Word |
English & Tamil Meaning |
|---|---|
| லொத்துகத்தோல் | lottuka-t-tōl n.<>லோத்துகம்+. Bark of lodhra tree; வெள்ளிலத்தியின் பட்டை. (தைலவ. தைல.) |
| லொத்துலொத்தெனல் | lottu-lotteṉal n. Onom. expr. of (a) Beating hard, giving repeated blows; நையப்புடைத்தற்குறிப்பு. Loc.: (b) hollow sound; |
| லொள்ளெனல் | loḷḷeṉal n. Onom. expr. of dog's bark ; நாய் குரைத்தற்குறிப்பு. |
| லொங்கு | losku n. Almost nothing; nothingness; ஒன்றுமின்மை . |
| லோ | lō. . The compound of ல் and ஓ. . |
| லோக்கியம் | lōkkiyam n. <>lōkya. See லௌகீகம், 1. சகல லோக்கியமே தானாளுறு மசுரபார்த்திபனேடே (திருப்பு.1080). . |
| லோககண்டகன் | lōka-kaṇṭakaṉ n. <>lōka+kaṇṭaka. Very troublesome or wicked man, as a thorn afflicting the world; [உலகத்துக்கு முட்போன்றவன்.] மிகக்கொடியோன். Colloq. |
| லோககதி | lōka-kati n. <>id.+. Way of the world; உலக நடைமுறை. |
| லோககர்த்தா | lōka-kartta n. <>id.+. Lord of the world ; உலகத்துக்கு முதல்வன். |
| லோகசஞ்சாரம் | lōka-cacāram n. <>id.+. 1. Travelling in different countries of the world; பலதேசங்களில் யாத்திரை செய்கை. 2. Business outside one's house; outwork; |
| லோகசஞ்சாரி | lōka-cacāri n. <>id.+. Traveller in many lands; பல தேசங்களில் யாத்திரை செய்வோன். |
| லோகசாக்ஷி | lōka-cākṣi n. <>id.+. God, as the Universal Witness; [யாவுங்காணுஞ் சான்று] கடவுள். |
| லோகசிந்தூரம் | lōka-cintūram n. <>lōha+. Hydrated peroxide of iron, Ferrugo; அயச்சிந்தூரம். (இங். வை.) |
| லோகத்திரயம் | lōka-t-tirayam n. <>lōka+. The three worlds. See மூவுலகு. |
| லோகதருமிணி | lōka-tarumiṇi n. <>id.+. dharmiṇī. (šaiva.) A mode of initiation. See உலோகதருமிணி. |
| லோகதன்மணி | lōka-taṉmaṇi n. <>id.+. id.(šaiva.) A mode of initiation. See உலோ தருமிணி. (சி. சி. 8, 5, மறைஞா.) |
| லோகப்பிரசித்தம் | lōka-p-piracittam n. <>id.+. That which is universally known; உலகத்தாரால் நன்கறியப்பட்டது. |
| லோகபத்ததி | lōka-pattati n. <>id.+. See லோககதி. . |
| லோகபாலகர் | lōka-pālakar n. <>lōkapālaka. 1. See லோகபாலர், 1. அட்ட லோக பாலகரே (தக்கயாகப். 468). . 2. See லோகபாலகர், 2. |
| லோகபாலர் | lōka-pālar n. <>lōka-pāla. 1. Regents of the eight directions. See உலோகபாலர். 2. Kings; |
| லோகம் 1 | lōkam n. <>lōka. World. See உலகம். எல்லா லோகங்களும் இவருடைய (தக்க யாகப். 38, உரை). |
| லோகம் 2 | lōkam n. <>lōha. Metal. See உலோகம்2. |
| லோகமரியாதை | lōka-mariyātai n. <>lōka+. Customs and manners of a country; உலகவழக்கம். |
| லோகமாதா | lōka-mātā n. <>id.+ mātr. 1. See உலகமாதா , 1, 2. . 2. Lakṣmī; |
| லோகயாத்திரை | lōka-yāttirai n. <>id.+. See லோககதி. இது ஒரு லோகயாத்திரை (ஈடு, 4, 9, 6). . |
| லோகரஞ்சனம் | lōka-racaṉam n. <>id.+. That which is popular or pleasing to the world ; உலகிற்கு மகிழ்ச்சிதருவது. |
| லோகரட்சை | lōka-raṭcai n. <>id.+. Protection of the world; உலகத்தைக் காக்கை. லோகராட்சையுந் தனுர்வேத வில்வலியும் (தக்கயாகப். 468, உரை). |
| லோகரக்ஷகன் | lōka-rakṣakaṉ n. <>id.+. Saviour of the world; உலகத்தைக் காப்போன். |
| லோகரூடம் | lōka-rūṭam n. <>id.+ rūdha. 1. That which is famous throughout the land; தேசமெங்கும் பிரசித்தமானது. 2. See லோகமரியாதை . |
| லோகவிருத்தாந்தம் | lōka-viruttāntam n. <>id.+. 1. See லோகாசாரம். . 2. Rumour; |
| லோகவேடணை | lōka-v-ēṭaṇai n. <>id.+. See உலகவேடணை. (நாமதீப. 576.) . |
| லோகாக்கிரசித்தர் | lōkākkira-cittar n. prob. id.+ agra+siddha. A superior class of celestials; தேவருட்சிறந்த ஒருசாரர். (தக்கயாகப். 352, உரை.) |
