Word |
English & Tamil Meaning |
|---|---|
| மெலித்தல் | melittal n. <>id. (Gram.) Changing of a hard consonant into the corresponding soft or nasal consonant, one of nine ceyyuḷ-vikāram, q.v.; செய்யுள்விகாரம் ஒன்பதனுள் வல்லெழுத்து இன்மெல்லெழுத்தாக மாறும் விகாரம். (நன். 155.) |
| மெலிந்தோன் | melintōṉ n. <>மெலி1-. (W.) 1. Person emaciated by disease; நோய் முதலியவற்றால் உடம்பு மேலிந்தவன். 2. See மெலியவன். 3. Destitute person; |
| மெலிப்பு | melippu n. <>id. 1. See மெலித்தல். . 2. See மெல்லெழுத்து. வல்லெழுத்து மிகு வழி மெலிப்பொடு தோன்றலும் (தொல். எழுத்.157). |
| மெலியவன் | meliyavaṉ n. <>id. Weak, powerless man; வலியவற்றவன். மெலியவர் பால தேயோ வொழுக்கமும் விழுப்பந்தானும் (கம்பரா. வாலிவதை. 80). |
| மெலியார் | meliyār n. <>id. Weak, powerless persons; பலவினர் மெலியார்மேன் மேகபகை (குறள், 861). |
| மெலிவு | melivu n. <>id. 1. Weakness, feebleness, languor; தளர்ச்சி. அணியிழை மெலிவின் (பு.வெ. 11, பெண்பாற். 5) 2. Fatigue; 3. Pain, suffering; 4 Trouble, difficulty; 5. Defeat; 6. Tyranny; oppression; 7. (Mus.) Low pitch; |
| மெலு | melu n. perh. id. Coin below the standard weight; எடைக்குறைவான நாணயம். (W.) |
| மெலுக்கு 1 | melukku n. <>மெலுக்குவை. 1. Exquisiteness; tenderness; மென்மை. (W.) 2. Wakefulness; |
| மெலுக்கு 2 | melukku n. cf. மெலுக்கு. Pomp. ostentation; வெளியலங்காரம். (யாழ். அக.) |
| மெலுக்குவை | melukkuvai n. <>T. melakuva. 1. See மெலுக்கு1, 1.(W.) . 2. See மெலுக்கு1, 2. Loc. |
| மெழுக்கம் | meḻukkam; n. <>மெழுகு-. Ground or floor prepared by being smeared with cow-dung water; சாணியால் மெழுகிவைத்த இடம். மலரணி மெழுக்கமேறி (பட்டினப். 248). |
| மெழுக்கு | meḻukku n. <>id. [M. meḷukku.] 1. Smearing with cow-dung water, as the floor; மெழுகுகை. புலர்வதன் முன்னலகிட்டு மெழுக்குமிட்டு (தேவா.727, 3); 2. Cow-dung; 3. Substance or solution used to smear any surface; See மெழுகு, 3, 4. |
| மெழுக்குச்சாத்து - தல் | meḻukku-c-cāttu- v. tr. <>மெழுக்கு+. See மெழுகு-, 1. (W.) . |
| மெழுக்குத்துணி | meḻukku-t-tuṇi n. <>id.+. 1. Wax-cloth; cloth water-proofed with a layer of wax; நீர் ஊறாதிருப்பதற்காக மெழுகு பூசின துணி. (C. E. M.) 2. Oil-cloth; 3 Tarpaulin; |
| மெழுக்கூட்டு - தல் | meḻukūṭṭu-. v. tr. <>id.+ஊட்டு-. To smear, as with wax; to coat; மேற்பூச்சிடுதல். நிஷித்த திரவியத்தை உள்ளே வைத்து மெழுக்கூட்டினவோபாதி (ஈடு, 1,2,1, பாட பேதம்). |
| மெழுகிடு - தல் | meḻukiṭu- v. tr. <>மெழுகு+ இடு -. (யாழ். அக.) 1. To wax, smear with wax, as a thread; நூலின்மேல் மெழுகு பூசுதல். 2. See மெழுகு1-. 3. See மெழுகுகட்டு- |
| மெழுகு 1 - தல் | meḻuku- 5 v. tr. 1. To cleanse the floor with cow-dung water; தரையைச் சாணமிட்டுச் சுத்திசெய்தல். நின்றிருக்கோயிறூகேன் மெழுகேன் (திருவாச, 5, 14). 2. To smear, as the body with sandal paste; 3. To gloss over; varnish; |
| மெழுகு 2 | meḻuku- n. <>மெழுகு-. [K. mayana.] 1. Cow-dung; சாணம் துய்யமெழுகுடன் (திருமந். 1720). 2. Smoothness; 3. cf. mākṣika. Wax; besswax; 4. Gum; 5. Soft, waxy pill; mass; |
| மெழுகுக்களிம்பு | meḻuku-k-kaḷimpu n. <>மெழுகு+. Medicinal ointment for itches, etc.; சிரங்கு முதலியவற்றிற்கிடும் களிம்புவகை. (M. L.) |
| மெழுகுகட்டிவார் - த்தல் | meḻuku-kaṭṭi-vār- v. tr. <>id.+. To pour molten metal into a wax-mould and cast, as an image; மெழுகுக்கருவில் உலோகங்களை யுருக்கிவிட்டு விக்கிரகம் வார்த்தல் (W.) |
| மெழுகுகட்டு - தல் | meḻuku-kaṭṭu-. v. intr. <>id.+. To make a wax-mould for casting an image; விக்கிரகம் வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல். (W.) |
