Word |
English & Tamil Meaning |
|---|---|
| மெருகங்கிழங்கு | merukaṅ-kiḻaṅku n. Long-rooted arum; வெருகங்கிழங்கு. (பதார்த்த.405.) |
| மெருகரம் | merukaram n. <>மெருகு1+அரம்1. Smooth file; மெருகுவேலையில் உபயோகப்படும் அரவகை. (C. G.) |
| மெருகாணி | merukaram, n. <>id.+ஆணி1. See மெருகுவளை. . |
| மெருகிடு - தல் | merukiṭu- v. intr. & tr. <>id.+. To polish, burnish ; பளபளப்பு உண்டாகச் செய்தல். (W.) |
| மெருகு 1 | meruku n. [T. K. M.Tu. merugu.] Smoothness, glitter, lustre, polish; பளபளப்பு . |
| மெருகு 2 | meruku n. <>வெருகு. Longrooted arum; வெருகஞ்செடி . |
| மெருகுக்கல் | meruku-k-kal n. <>மெருகு1+. Pumice stone, used in polishing; மெருகிட உதவுங் கல். (C. E. M.) |
| மெருகுச்சுண்ணாம்பு | meruku-c-cuṇṇāmpu n. <>id.+. Fine chunam used in plastering, flooring, etc., as giving a polished surface; சுவர் முதலியவற்றிற் பூசும் சுண்ணாம்புச் சாந்து. (C. E. M.) |
| மெருகுத்தைலம் | meruku-t-tailam n. <>id.+. See மெருகெண்ணெய். Mod. . |
| மெருகுதேய் - த்தல் | meruku-tēy- v. tr. & intr. <>id.+. See மெருகிடு-. (W.) . |
| மெருகுபோடு - தல் | meruku-pōṭu- v. tr. & intr. <>id.+. See மெருகிடு-, (W.) . |
| மெருகுமண் | meruku-maṇ n. <>id.+. A kind of earth used by goldmiths in polishing; தட்டார் மெருகிடுதற்குதவும் மண்வகை. |
| மெருகுவளை | meruku-vaḷai n. <>id.+. Polishing-pin, used by goldsmiths; மெருகிடவுதவும் தட்டார் கருவிவகை. Loc. |
| மெருகெண்ணெய் | merukeṇṇey n. <>id.+எண்ணெய். 1. Varnish, oil used to give polish to cabinet work; மரச்சாமான் ழதலியவற்றிற்கிடும் மேற்பூச்சுத்தைலம். (W.) 2. Unguent for improving the complexion; |
| மெருகோடு | merukōṭu n. <>id.+ஓடு. Glazed tile; மேற்புறத்தில் பளபளப்புள்ள ஓடு. (C. E. M.) |
| மெருவணை | meruvaṇai. n. <>Mhr. meruvani. [T.meravadi, K. meruvani.] 1. Ostentation, display; ஆடம்பரம். 2. Procession, as in a wedding; |
| மெருள்(ளு) - தல் | meruḷ- 2 v. intr. <>மிரள்-. To fear; to shy; அச்சமடைதல். |
| மெருள் | merul n. <>மெருள்-. Fear; அச்சம். (நன்.101, மயிலை.) |
| மெருளி | meruḷi n. <>id. Shy person or animal; பயங்கொள்ளி. Loc |
| மெல் | mel adj. Soft, tender; மிருதுவான. ஆம்பன் மெல்லடை கிழிய (அகநா.56). |
| மெல்(லு) - தல் | mel- 3 v. tr. [K. mellu.] 1.To chew, as betel; to masticate; வாயாற்குதட்டுதல். மெல்லிலைப் பண்டியும் (சீவக. 62). 2. To chide; |
| மெல்கு - தல் | melku- 5 v. <>மென்-மை. intr. 1.To become soft; மிருதுவாதல். காலின் மென்மைக்குத் தக்கபடி தானும் மெல்கிற்றிலள் (சிலப். 15, 138, அரும்.). 2. To be light; See மெல்-. மெல்கிடு கவுள வல்குநிலை புகுதரும் (அகநா. 56). |
| மெல்கோல் | mel-kōl n. <>மெல்-+. Stick for cleaning the teeth; பற்குச்சி. மெல்கோறின்று (சீவக. 803). (சூடா.) |
| மெல்ல | mella adv. <>மென்-மை. T. mellagā K mellane.] Softly; slowly; gently; quietly; மெதுவாக. தானோக்கி மெல்ல நகும் (குறள், 1094). |
| மெல்லடை | mel-l-aṭai n. <>மெல்+. A kind of soft cake; அப்பவருக்கம். (பிங்.) |
| மெல்லணை | mel-l-aṇai n. <>id.+. 1. See மெத்தை. மெல்லணைமேல் முன்துயின்றாய் (திவ்.பெருமாள், 9, 3). . 2. Jacket; |
| மெல்லம்புலம்பன் | mellampulampaṉ n. <>மெல்லம்புலம்பு. Chief of a maritime tract; நெய்தனிலத்தலைவன். மெல்லம்புலம்பன் பிரிந்தென (குறுந். 5). (பிங்.) |
| மெல்லம்புலம்பு | mellam-pulampu n. <>மெல்+புலம்பு. Maritime tract; நெய்தனிலம் (திருக்கோ, 379, உரை.) |
| மெல்லரி | mel-l-ari. n. <>id.+ அரி2 Rice of a superior quality; உயர்ந்த அரிசிவகை. உலைதந்த மெல்லரி (திருமந்.422). |
| மெல்லி | melli n. <>id. See மெல்லியல், 2. மெல்லி நல்லா டோள்சேர் (ஆத்திசூ.) . |
| மெல்லிக்கை | mellikkai n. மெலி-. Thinness; பருமனற்றது. (W.) |
