Word |
English & Tamil Meaning |
|---|---|
| வக்கணி 1 - த்தல் | vakkaṇi- 11 v. tr. <>வக்கணம்1. [T. vakkaṇiṇcu K. vakkaṇišu.] To expound in detail; விவரித்துரைத்தல். புராணஞ் சுருதிப்பொருள் வக்கணிப்பவன் (மேருமந். 244). |
| வக்கணி 2 - த்தல் | vakkaṇi- 11 v. intr. See வக்கிரி-, 3. Loc. . |
| வக்கணை 1 | vakkaṇai n. [K. vakkaṇe.] 1. Formal portion of a letter or other document; honorific superscription in a letter; கடிதம் முதலியவற்றின் முகப்புவாசகம். (நாமதீப. 654.) 2. Words of courtesy; 3. Flowery or rhetorical speech or statement; 4. See வக்கணம்1, 2, 3, 4, 5, 7. (யாழ். அக.) 5. Skilful talk; |
| வக்கணை 2 | vakkaṇai n. 1. Wight's Indian nettle. See மலைப்புன்கு. (L.) 2. Mottled ebony, m. tr., Diospyros montana; 3. Yellow wood ebony, m. tr., Diospyros chloroxylon; |
| வக்கணை 3 | vakkaṇai n. See வக்கணம்2. (யாழ். அக.) . |
| வக்கம்பிடி - த்தல் | vakkam-piṭi- v. intr. prob. வெக்கை+. To foment; ஒற்றடமிடுதல். |
| வக்கரன் | vakkaraṉ n. <>vakra-danta. See வக்கிரன். வக்கரனைக் கொன்றான் வடிவு (திவ். இயற். மூன்றாந். 21). . |
| வக்கரனை | vakkaraṉai n. cf. வக்காணம். (Mus.) Manipulating the flute so as to produce all melody-types on its six stops; எல்லா இராகங்களும் குழலின் ஆறு துவாரங்களாலேயே உண்டாகும் படி விரல்களால் சமஞ்செய்து சோதிக்கை. வைத்த துளை யாராய்ச்சி வக்கரனைவழிபோக்கி யொத்தநிலையுணர்ந்ததற்பின் (பெரியபு. ஆனாய. 24). (செந். vi. 215.) |
| வக்கரி - த்தல் | vakkari- 11 v. intr. See வக்கிரி-. வக்கரித்தால் நீவாரா வண்மையென்ன (கொண்டல்விடு. 8). . |
| வக்கரை 1 | vakkarai n. 1. Wooden ridge-piece to hold the ropes that tie down the thatch; tie-piece; வரிந்துகட்டும் முகட்டுக்கட்டை. 2. Stirrup. |
| வக்கரை 2 | vakkarai n. <>பற்கறை. Artificial blackness of the teeth; பற்கறை. (W.) |
| வக்கா 1 | vakkā n. <>baka. White stork, Ardea nivea; கொக்குவகை. வக்காவு நாரையுங் கொக்கும் படுக்கவே (குற்றா. குற. 93, 2). |
| வக்கா 2 | vakkā n. A kind of cockle-shell; சிப்பிவகை. வக்காவின் மணிபூண்டு (குற்றா. குற. 79). |
| வக்காணம் | vakkāṇam n. prob. vargaṇā. [K. vakkāṇa.] (Mus.) Elaboration of a tune; ஆலாபனம். மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து (சிலப். 3, 148). |
| வக்காணி - த்தல் | vakkāṇi- 11 v. prob. vyākhyāna. [T. vakkaṇincu.]-intr. To expound in detail. See வக்கணி1-. நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்காணித்தறிவான் (சோழவமி. 53). --intr. To Carry on disputations; |
| வக்காணிக்குமண்டபம் | vakkāṇikku-maṇṭapam n. <>வக்காணி-+மண்டபம். The hall where disputations on the šāstras are held; சாஸ்திரசம்பந்தமாக வாதம்நிகழும் மண்டபம். (I. M. P. Cg. 1005, 1015.) |
| வக்காப்புல் | vakkā-p-pul n. <>வக்கா2+. A kind of weed; களைவகை. Tj. |
| வக்காமணி | vakkā-maṇi n. <>id.+. Bead of a kind of cockle-shell; சிப்பிமணிவகை. வக்காமணிக்கு வழியற்றவன். |
| வக்காமணிச்செட்டிகள் | vakkāmaṇi-c-ceṭṭikal n. <>வக்காமணி+. Traders dealing in vakkā-maṇi; வக்காமணி வியாபாரஞ்செய்யும் செட்டிவகையினர். (W.) |
| வக்காலத்து | vakkālattu n. <>U. wakālat. (Legal.) Power of attorney given to a lawyer for conducting a case; வியாச்சியம் முதலியன நடத்துவதற்கு வக்கீலுக்குக் கொடுக்கும் அதிகாரபத்திரம். (W.) |
| வக்காலத்துநாமா | vakkālattu-nāmā n. <>id.+. (Legal.) See வக்காலத்து. (W.) . |
| வக்காளி - த்தல் | vakkāḷi- 11 v. intr. To clear up, as the sky; வானம் வெளிவாங்குதல். Tj. |
| வக்கிணி - த்தல் | vakkiṇi- 11 v. intr. See வக்கிரி-, 3. வக்கிணித்தவீடு வாழாது. . |
| வக்கிரக்கண் | vakkira-k-kaṇ n. <>vakra+. Squinting eye; மாறுகண். Colloq. |
| வக்கிரக்கிரீபம் | vakkira-k-kirīpam n. See வக்கிரக்கிரீவம். (யாழ். அக.) . |
| வக்கிரக்கிரீவம் | vakkira-k-kirīvam n. <>vakra+grīva. Camel, as having an arched neck; [வளைந்த கழுத்துடையது] ஒட்டகம். (இலக். அக.) |
| வக்கிரகட்கம் | vakkira-kaṭkam n. <>id.+. Scimitar; வளைந்த கரவாள். (சங். அக.) |
| வக்கிரகண்டகம் | vakkira-kaṇṭakam n. <>id.+. Jujube-tree, as having curved thorns; [வளைந்த முள்ளுடையது] இலந்தை. (சங். அக.) |
