Word |
English & Tamil Meaning |
|---|---|
| லபக்கெனல் | lapakkeṉal n. cf. U. lapak. Onom. expr. signifying (a) suddenness; விரைவுக்குறிப்பு. (b) gulping; |
| லபி - த்தல் | lapi- 11 v. <>labh. intr. To be gained, obtained; to accrue; to succeed, come to a successful issue; சித்தித்தல். காணரிய பெரியோர்க டெரிசனம் லபிப்பதே கண்ணிணைகள் செய்புண்ணியம் (அறப்.சத.76).--tr. To obtain; |
| லபோலபோபண்டிகை | lapō-lapō-paṇṭi-kai n. <>லபோலபோவெனல்+. The spring festival in honour of Kāma, as the occasion in which the beating of the open mouth with the palm is a marked feature; [அகங்கையால் வாயிலடித்துக்கொள்ளும் திருவிழா] காமன்பண்டிகை. Loc. |
| லபோலபோவெனல் | lapō-lapō-v-eṉal n. Expr. of beating the open mouth with the palm of the hand on account of sorrow; திறந்துள்ளவாயில் துக்கங் காரணமாகக் கையால் அடித்துகொள்ளுதற் குறிப்பு. |
| லம்பாடி | lampāṭi n. [T. lambādi K. lambāṇi.] 1. A wandering caste; அலைந்து திரியும் ஒரு சாதி. 2. Vagrant; 3. A breed of cattle; |
| லம்பு | lampu n. <>வம்பு. Trouble; தொந்தரவு. (C. G.) |
| லம்பு - தல் | lampu- 5 v. intr. prob. அலம்பு-. cf. நெம்பு-. To be unsteady; to shake; அசைதல். |
| லயம் | layam n. <>laya. See இலயம். ஒன்றோடொன்றாகவே பற்றிலயமாம் போதினில் (தாயு. சித்தர். 3). . |
| லயாவத்தை | layāvattai n. <>id.+ avasthā. (šaiva.) Stage of involution of the universe; stage of absorption of the universe by the Supreme Being; பிரபஞ்சத்தை ஒடுக்குநிலை. (சி.போ.பாக்.பக்.25.) |
| லயி - த்தல் | layi- 11 v. intr. See இலயி-. . |
| லலனாமணி | lalaṉā-maṇi n. <>lalanā+. See லலனை. . |
| லலனை | lalaṉai n. <>lalanā. Woman; பெண். |
| லலாடம் | lalāṭam n. <>lalāṭa. 1. Forehead; நெற்றி. 2. A part of the crown; |
| லலாடலிபி | lalāṭa-lipi n. <>id.+ lipi. Hand-writing of Fate; தலையெழுத்து. |
| லலிதாஸஹஸ்ரநாமம் | lalitā-sahasra-nāmam n. <>Lalitā + sahasranāma. The thousand holy names of the Goddess Pārvatī; உமாதேவியின் ஆயிரந்திருநாமக்கோவை. (தக்கயாகப், 76, விசேடக்.) |
| லலிதை | lalitai n. <>lalitā. 1. Pārvatī; உமை. 2. (Mus.) A specific melody-type; |
| லவ்வாலவ்வா | lavvā-lavvā n. See லவாலவா. Loc. . |
| லவக்குலவக்கெனல் | lavakku-lavakkeṉal n. cf. லபக்கெனல். Onom. expr. signifying (a) a galloping sound; ஒட்டக்குறிப்பு: (b) gobbling in eating; |
| லவங்கம் | lavaṅkam n. <>lavaṅga. See இலவங்கம். . |
| லவடா | lavaṭā n. <>Hind. laurā. Membrum virile; ஆண்குறி. |
| லவண்டி | lavaṇṭi n. <>Hind. lauṇdī. See லண்டி. . |
| லவணசமுத்திரம் | lavaṇa-camuttiram n. <>lavaṇa+. Sea of salt water. See உப்புக்கடல். அமிர்து கடைந்தது லவண சமுத்திரத்தென உணர்க (தக்கயாகப். 284, உரை). |
| லவணம் | lavaṇam. n. <>lavaṇa. Salt; உப்பு. |
| லவம் | lavam n. <>lava. 1. Hair of cow's tail; பசுவின் வால்மயிர். குசலவங்களாற் றுடைத்துக் குறிக்கொண்டார்கள். (உத்தரரா. இலவ. 75). 2. (Mus.) A variety of kālam. 3. Little; small particle; |
| லவலேசம் | lava-lēcam n. <>lava + lēša. Smallest degree; சிற்றளவு. நிலைகாணோம் லவலேசம். (இராமநா. ஆரணிய. 3). |
| லவாடி | lavāṭi n. Prostitute; வேசி. (W.) |
| லவாலவா | lavā-lavā n. Children's game of ball, accompanied by singing lavā-lavā; லவாலவா என்று பாடிக்கொண்டு பந்தடிக்கும் சிறுவர் விளையட்டு. |
| லவாலவாவெனல் | lavā-lavā-v-eṉal n. Onom. expr. signifying (a) being distressed or knocked about in life; அவஸ்தைப்படுதற்குறிப்பு: 2. (b) crying in sorrow; |
