Word |
English & Tamil Meaning |
|---|---|
| மோர்க்களி | mōr-k-kaḷi n. <>மோர்1+. A kind of repast made of buttermilk and riceflour; மோரோடு அரிசிமாச்சேர்த்துச் செய்த களியுணவு. Loc. |
| மோர்க்கறி | mōr-k-kaṟi n. <>id.+. See மோர்க்குழம்பு. Loc. . |
| மோர்க்குழம்பு | mōr-k-kuḻampu n. <>id.+. A kind of sauce made in buttermilk; மோர்சேர்த்துச் செய்யுங் குழம்புவகை (இந்துபாக.11.) |
| மோர்க்கூழ் | mōr-k-kūḻ n. <>id.+. See மோ£க்களி. Loc. . |
| மோர்ச்சாற்றமுது | mōr-c-cāṟṟamutu n. <>மோர்1+. See மோர்ச்சாறு. Vaiṣṇ. . |
| மோர்ச்சாறு | mōr-c-cāṟu n. <>id.+. A kind of sauce prepared with buttermilk; மோர் சேர்த்துச்செய்த சாறு. |
| மோர்சங்கு | mōrcaṅku n. See மோர்சிங்கு. . |
| மோர்சிங்கு | mōrciṅku n. perh. mukha+šaṅkha. [K. mōrchaṅg.] Jew's-harp; வாயிற் பிடித்துகொண்டு கையால் தட்டி வாசிகும் வாத்திய வகை. Loc. |
| மோர்மிளகாய் | mōr-miḷakāy n. <>மோர்1+. Chillies cured with buttermilk; மோரிலிட்டுப் பக்குவப்படுத்திய மிளகாய். |
| மோர்மிளகு | mōr-miḷaku n. <>id.+. See மோர் மிளகாய். . |
| மோரடகம் | mōraṭakam n. <>mōraḷaka. See மோரடம்1. . |
| மோரடம் 1 | mōraṭam n. <>mōraṭa. 1. Root of sugarcane; கரும்புவேர். (மூ. அ.) 2. A Straggling shrub with simple oblong leaves and greenish flowers; |
| மோரடம் 2 | mōraṭam n. <>mōraṭā. Bowstring hemp. See பெருங்குரும்பை. (மலை.) |
| மோரம் | mōram n. An ancient tax; பழைய வரிவகை. மோரமும் இலைவாணியப் பாட்டமும் திங்கட்காசும். (T. A. S. i. 165). |
| மோரா 1 | mōrā n. <>Persn. mohar. A gold coin, mohur; மோகராநாணயம். (சங். அக.) |
| மோரா 2 | mōrā n. <>Pāli mōrō <>mayūra. [K. mōra.] Peacock's feather; மயிற்பீலி. |
| மோரா 3 | mōrā n. Foot-stool; பாதபீடம். (W.) |
| மோரா 4 | mōrā n. <>E. Marrow; எலும்பின் உள்ளிடு. |
| மோரி | mōri n. <>U. mūrī. Small watercourse; channel; gutter; சிறுவடிகால். தன் வயலுக்கு மோரி ஒன்று வெட்டினான். Loc. |
| மோரியர் | mōriyar n. <>Mauyra. 1. The Maurya; மௌரிய வமிசத்தவர். மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு (அகநா. 281). 2. Vittiyātarar, a class of semi-divine beings; 3. Nāgas; |
| மோரீசு | mōrīcu n. Mauritius, an island in the Indian Ocean; இந்து மகாசமுத்திரத்துள்ள ஒரு தீவு. (W.) |
| மோரீசுவாழை | mōrīcu-vāḻai n. <>மோரீசு+. A kind of plantain. See ஆனைவாழை. |
| மோரெண்ணெய் | mōr-eṇṇey n. <>மோர்1+. A medicinal oil prepared with buttermilk; மோர் சேர்த்துச்செய்யும் மருந்தெண்ணெய். Nā. |
| மோரை | mōrai n. cf. மோறை2. [K. mōṟe.] Colloq. 1. Face; முகம். 2. Chin; |
| மோரைக்கயிறு | mōrai-k-kayiṟu n. <>மோரை+. Rope tied round the mouth of bulls; மாட்டின்வாயைச் சுற்றிக் கட்டுங் கயிரு. Nā. |
| மோரோடம் | mōrōṭam n. cf. மாரோடம். Red catechu. See செங்கருங்காலி. பாதிரி . . . மாமலர் நறுமோரோடமொடு (நற். 337). |
| மோலி | mōli n. <>mauli. Crown. See மௌலி. இளையவற் கவித்த மோலி யென்னையுங் கவித்தி யென்றான் (கம்பரா. விபீடண. 145). |
| மோவம் | mōvam n. <>mōha. (Jaina.) See மோகனீயம். மோழை மோவத்தினுக்கும் (மேரு மந். 103). . |
| மோவாய் | mōvāy n. prob. முகம்+வாய். [T. mōvi.] 1. Chin; வாய்க்குக்கீழுள்ள இடம். குச்சி னிரைத்த குரூஉமயிர் மோவாய் (புறநா. 257). 2.Beard; |
| மோவாய்க்கட்டை | mōvāy-k-kaṭṭai n. <>மோவாய்+. See மோவாய், 1. Colloq. . |
| மோவாய்க்கட்டைபிடி - த்தல் | mōvāy-k-kaṭṭai-piṭi- v. tr. <>id.+. See மோவாய்தாங்கு-. Colloq. . |
| மோவாய்தாங்கு - தல் | mōvāy-tāṅku- v. tr. <>id.+. To beg, make entreaties, as by touching another's chin; கெஞ்சுதல். |
| மோவாய்பிடி - த்தல் | mōvāy-piṭi- v. tr. <>id.+. See மோவாய்தாங்கு-. . |
| மோழல் | mōḻal n. Swine; பன்றி. (பிங்.) |
