Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேல்விளாசம் | mēl-viḷācam n. Corr. of மேல்விலாசம். (W.) . |
| மேல்விளைவு | mēl-viḷaivu n. <>மேல்+. 1. Consequence, future result; பிற்பயன். என்ன தாகு மேல்விளைவென் றிருந்தா னிராமன் (கம்பரா. கடல்காண்.12). 2. Business that ought to be done in the near future; 3. Additional or extra crop for the year; |
| மேல்வினை | mēl-viṉai n. <>id.+. 1. Karma which is yet to come. See ஆகாமியம். மெய்ஞ்ஞானத்தால் . . . மேல்வினை கூடாது (வேதா. சூ.162). . 2. See மேல்விளைவு, 1. Loc. |
| மேல்வீடு | mēl-vīṭu n. <>id.+. 1. Storeyed house; மெத்தைவீடு. (W.) 2. Upper storey; 3. Heaven; |
| மேல்வெள்ளம் | mēl-veḷḷam n. <>id.+. Second or subsequent spate; முதல் வெள்ளத்திற்குப் பின்வரும் வெள்ளம். Loc. |
| மேல்வேஷ்டி | mēl-vēṣṭi n. <>id.+. See மேலாடை. . |
| மேலகம் | mēl-akam n. <>id.+. See மேல்வீடு, 2. (W.) . |
| மேலங்கம் | mēl-aṅkam n. <>id.+. 1. Exterior, external appearance; பகிரங்கம். 2. Outward show; |
| மேலங்கி | mēl-aṅki n. <>id.+. Outer coat; மேற்சட்டை. (W.) |
| மேலடைப்பு | mēl-aṭippu n. <>id.+. Ceiling planks; planks of a loft below the roof; மேற்கூரை அல்லது மச்சின் அடிப்புறத்தில் தைக்கப்படும் பலகை. Loc. |
| மேலத்தாட்சி | mēl-attāṭci n. <>id.+. Attestation; confirmatory sworn statement, written or oral; உறுதிமொழி. (W.) |
| மேலவர்க்கிறைவன் | mēlavarkkiṟaivaṉ n. <>மேலவர்+. See மேலவரிறைவன், 1. (திவா.) . |
| மேலவரிறைவன் | mēlavar-iṟaivaṉ n. <>id.+. (யாழ். அக.) 1. Skanda; முருகக்கடவுள். 2. Indra; |
| மேலவன் | mēl-avaṉ n. <>id.+. [K. mēl-mavanu.] 1. Great or superior person; பெரியோன். மேலவன் விளம்பலும் விளம்பன் மேயினான் (கம்பரா. விபீடண. 78). 2. Wise man; 3. Celestial being; 4. One who is seated high, as on a horse; |
| மேலழுக்கு | mēl-aḻukku n. <>id.+. Dirt or filth on the body; உடம்பழுக்கு. (W.) |
| மேலனம் | mēlaṉam n. (யாழ். அக.) 1. See மேளனம், 1, 3. . 2. Acquaintance; |
| மேலா 1 | mēlā n. perh. மேல். Superior or higher authorities; மேற்பட்ட அதிகாரஸ்தானம். மேலாவிலிருந்து உத்தரவு வந்தது. Loc. |
| மேலா 2 - த்தல் | mēl-ā- 12 v. tr. <>id.+ ஆ7-. To turn upward; மேற்புறமாக்குதல். (யாழ். அக.) |
| மேலா 3 - தல் | mēl-ā- v. intr. <>id.+ஆ6-. To excel; சிறத்தல். Colloq. |
| மேலாக்கு | mēl-ākku n. <>id.+ஆக்கு-. Upper garment worn by women; the part of a saree thrown over breast and shoulders; மகளிர் மார்பின்மேலிடும் சீலை. |
| மேலாடை | mēl-āṭai n. <>மேல்+. Upper cloth, cloth worn loosely over the shoulders; அங்கவஸ்திரம். மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் (நள. கலிநீங்கு. 45). |
| மேலாநெல்லி | mēlā-nelli n. prob. id.+. Black-berried feather foil. See பூலா, 1. . |
| மேலாப்பு | mēlāppu n. <>id.+ ஆ7-. [M. mēlāppu.] Awning, canopy; மேல்விதானம். விண்ணீல மேலாப்பு விரித்தாற்போன் மேகங்காள் (திவ். நாய்ச். 8, 1). |
| மேலாம்புறம் | mēlām-puṟam n. <>id.+. Superficiality; மேலெழுந்தவாரி. |
| மேலாமரம் | mēl-ā-maram n. perh. id.+. ஆ6-+மரம். A kind of catamaran; கட்டுமரவகை. Loc. |
| மேலாமினுக்கி | mēlā-miṉukki n. <>id.+. See மேலால்மினுக்கி. (W.) . |
| மேலாமுதுரம் | mēlāmuturam n. Bone of musk-deer; கஸ்தூரிமானின் எலும்பு. (யாழ். அக.) |
| மேலாயினார் | mēl-āyiṉār n. <>மேல் + ஆ6-. [K. mēlādavaru.] Elders; உயர்ந்தோர். இது மேலாயினாரிடங்களிற் பூப்புணர்த்துமாறு (இறை. 43, பக்.175). |
