Word |
English & Tamil Meaning |
|---|---|
| யாரி 1 | yāri n. <>jāra. 1. Paramour; கள்ளப்புருஷன். Loc. 2. cf. ari. Adversary; rival; |
| யாரி 2 | yāri n. <>ஆரி3. Door; கதவு. (சது.) |
| யாரும் | yār-um n. <>யார்1+. Any or everybody; எவரும். யாரு மறிவர் புகைநுட்பம் (நாலடி, 282). |
| யாலம் 1 | yālam n. <>sāla. 1. Sal. See ஆச்சா. (அக. நி.) 2. Twin-leaved false copaiba, 1. tr., Hardwickia binata; |
| யாலம் 2 | yālam n. cf. யாமம்1. Night; இரவு. (அக.நி.) |
| யாவகம் | yāvakam n. <>yāvaka. 1. Brazil cotton. See செம்பஞ்சு, 1. (சங். அக.) 2. Chowlee bean. |
| யாவச்சீவம் | yāvaccīvam <>yāvaj-jīvam. --adv. As long as one's life lasts; வாழ்நாளுள்ள வரை. யாவச்சீவம் பிறருக்குழைத்தான்.--n. Everything about one's life and history, everything about a person; |
| யாவசூகம் | yāvacūkam n. <>yāva-šūka. Alkaline salt prepared from the ashes of burnt barley straw; வாற்கோதுமையின் வைக்கோலை நீற்றிச்செய்த உப்புவகை. (மூ. அ.) |
| யாவண் | yāvaṇ interrog. pron. <>யா2. Where; எவ்விடம். இருள் யா வணதோநின் னிழல் வாழ்வோர்க்கே (புறநா. 102). |
| யாவத்தீவு | yāva-t-tīvu n. <>yava-dvīpa. The Island of Java; யவத்தீவம். (W.) |
| யாவத்தும் | yāvattum adv. See யாவதும். அவள் சொத்து யாவத்தும் போயிற்று. . |
| யாவது | yāvatu interrog. pron. <>யா2. cf. yat. [K. yāvadu.] 1. What; எது. காரியம் யாவது கழறுவீர் (கந்தபு. தக்கன்மக. 6). 2. How; |
| யாவதும் | yāvatum <>யாவது+. adv. Even a little; சிறிதும். யாவது மனங்கவல் பின்றி (பொருந. 94).--n. See யாவும். யானைவெண் மருப்பினாலியற்றி யாவதும் (சீவக. 1201). |
| யாவநாலம் | yāva-nālam n. <>yāva-nāla. Great millet, maize, See சோளம் 1, 1. (மூ. அ.) |
| யாவநாளம் | yāva-nāḷam n. See யாவநாலம். (சங். அக.) . |
| யாவம் 1 | yāvam n. <>yāva. (சங். அக.) 1. Lac; அரக்கு. 2. Brazil cotton. |
| யாவம் 2 | yāvam n. <>yava. The Island of Java; யவத்தீவம். (W.) |
| யாவர் | yāvar interrog. pron. <>யா2. [T. evaru K. yār M. yāvar.] Who, what persons; எவர். யாவர்வாய் திறக்க வல்லார் (கம்பரா. பூக்கொய். 6). |
| யாவரும் | yāvar-um n. <>யாவர்+. Each and every person; எவரும். யாவரு மறிவரியாய் (திருவாச, 20, 3). |
| யாவள் | yāvaḷ interrog. pron. Fem. of யாவன் [K. yāvaḷu.] Who, which woman; எவள் யாவளோ வெம் மறையாதீமே (ஐங்குறு. 370). |
| யாவன் | yāvaṉ interrog. prou. <>யா2. [K. yāvanu.] Who, which man; எவன். யாவனோ வொருவ னென்றாள் (கம்பரா. உலாவியர். 11) . |
| யாவனம் | yāvaṉam n. cf. யவனம். A land cess; நிலவரிவகை . (G. Tn. D. I, 227.) |
| யாவும் | yā-v-um n. <> யா2+. [K. yāvavu.] All, whole; எல்லாம். (சூடா). |
| யாவை | yāvai interrog. pron. <>id. Which things, what ; எவை. |
| யாவையும் | yāvai-y-um n. <>யாவை+. See யாவும். . |
| யாழ் | yāḻ n. perh. யா-. 1. Stringed musical instruments, of which there are four kinds, viz., pēri-yāḻ, cakōṭa-yāḻ, makara-yāḻ, ceṅkōṭṭi-yāḻ; பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் என்ற நால்வகை வீணைக்கருவி. (சிலப். 3, 26.) (பிங்.) 2. Gemini of the zodiac; 3. The first nakṣatra. 4. The sixth nakṣatra. 5. (Mus.) Melody-type; 6. Owl; |
| யாழ்க்கரணம் | yāḻ-k-karaṇam n. <>யாழ்+. Movement of the hands in playing the lute; யாழ்வாசினைக்குரிய செய்கை. பண்ணியாழ்க்கரணமும் (மணி. 2, 20). |
| யாழ்செய் - தல் | yāḻ-cey- v. intr. <>id+. To sing; to make music; பாடுதல். தேனின மலங்கலுண் டியாழ்செயும் (சீவக. 1012). |
| யாழ்த்தண்டு | yāḻ-t-taṇṭu n. <>id.+. Neck of the lute; வீணாதண்டம். |
| யாழ்த்திறம் | yāḻ-t-tiṟam n. <>id.+. 1. (Mus.) Secondary melody-type. See திறம்1, 4. குறிஞ்சி யாழ்த்திறம். (பிங்.) 2. (Mus.) Primary melody-type; |
| யாழ்தரித்தாள் | yāḻ-tarittāḷ n. <>id.+தரி-. Pārvatī; பார்வதிதேவி. (நாமதீப. 22). |
