. (W.) 1. Yudhiṣṭhira; உதிட்டிரன். 2. Bhīṣma; |
| மெய்விவாகம் | mey-vivākam n. <>id.+. 1. Marriage with the consent of parents; பெற்றோரின் சம்மதத்துடன் செய்துகொள்ளும் மணம். (யாழ். அக.) 2. Marriage according to law; |
| மெய்வேறு | mey-vēṟu adv. <>id.+. Individually; தனித்தனியாய். மெய்வேறு ஆழாக்கு செய்யும் (S.I.I. iii, 232). |
| மெய்வை - த்தல் | mey-vai- v. intr. <>id.+. See மெய்விடு-. வீழ்ந்து மெய்வைத்தலும் (மணி..6, 131). . |
| மெரிபாகல் | meripākal. n. . Corr. of மீதிபாகல். |
