Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேயவன் | mēyavaṉ n. See மேயான். மேயவன் றன்னொடு மெண்ணி (கம்பரா. இலங்கைகேள். 13). . |
| மேயான் | mēyāṉ n. <>மேவு-. Resident, dweller; உறைபவன். பெருந்துறையின் மேயானை (திருவாச. 8, 7). |
| மேர்வை | mērvai n. See மேரை, 5. Loc. . |
| மேரக்காலி | mērakkāli n. Ghost; பேய் பிசாசு. (கரு. அக.) |
| மேரு | mēru n. <>mēru. 1. The golden mountain round which the planets are said to revolve, believed to be the centre of the seven Dvīpas; சத்ததீவுகளின் மத்தியபாகத்திலுள்ளதும் கிரகங்கள் சுற்றிவருவதாகக் கருதப்படுவதுமான பொன்மலை. மாநிலத் திடைநின் றோங்கிய நெடுநிலை மேரு (சிலப். 28, 48). 2. Mountain; 3. Ornamental globular top, as of a car; 4. Top or ridge of a sloping roof; 5. See மேருமணி. Loc. 6. A temple 1000 hands wide and 1000 hands high with 1000 domes and 125 floors; 7. Pudendum muliebre; 8. Sitting plank; 9. The mystical diagram of šrīcakram, made in relief; 10. Carboy, jar, big bottle of rosewater; |
| மேருக்குப்பி | mēru-k-kuppi n. <>மேரு+. 1. A kind of glass bottle in which Ganges water is carried by pilgrims; யாத்திரிகர் கங்கை நீரை அடைத்துக்கொண்டுசெல்லும் ஒருவகைக் கண்ணாடிக் கொள்கலம். 2. See மேரு, 10. |
| மேருகம் | mērukam n. <>mēruka. A kind of incense; வாசனைப்பண்டவகை. (யாழ். அக.) |
| மேருத்தீபம் | mēru-t-tīpam n. <>mēru+. A cluster of lights, waved before gods; கடவுளர் முன் எடுக்கும் அடுக்குத்தீபம். அணிமிகு மேருத்தீபம் (பரத. ஒழிபி. 41). |
| மேருதாமன் | mērutāmaṉ n. <>Mēru-dhāman. šiva; சிவபிரான். |
| மேருமணி | mēru-maṇi n. <>mēru+. The principal or central bead in a rosary or necklace; செபமாலை முதலியவற்றின் நாயகமணி. (யாழ். அக.) |
| மேருமந்தரபுராணம் | mēru-mantara-purāṇam n. A Jaina Tamil poem on the lives of Mēru and Manthara, by Vāmanācārya, composed towards the end of the 14th C.; 14 -ஆம் நூற்றாண்டினிறுதியில் வாமனாசாரியர் செய்ததும் மேரு மந்தரர்களின் சரிதத்தைக் கூறுவதுமான ஒரு சைன காப்பியம். |
| மேருயந்திரம் | mēru-yantiram n. Spike; கதிர்க்கோல். (யாழ். அக.) |
| மேருவில்லாளன் | mēru-vil-l-āḷaṉ n. <>மேரு+வில்+ஆள்-. See மேருவில்லி. மேரு வில்லாளன் கொடுத்த . . . யாவையு மாய்ந்துகொண்டான் (கம்பரா. நாகபாச. 18). . |
| மேருவில்லி | mēru-villi n. <>id.+ id. šiva, as having Mt. Mēru for His bow; [மேருமலையை வில்லாகக் கொண்டவன்] சிவபிரான். மேருவில்லி மஞ்சனச் சாலைவாய் (தக்கயாகப். 379). |
| மேருவின்வாரி | mēruviṉ-vāri n. <>id.+. Golden sand; பொன்மணல். (யாழ். அக.) |
| மேரை | mērai n. prob. maryā. [T. mēra K. Tu. mēre.] 1. Boundary, limit; எல்லை. 2. Manner, way; 3. Rule of propriety or decorum; limits of propriety; 4. Gravity, sobriety, modesty; 5. The portion of the crop, given as a perquisite to holders of kāṇi-y-āṭci or to here-ditary village officers and servants, out of the common stock on the threshing-floor; |
| மேரைத்திட்டம் | mērai-t-tiṭṭam n. <>மேரை+. Regulation or rule relating to the proportion of allowances to the village officers and servants from the crops; மேரை பிரித்துக் கொடுப்பதற்காக ஏற்பட்ட திட்டம். (W. G.) |
| மேரைமரியாதை | mērai-mariyātai n. <>id.+. See மேரை, 3. Loc. . |
| மேரைமானியம் | mērai-māṉiyam n. <>id.+. Grant of a portion of the gross produce of cultivated lands, now commuted into money; முற்காலத்தில் தானியமாகக் கொடுக்கப்பட்டுப் பின்பு ரொக்கத்தொகையாகச் செலுத்தப்படும் மாசூற்பகுதி. (W. G.) |
| மேரையழித்தல் | mērai-y-aḻittal n. <>id.+. Destruction of landmarks, as by removing survey stones, etc.; எல்லையைக் குறிக்கும் வரப்பு முதலியவற்றை அழிக்கை. |
| மேல் | mēl [T. K. mēlu M. mēl.] n. 1. That which is above or over; upper side; surface; மேலிடம். ஓலை . . . தொட்டு மேற்பொறியை நீக்கி (சீவக. 2143). 2. Extra; 3. Sky; 4. West; 5. Head; 6. Leadership; superiority; 7. Excellence; 8. The great; 9. Body; 10. Knowledge; science; 11. Place; 12. That which is superficial; 13. That which goes before; 14. That which comes after; 1. More, more than; 2. Before, previously, formerly; 3. About; 4. Afterwards, subsequently; 5. Hereafter; 1. A particle meaning on, upon, above, used with verbs; 2. Sign of the locative; |
