Word |
English & Tamil Meaning |
|---|---|
| வங்கா 2 | vaṅkā n.<>U bāṅkā. A long winding trumpet, ram's horn; ஊதுகொம்புவகை. (W.) |
| வங்காரக்கண்டி | vaṅkāra-k-kaṇṭi n. prob. வங்காரம்+. A kind of saree; ஒருவகைச் சேலை. |
| வங்காரம் | vaṅkāram n. <>Pkt. baṅgār <>bhrṅgāra. [T. baṅgāramu K. baṅgāra.] 1. Gold; பொன். வங்கார மார்பிலணி தார் (திருப்பு. 748). 2. Ingot, mass of metallic ore; 3. Good condition; |
| வங்காரவச்சி | vaṅkāravacci n. prod. வங்காரம். West Indian samphire purslane, a herb eaten by poor people, Sesuvium portula castrum; ஒருவகைக் கீரை. தாயுந் தகப்பனுந் தள்ளி விட்டகாலத்தே வாவென்றழைத்த வங்காரவச்சி. (W.) |
| வங்காரவாசி | vaṅkāravāci n. See வங்காரவச்சி. (சங். அக.) . |
| வங்காளக்குடாக்கடல் | vaṅkāḷa-k-kuṭā-k-kaṭal n.<>வங்காளம்+. The Bay of Bengal; இந்தியா பர்மா தேசங்கட்கு இடைப்பட்ட குடாக்கடல். |
| வங்காளத்திப்பலி | vaṅkāḷa-t-tippali n. <>id.+. A species of long pepper, as from Bengal; திப்பலிவகை. (மூ. அ.) |
| வங்காளப்பச்சை | vaṅkāḷa-p-paccai n. <>U. zangar+ 1. Verdigris, sub-acetate of copper; ஒருவகைச் சாயவர்ணம். (M. M.) 2. A herb; |
| வங்காளம் 1 | vaṅkāḷam n.<>vaṅga. See வங்கம்1 5, 6. தங்காத சாரல் வங்காள தேசமும் (S. I. I. i, 98). |
| வங்காளம் 2 | vaṅkāḷam n. <>vaṅgāla. (Mus.) A melody-type; இராகவகை. (சது.) |
| வங்காளமஞ்சள் | vaṅkāḷa-macaḷ n. <>வங்காளம்1+. A kind of turmeric, used by women when bathing; மகளிர் பூசிக்குளிக்கும் மஞ்சள்வகை. |
| வங்காளவாத்து | vaṅkāḷa-vāttu n. prob. id.+. A kind of goose; வாத்துவகை. Madr. |
| வங்காளி | vaṅkāḷi n.<>id. 1. Bengali; வங்காளதேசத்தான். 2. See வங்கம்,6. 3. Plantain; |
| வங்கான் | vaṅkāṉ n. Sundry jewellery; சில்லறை ஆபரணம். வங்கானுந் தொங்கானு மாட்டிக் கிளுகிளுத்து (ஆதியூரவதானி. 64). |
| வங்கி 1 | vaṅki n. perh. bhaṅgin. [T. K. vaṅki Tu. vaggi.] 1. A kind of armlet; ஒருவகைத் தோளணி. 2. A kind of iron hook or curved instrument; |
| வங்கி 2 | vaṅki n. <>வங்கம்1. Bengal paddy, an inferior kind of campā, sown in Cittirai and maturing in five months; சித்திரைமாதத்து விதைக்கப்பெற்று ஜந்துமாதங்களில் விளையும் மட்டமான சம்பா நெல்வகை. |
| வங்கி 3 | vaṅki n. <>E. Bank; பாங்கி. Nāṭ. Cheṭṭi. |
| வங்கி 4 | vaṅki n. prob. அங்கி2. Ceylon leadwort. See கொடுவேலி. (சங். அக.) |
| வங்கிக்காரை | vaṅki-k-kārai n.<>வங்கி1+. A necklet; கழுத்தணிவகை. Loc. |
| வங்கிசம் | vaṅkicam n. <>vamša. [T. vaṅgasamu.] 1.Race, family, lineage, descent; வமிசம். மேலோர் வங்கிசந் தவிர்ந்து கீழ்மரபிற் சேர்ந்ததால் (பிரபோத. 7, 47). 2. See வங்கியம். |
| வங்கிசன் | vaṅkicaṉ n.<>வங்கிசம். 1. Scion; வமிசத்திற் பிறந்தவன். 2. Kinsman; |
| வங்கிநெளிவு | vaṅki-neḷivu n.<>வங்கி1+. A kind of ring; விரலணிவகை. Loc. |
| வங்கியம் | vaṅkiyam n. <>vamša. 1. Bamboo; மூங்கில். (மலை.) 2. Reed pipe; |
| வங்கிவளையல் | vaṅki-vaḷaiyal n. <>வங்கி1+. A kind of bangle; வளையல்வகை. (W.) |
| வங்கிஷம் | vaṅkiṣam n. See வங்கிசம். (யாழ். அக.) . |
| வங்கு | vaṅku n. [K. baṅku, M. vaṅgu.] 1. Orifice, hole, hollow, as in a stone; கல் முதலியவற்றின் அளை. தான் கிடக்கிற வங்குகளினுடைய வாசலிலே முத்துக்களை யீன்றன (திவ். பெரியதி. 3, 4, 2, வ்யா.). 2. Rat-hole; snake-hole; 3. Cave, cavern, hollow; 4. Hollow in a tree; 5. Space between the beams or ribs of a boat; 6. Socket for a mast; 7. Wooden ribs of a ship; 8. Spreading spots on the skin, a disease; 9. Blotches on a mangy dog; 10. Hyena, as spotted; 11. Pollen of the screwpine; |
| வங்குக்கட்டை | vaṅku-k-kaṭṭai n. <>வங்கு+. See வங்குக்கால். (யாழ். அக.) . |
