Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேகசம் | mēkacam n.<>mēgha-ja. Pearl; முத்து. (யாழ். அக.) |
| மேகசாரம் | mēka-cāram n. <>mēgha-sāra. Camphor; கர்ப்பூரம். (சங். அக.) |
| மேகசாலம் | mēka-cālam n. <>mēgha-jāla. 1. Range of clouds; மேகத்தொகுதி. (W.) 2. A gem; |
| மேகசுரம் | mēka-curam n. perh. mēha+சுரம்1. Malaria; மலைச்சுரம். (M. L.) |
| மேகசூலை | mēka-cūlai n. <>id.+. Formation of stiff joint, anchylosis; மேகநோயால் உடற்பொருத்தில் உண்டாம் விறைப்பு. |
| மேகசோரணம் | mēka-cōraṇam n. prob. mēha+cōra. A blue-coloured gem; ராஜாவர்த்தம். (யாழ். அக.) |
| மேகத்தின்விந்து | mēkattiṉ-vintu n. prob. மேகம்1+. Earthworm; பூநாகம். (மூ. அ.) |
| மேகத்துவாரம் | mēka-t-tuvāram n. <>mēgha-dvāra. Sky; ஆகாயம். (யாழ். அக.) |
| மேகத்தொனி | mēka-t-toṉi n. <>மேகம்1+. See மேககர்ச்சனை. (W.) . |
| மேகதனு | mēka-taṉu n. <>mēgha+dhanus. Rainbow; இந்திரவில். மேகதனு ... நின்றதொக்குமே (இரகு. அயனெழுச்சி. 40). |
| மேகதாரி | mēka-tāri n. <>id. Peacock feather; மயிலிறகு. (யாழ். அக.) |
| மேகதிமிரம் | mēka-timiram n. <>id.+. A disease of the eye that clouds vision; பார்வையை மங்கச்செய்யும் கண்ணோய்வகை. (சீவரட்.) |
| மேகதீபம் | mēka-tīpam n. <>mēgha-dīpa. Lightning; மின்னல். (யாழ். அக.) |
| மேகதேகம் | mēka-tēkam n. <>mēha+. Body afflicted with venereal or urinary disease; மேகநோய்கொண்ட உடம்பு. (யாழ். அக.) |
| மேகநாதம் | mēka-nātam n. <>mēgha-nāda. 1. See மேகத்தொனி. . 2. A species of amaranth. 3. Palastree. 4. Mysore gamboge. |
| மேகநாதன் 1 | mēkanātaṉ n. <>Mēgha-nāda. 1. Indrajit. See இந்திரசித்து. அடல் மேகநாதன் புகுந் திலங்கை மேயநாள் (கம்பரா. திருவவ. 10). 2. Varuṇa; |
| மேகநாதன் 2 | mēka-nātaṉ n. perh. மேகம்2+. Sal-ammoniac. See நவச்சாரம். (சங். அக.) |
| மேகநீர் | mēka-nīr n. <>id.+. 1. See மேகக்காங்கை, 1. . 2. Impure blood in the body; venereal virus; |
| மேகநீர்ப்பாய்ச்சல் | mēkanīr-p-pāyccal n. <>மேகநீர்+. See மேகக்காங்கை, 1. . |
| மேகப்பச்சை | mēka-p-paccai n. <>மேகம்1+. A variety of greenstone; நாகப்பச்சை. (சங். அக.) |
| மேகப்படை | mēka-p-paṭai n. <>மேகம்2+. Ringworm; தோல்மேலுண்டாம் சொறிவகை. (M. L.) |
| மேகப்பற்று | mēka-p-paṟṟu n. <>id.+. Syphilitic psoriasis; ஒருவகை மேகவியாதி. (M. L.) |
| மேகப்புடை | mēka-p-puṭai n. <>id.+. 1. Secondary syphilis; பறங்கிப்புண்வகை. (இங். வை.) 2. Numbness; |
| மேகப்புண் | mēka-p-puṇ n. <>id.+. Syphilis, soft chancre; பறங்கிப்புண். (இங். வை.) |
| மேகப்புள் | mēka-p-puḷ n. <>மேகம்1+. Lark; வானம்பாடி. மேகப்புள் வயிற்பிறந்த புட்போல் (சீவக. 2897). (பிங்.) |
| மேகப்புற்று | mēka-p-puṟṟu n. <>மேகம்2+. A venereal eruption; மேகநோயா லுண்டாம் கட்டிவகை. (W.) |
| மேகபடலம் 1 | mēka-paṭalam n. <>mēgha+. 1. See மேகசாலம். மேகபடலத்தால் நீலநிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே (மதுரைக். 678, உரை). . 2. See மேகதிமிரம். (W.) |
| மேகபடலம் 2 | mēka-paṭalam n. <>mēha+. A spreading venereal sore; மேகநோயாற் படரும் புண்வகை. (W.) |
| மேகபதம் | mēka-patam n. <>mēgha-patha. See மேகமண்டலம். மேகபதத்துக்கு மேலுள்ள தேவர்கள் (தக்கயாகப். 510, உரை). . |
| மேகபந்தி | mēka-panti n. <>mēgha-paṅkti. Mass of clouds; முகிற்கூட்டம். (W.) |
| மேகபுட்பம் | mēka-puṭpam n. See மேகபுஷ்பம். (சங். அக.) . |
| மேகபுஷ்பம் | mēka-puṣpam n. <>mēgha-puṣpa. 1. Water; ¢நீர். (W.) 2. Rain; |
| மேகம் 1 | mēkam n. <>mēgha. 1. Cloud; முகில். நன்னிற மேக நின்றது போல (சிலப். 11, 46). 2. The seven celestial clouds. 3. Water; 4. The Indian cuckoo; 5. Straight sedge. |
