Word |
English & Tamil Meaning |
|---|---|
| மெல்லிசரம் | mellicaram n. <>மெல்லிசு+அரம்1. Sash file; நுட்பமாய் அராவ வுதவும் அரம். (C. E. M.) |
| மெல்லிசு | mellicu n. <>மெல்லிது. See மெல்லிது. Colloq. . |
| மெல்லிசுப்பிரம்பு | mellicu-p-pirampu. n. <>மெல்லிசு+. Rattan-palm, m. cl., Calamus rotang; மெல்லிதான பிரம்புவகை. (L.) |
| மெல்லிசை | mel-l-icai n. <>மெல்+. Soft tone; மிருதுவான ஒசை. |
| மெல்லிசைவண்ணம் | mellicai-vaṇṇam n. <>மெல்லிசை+. (Pros.) A rhythm effected by the frequent use of the nasals; மெல்லெழுத்து மிகுந்து வருஞ் சந்தம் (தொல். பொ. 529.) |
| மெல்லிது | mellitu n. <>மென்-மை. [K. mellitu.] 1. That which is soft or fine; மென்மை வாய்ந்த பொருள்.மலரினு மெல்லிது காமம் (குறள், 1289). 2. Thinness, slenderness; |
| மெல்லியர் | melliyar n. <>id. 1. The weak; வலிமையில்லாதவர். தேவர் மெல்லியர் (கம்பரா. யுத்த. மந்திரப். 32). 2. The emaciated; 3. The poor; 4. Low, mean persons; 5. Women, as of delicate build; |
| மெல்லியல் | mel-l-iyal n. <>id.+. 1. Tender nature; மென்மையான இயல்பு. மெல்லியற் குறுமகள் (குறுந். 89). 2. Woman; 3. Tender twig of a tree; |
| மெல்லியலாள் | melliyalāḷ n. <>மெல்லியல். See மெல்லியல், 2. மெல்லியலா ளொடும்பாடி (தேவா. 284, 8). . |
| மெல்லியார்கூந்தல் | melliyār-kūntal n. <>மெல்லி+. Seeta's thread. See அம்மையார் கூந்தல். (யாழ். அக.) . |
| மெல்லிலை | mel-l-ilai n. <>மெல்-+. 1. Betel leaf; வெற்றிலை. மெல்லிலைக் காவும் (சீவக. 326). 2. Betel pepper, vine; |
| மெல்லினம் | mel-l-iṉam n. <>மெல்+.(Gram.) The group of soft or nasal consonants, one of mū-v-iṉam, q.v.; மூவினத்துள் மெல்லோசையுடைய எழுத்துக்களின் வர்க்கம். (நன். 69.) |
| மெல்லெழுத்து | mel-l-eḻuttu n. <>id.+. (Gram.) The six consonants, ṅ, , ṇ, m,ṉ, classified as soft or nasal consonants, dist. fr. val-l-eḻuttu and iṭai-y-eḻuttu; மெல்லோசையுடைய ங், ஞ், ண், ந், ம், ன், என்ற எழுத்துக்கள். (தொல்.எழுத்.20.) |
| மெல்லென | melleṉa adv. See மெல்ல. . |
| மெல்லெனல் | mel-l-eṉal n. <>மெல்+. Expr. signifying (a) being soft; மெத்தெனற் குறிப்பு. மெல்லென் சீறடி (தொல். பொ. 146).: (b) being gentle in speech; (c). being dull; |
| மெல்லொற்று | mel-l-oṟṟu n. <>id.+. (Gram.) See மெல்லெழுத்து. (தொல். எழுத். 414.) . |
| மெல்வினை | mel-viṉai n. <>id.+. (šaiva.) Cariyai and kiriyai, the first two of the four paths to salvation, as easier; சரியை கிரியைகள். எளிதானவற்றை மெல்வினையே யென்றது (திருக்களிற்றுப் 17). |
| மெலி 1 - தல் | meli- 4 v. intr. 1. To be weak; வலிகுறைதல். 2. To become lean, thin; 3. To suffer; to languish; 4. To perish; 5. To become poor; to be reduced in circumstances; 6. (Gram.) To be softened, as a hard consonant into the corresponding soft or nasal consonant; 7. (Mus.) To be lowered in pitch; |
| மெலி 2 - த்தல் | meli- 11 v. tr. Caus. of மெலி1-. 1. To weaken; வலிகுறைத்தல். 2. To make thin, lean; 3. To cause suffering; 4. To destroy; 5. (Gram.) To soften, as a hard consonant into the corresponding soft or nasal consonant; 6. (Mus.) To Lower the pitch; |
| மெலி 3 | meli- n. <>மெலி1-. (Gram.) See மெல்லெழுத்து. மெலிமிகலுமாகும் (நன்.215). . |
| மெலிகோல் | meli-kōl n. <>மெலி2-+. Rod of tyranny; tyranny கொடுங்கோல்.மெலிகோல் செய்தேனாகுக (புறநா. 71). |
