Word |
English & Tamil Meaning |
|---|---|
| யாதும் | yātum adv. <> யாது1+உம். Anything and everything; anything; எதுவும். யாது மூரே யாவருங் கேளிர் (புறநா.192). |
| யாப்பண்டம் | yā-p-paṇṭam n. <> வயா+. Things longed for by pregnant women; கருப்பவதி இச்சிக்கும் தின்பண்டம். (W.) |
| யாப்பதிகாரம் | yāppatikāram n. <> யாப்பு+அதிகாரம். (Gram.) Section on prosody; செய்யுளிலக்கணம் கூறும் நூற்பகுதி. (தொல். பொ. 313, பேரா.) |
| யாப்பருங்கலக்காரிகை | yāppatuṅkala-k-kārikai n. <> யாப்பருங்கலம்+. A treatise on Tamil prosody in kaṭṭaḷai-k-kalittuṟai metre, by Amitacākarar, 11th C.; பதினொராம் நூற்றண்டில் அமிதசாகரர் கட்டளைக்கலித்துறையால் இயற்றிய செய்யுளிலக்கணநூல். |
| யாப்பருங்கலம் | yāpparuṅkalam n. <> யாப்பு+அருங்கலம். A treatise on prosody in cūttira-p-pā, by Amitacākarar, 11th C.; பதினொராம் நூற்றாண்டில் அமிதசாகரர் சூத்திரப்பாவால் இயற்றிய செய்யுளிலக்கண நூல். |
| யாப்பறை | yāppaṟai n. <> id.+அறு1-. Abandoned woman; கற்பில்லாதவள். யாப்பறை யென்றே யெண்ணின னாகி (மணி. 22, 42). |
| யாப்பானந்தம் | yāppāṉantam n. <> id.+. (Pros.) A defect in composition in which the name of the hero of a poem is clumsily set in the midst of attributes; பாட்டில் தலைவன் பெயர்க்கு முன்னும் பின்னும் சிறப்புடைமொழியினைப் புணர்த்து இடர்ப்படப்பாடும் ஆனந்தக்குற்றம் (யாப். வி. 96, பக். 522.) |
| யாப்பியம் | yāppiyam n. <> yāpya. 1. Hobby; பொழுதுபோக்கு. (யாழ். அக.) 2. That which has a time limit; 3. See யாப்பியரோகம். (குறள், 949, உரை.) 4. That which is contemptible or mean; 5. The property given to a male member of the Nācināṭu marumakkat-tāyam tarwad in lieu of his interest in the tarwad property; |
| யாப்பியயானம் | yāppiya-yāṉam n. <> id.+. Ornamental palanquin for carrying an idol for long distances; கோயில் மூர்த்தியை நெடுந்தூரம் கொண்டுசெல்லுதற்கு உதவும் தண்டிகை. |
| யாப்பியரோகம் | yāppiya-rōkam n. <> id.+. Chronic disease, as not completely curable, one of three rōkam, q. v.; ரோகம் மூன்றனுள் பெரும்பான்மை தீர்க்கத்தக்கதும் சிறுபான்மை தீர்க்கமுடியாததுமான நாட்பட்டநோய். (குறள், 949, கீழ்க்குறிப்பு.) |
| யாப்பியவுகந்துடைமை | yāppiya-v-ukantuṭaimai n. <> id.+உக-+உடை-மை. The reversionary interest of the children of a Nācināṭu tarwad in the yāppiyam property of their father; நாஞ்சிநாடு குடும்பத்துக் குழந்தைகளுக்குத் தகப்பனாருடைய யாப்பிய சொத்திலுள்ள உரிமை. |
| யாப்பிலக்கணம் | yāppilakkaṇam n. <> யாப்பு + இலக்கணம். (Gram.) Prosody; செய்யுளிலக்கணம். |
| யாப்பு | yāppu n. <> யா-. [T. āpu.] 1. Binding, tying; கட்டுகை. கழல்யாப்புக் காரிகை நீர்த்து (குறள், 777). 2. Tie; 3. Poetry; 4. Ligature stretched across the pot-like portion of yāḻ; 5. Graduated serial order of treatises to be studied, one of 11 ciṟappu-p-pāyiram, q. v.; 6. Affection, as binding persons together; 7. Resolution, steadiness, firmness; 8. Counsel; 9. Fitness; 10. of. பாம்பு. Snake; |
| யாப்புறவு | yāppuṟavu n. <> யாப்புறு1-. 1. Inviolable rule; தள்ளத்தகாத நியதி. ஒன்றற்கே இவையாறும் வரவேண்டு மென்னும் யாப்புறவில்லை (நன். 132, மயிலை.). 2. Fitness; |
| யாப்புறு 1 - தல் | yāppuṟu- v. <> யாப்பு+. intr. 1. To be pregnant with meaning; பொருள் நிரம்பியிருத்தல். யாப்புற வந்த (தொல். பொ. 254). 2. To be appropriate; To earn, gather; |
| யாப்புறு - த்தல் | yāppuṟu- v. tr. Caus. of யாப்புறு1-. To enforce; வலியுறுத்துதல். பெயர்த்துரை அதனை யாப்புறுத்தற் பொருட்டு (குறள், 944, உரை). |
