Word |
English & Tamil Meaning |
|---|---|
| யோக்கியாயோக்கியம் | yōkkiyāyōkkiyam n. <>id.+ayōgya. Worthiness and unworthiness; தகுதிப்பாடும் தகுதிப்பாடின்னையும். (W.) |
| யோகக்கட்டு | yōka-k-kaṭṭu n. <>யோகம்+. Sitting cross-legged on the hams and binding the folded legs with the body by means of a strap; இருகால்களையும் மாறி மடக்கி அக்கால்களை முதுகோடு சேர்த்து வாரினாற் கட்டுகை (சங். அக.) |
| யோகக்காட்சி | yōka-k-kāṭci n. <>id.+. (Log.) Yogic perception of the soul, transcending the limitations of time and place; ஆன்மாயோகசமாதியால் காலதேசங்களாற் கட்டுக்குட்படாது அறியும் அறிவு. (சி. சி. அளவை, 4.) |
| யோகக்காரன் | yōka-k-kāraṉ n. <>id.+. See யோகவான். Colloq. . |
| யோககுண்டலினி | yōka-kuṇṭaliṉi n. <>Yōga-kuṇdalinī. An Upaniṣad, one of 108; நூற்றேட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| யோகசத்தி | yōka-catti n. Sal ammoniac. See நவச்சாரம். (சங். அக.) |
| யோகசம் | yōkacam n. <>Yōga-ja. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; சிவாகம் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 331, உரை.) |
| யோகசமாதி | yōka-camāti n. <>yōga+. A yogic contemplation in which the soul be comes detached from the body and the mind; ஆன்மா உடலையும் மனத்தையும் விட்டுப் பிரிந்துநிற்கும் யோகநிலை. (திருப்பு. 341). |
| யோகசரன் | yōka-caraṉ n. <>Yōga-cara. Hanumān; அனுமான். (யாழ்.அக.) |
| யோகசாத்திரம் | yōka-cāttiram n. <>yōga+. Yoga philosophy, one of aṟupattunālukalai, q.v.; அறுபதுநாலுகலையுள் யோகத்தைப் பற்றிக் கூறும் கலை. (W.) |
| யோகசாதனம் | yōka-cātaṉam n. <>id+sādhana. The practice of yoga; யோகப்பயிற்சி. |
| யோகசாதனை | yōka-cātaṉai n. <>id.+. See யோகசாதனம். மேன்மேலும் யோகசாதனை விளைப்பர் (அறப். சத. 54). . |
| யோகசாரணம் | yōkacāraṇam n. See யோகசாரம், 2. (W.) . |
| யோகசாரன் | yōkacāraṉ n. See யோகாசாரன். (சி. சி.பர. யோகா. 1, உரை.) . |
| யோகசிகை | yōkacikai n. <>Yōgašikhā. An Upaniṣhad, one of 108; நூற்றேட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| யோகசித்தி | yōka-citti n. <>yōga+siddhi. Power attained by the practice of yoga; யோகஞ்செய்து பெற்ற பேறு. |
| யோகசூடாமணி | yōka-cūṭāmaṇi n. <>Yōga-cūdāmaṇi. An Upaniṣhad, one of 108; நூற்றேட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| யோகசேமம் | yōka-cēmam n. <>yōga+. See யோகக்ஷேமம். (யாழ். அக.) . |
| யோகசைவம் | yōka-caivam n. <>id.+. (šaiva) A šaiva system under which the initiate practises aṣṭāṅka-yōkam and obtains aṣṭa-mā-citti, one of 16 caivam, q.v.; சைவம் பதினாறனுள் தீட்சைபெற்றவன் அட்டாங்கயோகம் பயின்று அட்டமாசித்தி பெறுதலைக் கூறுஞ் சமயம். (அபி. சிந்.) |
| யோகட்சேமம் | yōkaṭcēmam n. See யோகக்ஷேமம். (W.) . |
| யோகதண்டம் | yōka-taṇṭam n. <>yōga+daṇda. Staff of a yogi; யோகிகள் கைக்கொள்ளுங்கோல். (W.) |
| யோகதத்துவம் | yōka-tattuvam n. <>Yōga-tattva. An Upaniṣhad, one of 108; நூற்றேட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| யோகதக்ஷிணாமூர்த்தம் | yōka-takṣiṇāmūrttam n. <>yōga+. A form of Dakṣiṇā-mūrti; தக்ஷிணாமூர்த்தியின் மூர்த்தங்களுள் ஒன்று. (அபி. சிந்.) |
| யோகதீக்கை | yōka-tikkai n. See யோகதீட்சை, 1. (சி. சி. 8, 3, மறைஞா.) . |
| யோகதீட்சை | yōka-tīṭcai n. <>yōga+. 1. (šaiva.) A mode of initiation in which the teacher, by yogic power, enters the body of his disciple, takes hold of his soul and joins it to the feet of šiva; யோகமார்க்கத்தால் குரு சீடனது உடலுட்பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிரகித்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பிக்கும் தீட்சைவகை. 2. (šaiva.) A mode of initiationin which the teacher teaches his disciple how to practise nirātāra-yōkam, one of seven tīṭcai, q.v.; |
| யோகநிட்டை | yōka-niṭṭai n. <>id.+. See யோகநிஷ்டை. (தக்கயாகப். 95, உரை.) . |
| யோகநித்திரை | yōka-nittirai n. <>id.+. A state of meditation which admits of the full exercise of one's mental powers, the body remaining inactive as in sleep; உறங்குவதுபோன்றிருந்தும் அறிவுற்றிருக்கும் யோகநிலை. (தக்கயாகப். 148, உரை.) |
