Word |
English & Tamil Meaning |
|---|---|
| வக்கிரோக்தி | vakkirōkti n. <>vakrōkti. (Rhet.) A figure of speech in which a repartee is based on a double entendre; சொன்ன-சொற்களுக்கு வெவ்வேறு பொருள் கொண்டு மறுமொழி யுரைப்பதாகிய அணி. |
| வக்கிரோதயம் | vakkirōtayam n. <>vakra+. (Astron.) Heliacal rising of a planet, while in its retrograde motion; கிரகம் வக்கிரகதியில் உதயமாகை. (பஞ்.) |
| வக்கில் | vakkil, n. See வக்கீல். (W.) . |
| வக்கீல் | vakkīl, n. <>U. Wakīl. 1. Authorized attorney; counsel at law, pleader; நியாயஸ்தலத்தில் பிறர்க்காக வழக்கெடுத்து வாதிப்போன். 2. One who represents the bride in a contract of marriage; |
| வக்கு 1 - தல் | vakku- 5 v. tr. perh. vakṣ. cf. வதக்கு-. To burn, single; to roast; வதக்குதல். கொழுப்பரிந்து . . . வக்குவன வக்குவித்து (பெரியபு. கண்ணப். 145). |
| வக்கு 2 | vakku- n. <>வக்கு-. Being singed or burnt; being roasted; வேகுகை. நெருப்புச்சிந்தலின் வக்கிலாத்திசைகளு மில்லை. (கம்பரா. இராவணன்வதை. 65). |
| வக்கு 3 | vakku n. <>tvac. 1. Skin; தோல். (யாழ். அக.) 2. Contused wound; 3. Water-trough; |
| வக்கு 4 | vakku n. perh. varga. cf. வகை. Means, resources; வழி. அவனுக்குக் கடன் கொடுக்க வக்கில்லை. (C. G.) |
| வக்கு 5 | vakku n. <>Pkt. vakka <>vrkka. 1. Kidney; மூத்திரக்குண்டிக்காய். 2. Testicle; |
| வக்குத்திரிகரணம் | vakkuttirikaraṇam n. Bed; படுக்கை. (W.) |
| வக்குநார் | vakku-nār n. prob. வக்கு3+. 1. Woolly ordure tree, 1. tr., sterculia villosa; மரவகை. 2. Hemp fibre; |
| வக்குரி - த்தல் | vakkuri- 11 v. intr. perh. வக்கு2. To scorch, burn; வேதல். வாயாற் சொல்லில் வாய் வக்குரிக்கும்படி (ஈடு, 9, 9, 2). |
| வக்குவக்கெனல் | vakku-vakkeṉal n. (W.) Onom. expr. of (a) running to exhaustion; களைப்புமேலிட ஒடும் ஒலிகுறிப்பு. நாய் வக்குவக்கென்றோடுகிறது. (b) coughing hard; (c) pounding hard or ramming; |
| வக்தா | vaktā n. <>vaktā nom. sing. of vaktṟ. 1. One who speaks or expounds; எடுத்துச் சொல்லுவோன். 2. Orator |
| வக்திரம் | vaktiram n. <>vaktra. 1. Mouth; வாய். 2. Face, countenance; |
| வக்திருவிவக்ஷை | vaktiru-vivakṣai n. <>vaktr-vivakṣā. Speaker's intention, author's meaning; சொல்லுவான் குறிப்பு. (பி. வி. 26.) |
| வக்து | vaktu n. <>Arab. vaqt. Time; season; opportunity; காலம். Loc. |
| வகச்சல் | vakaccal n. prob. வகை-. A kind of garland; மாலைவகை. திருமாலை வகச்சல் வளையம். (கோயிலொ. 59). |
| வகத்திரம் | vakattiram n. Siris; வாகை. (சங். அக.) |
| வகதி | vakati n. <>vahati. (யாழ். அக.) 1. Bull; எருது. 2. Wind; 3. Friend; |
| வகது | vakatu n. <>vahatu. (யாழ். அக.) 1. Bull; எருது. 2. Traveller; |
| வகந்தம் | vakantam n. <>vahanta. (யாழ். அக.) 1. Wind; காற்று. 2. Child; |
| வகநிசூதனன் | vaka-nicūtaṉaṉ n. <>Baka-niṣūdana. Bhīma, as the slayer of the demon Baka; [பகாசுரனை வதைத்தோன்] வீமன். (யாழ். அக.) |
| வகம் | vakam n. <>vaha. 1. Wind; காற்று. (யாழ். அக.) 2. Path; 3. Horse; 4. Vehicle; |
| வகன் | vakaṉ n. <>Baka. (யாழ். அக.) 1. Kubēra; குபேரன். 2. Baka, an asura or demon; |
| வகாரவுப்பு | vakāra-v-uppu n. <>U. pahār+உப்பு. Rock-salt; கல்லுப்பு. (மூ.அ.) |
| வகாலத்து | vakālattu n. See வக்காலத்து. (W.) . |
| வகி - த்தல் | vaki- 11v. tr. <>vah. To bear, carry, as a load; to undertake, as a responsible work; to maintain, support, as a family; to endure, as fatigue, etc.; தாங்குதல். குடும்ப பாரத்தை வகிக்கிறான். |
| வகிடு | vakiṭu n. <>வகிர். Parting in woman's hair from the crown to the forehead; வகிர்ந்த முன்தலை மயிரின் இடைவெளியொழுங்கு. |
| வகிர் 1 - தல் | vakir- 4 v. tr. 1. cf. bhaj. 1. To slice; to cut in slips; துண்டாக அறுத்தல். (சது). 2. To split; 3. To cleave; to tear open; to rip up; 4. To disentangle; 5. To divide; 6. See வகிரெடு-. |
