Word |
English & Tamil Meaning |
|---|---|
| யாத்திரிகன் | yāttirikaṉ n. <>yātrika. Traveller, pilgrim; ஸ்தலயாத்திரை செய்வோன். |
| யாத்திரை | yāttirai n. <> yātrā. 1. Journey; voyage; pilgrimage; பிரயாணம். 2. Moving, walking; 3. Military expedition; 4. Business, occupation; 5. Habit; practice; 6. Festival; 7. Dance; |
| யாத்திரைக்காவி | yāttirai-k-kāvi n. <> யாத்திரை+. Saffron-coloured cloth worn by pilgrims; ஸ்தலயாத்திரை செய்வோர் தரிக்குங் காவி வஸ்திரம். (யாழ். அக.) |
| யாத்திரோற்சவம் | yāttirōṟcavam n. <> yātrā+ ut-sava. Festival in which the deity is taken out in procession beyond the temple limits; ஸ்தல எல்லைக்கப்பால் கோயில்மூர்த்தியை எழுந்தருளப்பண்ணுந் திருவிழா (யாழ். அக.) |
| யாத்து | yāttu n. <> யா-. Stitch: தைப்பு. (நாமதீப. 729.) |
| யாதசாம்பதி | yātacāmpati n. <> yādasām-pati. Varuṇa; வருணன். (யாழ். அக.) |
| யாதபதி | yātapati n. <> yādah-pati. (யாழ். அக.) 1. Sea; கடல். 2. Varuṇa; |
| யாதம் 1 | yātam n. <> yāta. Elephant-goad; யானைத்தோட்டி. (W.) |
| யாதம் 2 | yātam n. See யாதவம். (யாழ். அக.) . |
| யாதவம் | yātavam n. <> yādava. Stock of cattle; மாட்டுக்கூட்டம். (யாழ். அக.) |
| யாதவர் | yātavar n. <> yādava. 1. Yādavas, as descendants of Yadu; யதுவமிசத்துவர். சேதிபர் யாதவரே (கலிங். 316, புதுப்.). 2. Persons of the cowherd caste; |
| யாதவன் | yātavaṉ n. <> id. Krṣṇa; கண்ணபிரான். யாதவன் துவரைக்கிறையாகிய மாதவன். (பெரியபு. திருமலை.14). |
| யாதவி | yātavi n. <> yādavī. 1. Kuntī, as a female descendant of Yadu; குந்தி. இறைவனு மகிழ்ந்து பின்னும் யாதவிக் குரைப்ப (பாரத. சம்பவ. 85). 2. The Goddess Umā, as the sister of Krṣṇa; |
| யாதனம் 1 | yātaṉam n. See யாதனை, 1, 3. . |
| யாதனம் 2 | yātaṉam n. perh. yāna. 1. Boat; மரக்கலம். (சது.) 2. Raft; |
| யாதனாசரீரம் | yātaṉā-carīram n. <> yātanā+. The body created to undergo the experiences of hell; நரகானுபவத்துக்குரிய தேகம். பாவம் யாதனாசரீர நல்குமாறு (ஞானவா. சித்.18). |
| யாதனை | yātaṉaI n. <> yātanā. 1. Pain, agony; torment; suffering; வேதனை. அடைந்தடைந் திங்கி யாதனையா வழிந்ததல்லால் (தாயு. ஆகார. 30). 2. The tortures of hell; 3. Anguish, distress; |
| யாதஸ்து | yātastu n. See யாதாஸ்து. (W.) . |
| யாதாத்மியம் | yātātmiyam n. <> yāthāt-mya. Exact condition, true state; உண்மையான நிலை. |
| யாதாயாதமாயலை - தல் | yātāyātam-āy-alai- v. intr. <> yātāyāta+ஆ6-+அலை1-. To be wandering to and fro; போவதும் வருவதுமாய் அலைதல். Brāh. |
| யாதார்த்தியம் | yātārttiyam n. <> yāthār-thya. Truth; சத்தியம். (இலக். அக.) |
| யாதாஸ்து | yātāstu n. <> U.yāddāṣt. 1. Written memorandum; ஞாபகக்குறிப்பு. 2. Official memorandum addressed by one official to another of equal status; 3. Memorandum of interlineation, etc., in a document; |
| யாதி | yāti n. <> U. yād. (யாழ். அக.) 1. See யாது4. எனக்கு யாதி இல்லை. 2. Deep thought; |
| யாதிகன் | yātikaṉ n. <> yātika. Traveller; வழிச்செல்வோன். (சங். அக.) |
| யாது 1 | yātu interrog. pron. <> யா2. [T. ēdi K. yāvudu.] What, which; எது. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் (குறள், 254). |
| யாது 2 | yātu n. <> yātu. 1. See யாதுதானன், 1. யாது பூநெருப்பென வடராதிங்கே நிலைத்திடுகின்றான் (சேதுபு. சேதுமா.100). 2. Evil spirit, fiend, demon; |
| யாது 3 | yātu n. cf. šidhu. Toddy; கள். (சது.) |
| யாது 4 | yātu n. <> U.yād. Memory; ஞாபகம். எனக்கு யாது இல்லை. |
| யாதுதானவன் | yātu-tāṉavaṉ n. <> yātu+dānava. See யாதுதானன், 1. (சங். அக.) . |
| யாதுதானன் | yātutāṉaṉ n. <> yātu-dhāna. 1. Rākṣasa; இராக்கதன். வைதனர் யாதுதானர் (கம்பரா. கும்பக. 174). 2. See யாது2, 2. (W.) |
