Word |
English & Tamil Meaning |
|---|---|
| மோசையிலவம் | mōcai-y-ilavam n. <>மோசை+. Red-flowered silk-cotton tree. See இலவு1. (தைலவ. தைல.) |
| மோட்சகாலம் | mōṭca-kālam n. <>mōkṣa+. (Astron.) The time of the last contact, emersion or egress of an eclipse; கிரகணமுடிவு வேளை. (W.) |
| மோட்சசத்துரு | mōṭca-catturu n. <>id.+. Obstacles in the way of salvation, thirteen in number, viz., rākam, tuvēṣam, kāmam, kurōtam, ulōpam, mōkam, matam, māṟcariyam, īriṣai, acūyai, iṭampam, taṟpam, akaṅkāram; பேரின்பப்பேற்றுக்கு இடையூறுகளாகிய ராகம், துவேஷம், காமம், குரோதம், உலோபம,¢ மோகம், மதம், மாற்சரியம், ஈரிஷை, அசூயை, இடம்பம், தற்பம், அகங்காரம், என்று பதின்மூன்று வகைப்பட்ட குணங்கள். |
| மோட்சசாம்பிராச்சியம் | mōṭca-cāmpirācciyam n. <>id.+. The kingdom of Heaven; மோட்சமாகிய வீடு. (W.) |
| மோட்சதருமம் | mōṭca-tarumam n. <>id.+. 1. Qualifications for attaining salvation; வீடடைதற்குரிய தகுதிப்பாடு. 2. A division of Cānti-parvam in the Mahābhārata; |
| மோட்சதீபம் | mōṭca-tīpam n. <>id.+. 1. Lamp lighted in temple-towers in commemoration of dead persons; இறந்தவர் பொருட்டுக்கோயிற் கோபுரத்தில் ஏற்றும் விளக்கு. Colloq. 2. See மோட்சவிளக்கு, 1, 2. (W.) |
| மோட்சநாடி | mōṭca-nāṭi n. <>id.+. See மோட்சகாலம். (W.) . |
| மோட்சம் | mōṭcam n. <>mōkṣa. 1. Liberation, release, escape; விடுபடுகை. 2. Final emancipation, release from transmigration, salvation; 3. Heaven; 4. (Jaina. ) Complete deliverance, state of the soul in which it is freed from all bondage of karma, and has passed for ever beyond the possibility of rebirth, on of nava-patārttam, q.v.; |
| மோட்சமண்டலம் | mōṭca-maṇṭalam n. <>id.+. See மோட்சலோகம். Chr. . |
| மோட்சமார்க்கம் | mōṭca-mārkkam n. <>id.+. 1. A way to the Supreme Heaven. See அர்ச்சிராதிமார்க்கம். 2. Path leading to salvation; |
| மோட்சமித்துரு | mōṭca-mitturu n. <>id.+. Piety and devotion, as aids to salvation; வீடுபேற்றுக்குச் சாதனமான பக்திசிரத்தை முதலியன. (W.) |
| மோட்சலோகம் | mōṭca-lōkam n. <>id.+. Heaven; பரமபதம். Chr. |
| மோட்சவாசி | mōṭca-vāci n. <>id.+. Beatified soul; மோட்சபதவியிலுள்ளோன். Chr. |
| மோட்சவாதி | mōṭcavātti n. <>மோட்சவாசி. One who has attained bliss; வீடுபேறடைந்தவன். (யாழ். அக.) |
| மோட்சவான் | mōṭcavāṉ n. <>mōkṣa. See மோட்சவாதி. (யாழ். அக.) . |
| மோட்சவிளக்கு | mōṭca-viḷakku n. <>id.+. (W.) 1. Lamp lighted and carried before the corpse or placed at the burial place, among Lingayats; வீரசைவரது பிரேதத்தின் முன்பு கொண்டுபோகப்படுவதும், மயானத்தில் புதை குழியில் வைக்கப்படுவதுமான தீபம். 2. Lamp lighted for the dead, among Roman Catholics; 3. See மோட்சதீபம், 1. |
| மோட்சானந்தம் | mōṭcāṉantam n. <>id.+. Heavenly felicity; வீட்டின்பம். (W.) |
| மோட்டன் | mōṭṭaṉ n. prob. மோடு2. Ruffian; மூர்க்கன். சீதையை மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு (திருப்பு. 266). |
| மோட்டா | mōṭṭā adj. <>Hind. mōṭa. 1. Large, great, big; பெரிய. 2. Shoddy, trashy; 3. Coarse, rough, unrefined; |
| மோட்டாக்குறுவை | mōṭṭā-k-kuṟuvai n. <>மோட்டா+. A coarse paddy which matures in 3 months; மூன்று மாதத்தில் விளையக் கூடிய குருவைநெல்வகை. Loc. |
| மோட்டார் | mōṭṭār n. <>E. motor. Automobile, motor car; யந்திரவுதவியால் தானே ஒடும் வண்டிவகை. Mod. |
| மோட்டிறால் | mōṭṭiṟāl n. <>மோடு1+. Mantis-shrimp, Astacus squilla; இறால்மீன்வகை. (W.) |
| மோட்டுத்தனம் | mōṭṭu-t-taṉam n. prob. மோடு2+. Obstinacy; முருட்டுத்தனம். (சங். அக.) |
| மோட்டுமீன் | mōṭṭu-mīṉ n. <>மோடு1+. Star; நட்சத்திரம். மோட்டுமீன் குழாத்தின் (சீவக. 2325). |
