Word |
English & Tamil Meaning |
|---|---|
| மோகனநாட்டியம் | mōkaṉa-nāṭṭiyam n. <>மோகனம்+. Dancing by women; மகளிர் கூத்து. (யாழ். அக.) |
| மோகனப்படை | mōkaṉa-p-paṭai n. <>id.+. See மோகனாஸ்திரம். (சங். அக.) . |
| மோகனம் | mōkaṉam n.<>mōhana. 1. Bewildering; confusing; மயக்கமுண்டாக்குகை. 2. Confusion of mind, mental perturbation; giddiness; 3. Magic art of fascinating a person, one of aṣṭa-karumam, q.v., also one of aṟupattu-nālu-kalai, q.v.; 4. One of the five arrows of Kāma that makes a person infatuated; 5. Infatuation as the effect of mōkaṉam, one of paca-pāṇa-c-ceyal, q.v.; 6. (Mus.) A specific melody-type; 7. Deceiving; cheating; |
| மோகனமாலை | mōkaṉa-mālai n. <>id.+. A necklace of gold beads and corals; பொன்னும் பவளழங் கோத்த மாலை வகை. மோகனமாலைக் கிசைவாய் மல்லிகைப் பூமாலையிட்டே (கொண்டல்விடு. 501). |
| மோகனலாடு | mōkaṉa-lāṭu n. <>id.+. A kind of sweetmeat; பண்ணிகாரவகை. Mod. |
| மோகனவித்தை | mōkaṉa-vittai n. <>id.+. The magic art of fascinating a person. See மோகனம், 3. (W.) |
| மோகனாங்கனை | mōkaṉāṅkaṉai n. <>id.+ anganā. Fascinating woman; அழகு முதலியவற்றாற் கண்டோரை மயக்கும் பெண். (W.) |
| மோகனாங்கினி | mōkaṉāṅkiṉi n. <>id.+. See மோகனாங்கனை. (W.) . |
| மோகனாஸ்திரம் | mōkaṉāstiram n. <>id.+. A magic arrow that causes swooning; மயக்கத்தையுண்டாக்கும் பாணவகை. (W.) |
| மோகனீயம் | mōkaṉīyam n. <>mōhanīya. (Jaina.) The karma which bewilders all the faculties, one of eṇ-kuṟṟam, q.v.; எண்குற்றத்துள் ஆன்மாவுக்கு மயக்கத்தைச் செய்யுங் குற்றம். (பிங்.) (சிலப். 10, 177, உரை.) |
| மோகனை | mōkaṉai n. See மோகனம், 3. மோகனையென்பது முந்தி முயன்றாள் (கம்பரா. அயோமுகி. 59). . |
| மோகாதி | mōkāti n. <>மோகம்1 + ஆதி1. The three defects or infirmities, viz., kāmam, vekuḷi, mayakkam; காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்கள். (யாழ். அக.) |
| மோகாந்தகாரம் | mōkāntakāram n. <>id.+ andha-kāra. Confusion of mind; mental darkness, as caused by sexual passion; மோகமாகிய இருள். |
| மோகான் | mōkāṉ n. White pomfret, deep neutral tint, Stromateus sinensis; வெண்ணிற முடைய கடல்மீன்வகை. |
| மோகி 1 - த்தல் | mōki- 11 v. intr. <>mōha. 1. To be confused, bewildered; மனந் திகைத்தல். (விநாயகபு. 74, 218.) 2. To be infatuated with love; |
| மோகி 2 | mōki. n. prob. mōhin. 1. Bhang; கஞ்சா. (தைலவ. தைல.) 2. Opium; |
| மோகிக்கப்பண்ணு - தல் | mōkikka-p-paṇṇu- v. tr. <>மோகி- + பண்ணு-. To infatuate; காமங்கொள்ளச் செய்தல். (W.) |
| மோகிதம் | mōkitam n. <>mōhita. Infatuation of love; காமமயக்கம். மோகிதமான வெங்களை (விநாயகபு. 82, 7). |
| மோகிதன் | mōkitaṉ n. <>mōhita. Love-stricken man; காமவிச்சை கொள்வோன். (W.) |
| மோகிப்பி - த்தல் | mōkippi- 11 v. tr. Caus. of மோகி-. See மோகிக்கப்பண்ணு-. எல்லாச் சகத்தையு மோகிப்பிக்கு மன்னவன் (விநாயகபு. 74, 218). . |
| மோகினி 1 | mōkiṉi n. <>mōhinī. 1. See மோகனாங்கனை. அடைய மோகினிகளாயினர் கொல் (தக்கயாகப் 87). . 2. Incarnation of Viṣṇu as a fascinating woman; 3. (šaiva.) Impure Māyā. 4. A class of demoness; |
| மோகினி 2 | mōkiṉi n. <>U. muyin. Compensation in money given annually by the Government to temples for resuming their lands; கோயில் நிலங்களைக் கைக்கொண்டதற்குப் பிரதியாக அரசாங்கத்தார் ஆண்டுதோறும் அக்கோயிற்குச் செலுத்தும் தொகை. |
| மோகினிப்பணம் 1 | mōkiṉi-p-paṇam n. <>மோகினி2 +. See மோகினி. Colloq. . |
| மோகினிப்பணம் 2 | mōkiṇi-p-paṇam n. மோகினி1+. Money offered to a god, when he is dressed in female attire and taken out in procession; திருவிழாவில் தெய்வத்திற்குப் பெண் கோலஞ்செய்து எழுந்தருளுவிக்கும்போது கொடுக்கும் பணம். (W.) |
