Word |
English & Tamil Meaning |
|---|---|
| வங்கணக்காரன் | vaṅkaṇa-k-kāraṉ n. <>வங்கணம்1+. (W.) 1. Intimate friend; உற்ற நண்பன். 2. Paramour; |
| வங்கணக்காரி | vaṅkaṇa-k-kāri n. Fem. of வங்கணக்காரன். See வங்கணத்தி. |
| வங்கணத்தி | vaṅkaṇtti n. Fem. of வங்கணன். 1. Intimate woman-friend; உற்றதோழி. 2. Concubine; |
| வங்கணதூஷணம் | vaṅkaṇa-tūṣaṇam n. <>id.+. Slandering; அவதூறு பண்ணுகை. (யாழ். அக.) |
| வங்கணம் 1 | vaṅkaṇam n. 1. Friendship; நட்பு. நேசமிலா வங்கணத்தி னன்று வலியபகை (தனிப்பா. i, 104, 35.) 2. Love; amour; |
| வங்கணம் 2 | vaṅkaṇam n. <>vaṅkana. 1. Brinjal. See கத்திரி1. (அரு. நி.) 2. Orbicular-leaved caper. 3. Indian kales. |
| வங்கணன் | vaṅkaṇaṉ n. <>வங்கணம்1. See வங்கணக்காரன். (யாழ். அக.) . |
| வங்கத்துக்குவா - தல் [வங்கத்துக்கு வருதல்] | vaṅkattukku-vā- v. intr. prob. வங்கம3¢+. 1. To be put to the test; சோதனைக்குட்படுதல். 2. To be effective; |
| வங்கதோஷம் | vaṅka-tōṣam n. <>vaṅga+. Plumbism; ஈயத்தாலுண்டாம் தோஷம். |
| வங்கநடம் | vaṅkanaṭam n. Borax; வெண்காரம். (மூ. அ.) |
| வங்கநீர் | vaṅka-nīr n. <>வங்கம்2+. Sea; கடல். வங்கநீர் வரைப்பெலாம். (சூளா. இரத. 104). |
| வங்கநீறு | vaṅka-nīṟu n. <>வங்கம்1+. Lead ore; ஈயமணல். (மூ. அ.) |
| வங்கப்பற்று | vaṅka-p-paṟṟu n. <>id.+. Solder for metals; உலோகங்களை இணைக்கவுதவும் பற்று. |
| வங்கப்பாண்டி | vaṅka-p-pāṇṭi n. <>வங்கம்4+. A kind of vehicle. See பள்ளியோடவையம். வங்கப்பாண்டியிற் றிண்டே ரூரவும் (பரிபா, 20, 16). |
| வங்கப்பாவை | vaṅka-p-pāvai n. prob. வங்கம்1+. A drug; மருந்துச்சரக்குவகை. வங்கப்பாவையோ டின்ன மருத்துறுப் பெல்லாம் (பெருங்மகத.17, 150). |
| வங்கபற்பம் | vaṅka-paṟpam n. <>id.+. See வங்கபஸ்மம். (யாழ். அக.) . |
| வங்கபஸ்மம் | vaṅka-pasmam n. <>vaṅga+bhasman. Carbonate of lead, Ceruse; ஈயத்தின் பற்பம். |
| வங்கம் 1 | vaṅkam n. <>vaṅga. 1. Lead; purified lead; ஈயம். (நாமதீப. 378.) வங்கத்திற் செம்பொனுந் தெரிப்பாம் (கந்தபு. மார்க். 123). 2. Tin; 3. Zinc; 4. cf. vaṅga-jīvana. Silver; 5. Bengal, one of 56 tēcam, q.v.; 6. The Bengali language, one of patiṉeṇ-moḻi, q.v.; 7. Indian calosanthes. 8. Tender wild jack. 9. Brinjal. 10. A kind of brinjal. |
| வங்கம் 2 | vaṅkam n. <>bhaṅga. Wave; அலை. |
| வங்கம் 3 | vaṅkam n.<>vaṅka. 1. Bend of a river; ஆற்றுவளைவு. (யாழ். அக.) 2. Curve; 3. Idea; |
| வங்கம் 4 | vaṅkam n. prob. vahya. 1. Ship, as moving swiftly; மரக்கலம். வாலிதை யெடுத்தவளிதரு வங்கம் (மதுரைக். 536). 2. A kind of vehicle. |
| வங்கம் 5 | vaṅkam n. of. வெங்கம். Poverty; வறுமை. |
| வங்கம்விளையுங்கல் | vaṅkam-viḷaiyuṅ-kal n. <>வங்கம்1 + விளை-+. White kunker; வெள்ளைச்சுக்கான்கல். (யாழ். அக.) |
| வங்கமணல் | vaṅka-maṇal n. <>id.+. See வங்கநீறு. (யாழ். அக.) . |
| வங்கர் 1 | vaṅkar n. <>vaṅga. People of Bengal; வங்கதேயத்தார். வங்கர் மாளவர் (கம்பரா. உலாவி. 47). |
| வங்கர் 2 | vaṅkar n. <>வங்கம்2. Mariners; நெய்தனிலமாக்கள். |
| வங்கவுப்பு | vaṅka-v-uppu n. <>வங்கம்1+. Sugar of lead; உப்புவகை. (இங். வை.) |
| வங்கன் 1 | vaṅkaṉ n. <>vaṅka. Outcaste; சண்டாளன். (சூடா.) |
| வங்கன் 2 | vaṅkaṉ n. <>வங்கம்5. Poor man; தரித்திரன். Colloq. |
| வங்கனம் | vaṅkaṉam n. See வங்கணம், 3. (மலை.) . |
| வங்கா 1 | vaṅkā n. of. வக்கா. A bird; பறவைவகை. வங்காக் கடந்த செங்காற் பேடை (குறுந். 151). (தொல். எழுத். 225, உரை.) |
