Word |
English & Tamil Meaning |
|---|---|
| யாழ்ப்பாணநாயனார் | yāḻppāṇa-nāyaṉār n. A blind minstrel of the Chōla country, who is said to have been favoured by a Singhalese kind and obtaining possession of Jaffna settled there a colony of Tamil people; ஈழதேசத்தரசனிடமிருந்து யாழ்ப்பாண நாட்டைப் பெற்றுத் தமிழர்களைக் குடியேற்றியவராகச் சொல்லப்படுபவரும் அந்தகருமான சோழநாட்டு இசைப்புலவர். (W.) |
| யாழ்ப்பாணம் | yāḻppāṇam n. Jaffna, a province in the north of Ceylon, inhabited by a colony of Tamils; இலங்கையின் வடபாலுள்ளதும் தமிழராற் குடியேறப்பெற்றதுமான நாடு. |
| யாழ்ப்பாணர் | yāḻ-p-pāṇar n. <>யாழ்+. An ancient caste of lute-players; யாழ்வாசினையில் வல்ல பாணர்வகையார். (பு. வெ. 9, 19, கொளு.) |
| யாழ்ப்பாணி | yāḻppāṇi n. <>யாழ்ப்பாணம். Native of Jaffna; யாழ்ப்பாணநாட்டான். |
| யாழ்பதங்காளி | yāḻpataṅkāḷi n. prob. யாழ். (Mus.) A secondary melody-type of the cevvaḻi class; செவ்வழியாழ்த்திறத் தொன்று. (பிங்.) |
| யாழ்முரி | yāḻ-muri n. <>id.+முரி-. A tune sung by Saint Tiru-āṉa-campantar, as one which could not be played on the yāḻ; திருஞானசம்பந்தசுவாமிகளால் யாழிலடங்காத இசையையுடையதாகப் பாடப்பட்ட பண்வகை. |
| யாழ்முனிவன் | yāḻ-muṉivaṉ n. <>id.+. The sage Nārada; நாரதர். பாடல் யாழ்முனிவன் (பாகவத. 10, ஸ்ரீ நாரதர். 7) . |
| யாழ்வல்லோர் | yāḻ-vallōr n. <>id.+. 1. Skilful players on the lute; வீணைவல்லோர். 2. Gandharvas, the heavenly choristers; |
| யாழ்வாசித்தல் | yāḻ-vācittal n. <>id.+வாசி-. Playing the lute, a women's accomplishment, one of five kucala-vittai, q.v.; குசலவித்தை யைந்தனுள் ஒன்றான யாழ்வாசினை. |
| யாழ்வாசினை | yāḻ-vāciṉai n. <>id.+. Playing the lute; வீணைவாசிக்கை. (சீவக. 660, உரை.) |
| யாழ | yāḻa part. Expletive of the second person; ஒரு முன்னிலையசைச்சொல். யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் (கலித். 18). |
| யாழல் | yāḻal n. cf. ஆழல். White ant; கறையான். (யாழ். அக.) |
| யாழாசிரியன் | yāḻ-āciriyaṉ n. <>யாழ்+. Instructor in lute-playing; வீணை கற்பிப்பவன். |
| யாழோர் | yāḻōr n. <>id. 1. See யாழ்வல்லோர், 1. . 2. See யாழ்வல்லோர், 2. (பிங்.) |
| யாழோர்கூட்டம் | yāḻōr-kūṭṭam n. <> யாழோர்+. A form of marriage. See காந்தருவம், 1. (இறை. 1, பக். 22.) |
| யாழோர்மணவினை | yāḻōr-maṇa-viṉai n. <>id.+. See யாழோர்க்கூட்டம். யாழோர் மணவினைக் கொத்தனளென்றே (மணி. 22, 86). . |
| யாளவரி | yāḷa-vari n. <>vyāḷa+. The portion of a temple-structure where the figures of yāḷi are set in a row; யாளியுருவங்கள் வரிசையாக அமைக்கப்பெற்ற கோயிற்கட்டிடப்பகுதி. |
| யாளி | yāḷi n. <>vyāḷa. [K. yāḷi.] 1. A mythological lion-faced animal with elephantine proboscis and tusks; யானையின் தந்தமும் துதிக்கையுஞ் சிங்கத்தின் முகமுமுடையதாகக் கருதப்படும் மிருகம். உழுவையும் யாளியு முளியுமும் (குறிஞ்சிப். 252). 2. Lion; 3. Leo of the zodiac; 4. See யாளிப்பட்டை. (யாழ். அக.) 5. Elephant; |
| யாளிக்கால் | yāḷi-k-kāl n. <>யாளி+கால்1. Leg of stand, etc., shaped like a yāḷi; யாளி வடிவிற்செய்த பாதம். (S. I. I. II, 5.) |
| யாளிக்கூடை | yāḷi-k-kūṭai n. <>id.+. See யாளிப்பட்டை. Loc. . |
| யாளிப்பட்டை | yāḷi-p-paṭṭai n. prob. id.+. A shallow vessel for throwing water to wet the sail of a craft or for ladling out bilgewater; இறைகூடைவகை. (W.) |
| யாளிமுகம் | yāḷi-mukam n. <>id.+. Ornamental pendant or clasp of jewels, shaped like the face of a yāḷi; யாளியின் முகம்போல அணிகளில் அமைக்கப்பட்ட முகப்பு முதலியன. |
| யாளியானை | yāḷi-yāṉai n. <>id.+. See யாளி, 1. (யாழ். அக.) . |
| யாளியூர்தி | yāḷi-y-ūrti n. <>id.+. Kāḷi, as riding on a yāḷi; [யாளியை வாகனமாக வுடையவள்] காளி. (அரிச். பு. பாயி. 9.) (பிங்.) |
| யாளிலலாடம் | yāḷi-lalāṭam n. <>id.+ lalāṭa. The capital of a pillar, shaped like a yāḷi; யாளியுருவமைந்த தூணின்நெற்றி. |
| யாளிவிரை | yāḷivirai n. Linseed. See ஆளிவிதை. |
| யாற்றுநீர் | yāṟṟu-nīr n. <>யாறு+நீர்1. (Pros.) A mode of construing a verse in which the words are taken in their order without any transposition to yield the intended meaning, one of the eight poruḷ-kōḷ, q.v.; எண்வகைப்பொருள்கோளில் சொற்களை முன்பின்னாக மாற்றாமல் நேராகவே பொருள்கொள்ளுமுறை. (நன். உரை, 412.) |
