Word |
English & Tamil Meaning |
|---|---|
| வட்டக்கணக்கன் | vaṭṭa-k-kaṇakkaṉ n. <>id.+. Accountant of a vaṭṭam or group of villages; ஒரு வட்டத்தைச் சேர்ந்த பல கிராமங்களுக்குரிய கணக்கன். Loc. |
| வட்டக்கப்பல் | vaṭṭakkappal. n. A variety of tobacco; புகையிலைவகை. Loc. |
| வட்டக்காய் | vaṭṭakkāy n. <>வட்டம்1+காய்3. (T. vaṭṭakāya.) Testicle; அண்டம். Colloq. |
| வட்டக்காரன் | vaṭṭa-k-kāraṉ n. <>வட்டம்2+காரன்1. Money-changer; வட்டத்துக்குப் பணமாற்றுவோன். (C. G.) |
| வட்டக்கிணறு | vaṭṭa-k-kiṇaṟu n. <>வட்டம்1+. Small, circular well; வட்டாமாக அமைந்த சிறுகிணறு. |
| வட்டக்கிலுகிலுப்பை | vaṭṭa-k-kilukiluppai n. prob. id.+. Rattlewort, blue-flowered, Crotolaria verrucosa; செடிவகை (பதார்த்த.253.) |
| வட்டக்குடில் | vaṭṭa-k-kuṭil n. <>id.+குடில்1. Big hut; பெருங் குடிசை. (யாழ். அக.) |
| வட்டக்குடை | vaṭṭa-k-kuṭai n. <>id.+. State-umbrella; அரசர்க்குரிய குடை. (சீவக. 860, உரை.) |
| வட்டக்கெண்ணை | vaṭṭakkeṇṇai n. Indian lotus croton. See கண்டுபாரங்கி, 2. (Nels.) |
| வட்டக்கைச்சில் | vaṭṭa-k-kaiccil n. <>வட்டம்1+கச்சி2. The lower half of a coconut-shell; தேங்காயின் அடிப்பாதியோடு (யாழ். அக.) |
| வட்டக்கொட்டை | vaṭṭa-k-koṭṭai n. <>id.+. Round pillow; வட்டாமான தலையணை. |
| வட்டக்கோல் | vaṭṭa-k-kōl n. <>id.+கோல்1. See வட்டாகிருதி. (W.) . |
| வட்டக்கோள் | vaṭṭa-k-kōḷ n. <>id.+கோள்1. See வட்டம்1, 2. (சிலப். 10, 102, உரை.) . |
| வட்டகை | vaṭṭakai n. <>id. 1. Area, region; பிரதேசம். ஊர் நாற்காத வட்டகை (சிலப். 5, 133, உரை.) 2. See வட்டம்1, 9, 10. 3. See வட்டகைநிலம். (W.) 4. Small bowl; 5. Metal Cup; |
| வட்டகைநிலம் | vaṭṭakai-nilam n. <>வட்டகை+. Enclosed field; அடைப்புக்கட்டிய நிலம். |
| வட்டகைமணியம் | vaṭṭakai-maṇiyam n. <>id.+. See வட்டமணியம். (W.) . |
| வட்டங்கூட்டு - தல் | vaṭṭaṅ-kūṭṭu-, v. intr. <>வட்டம்1+. To prepare; தயாராதல். Tinn. |
| வட்டச்சீட்டு | vaṭṭa-c-cīṭṭu n. <>வட்டம்2+. A kind of Chit transaction; நிதிச்சீட்டுவகை. |
| வட்டசட்டம் | vaṭṭa-caṭṭam n. <>வட்டம்1+. Regularity, Orderliness; ஒழங்கு. Loc. |
| வட்டஞ்சுற்று - தல் | vaṭṭa-cuṟṟu- v. intr. <>id.+. To go in a circuitous or round about route; சுற்றி வளைந்துசெல்லுதல். வட்டஞ்சுற்றியும் வழியே போ. Nā. |
| வட்டணம் | vaṭṭaṇam n. <>aṭṭana. 1. Shield; பரிசை. இட்ட வட்டணங்கண் மேலெறிந்த வேல் (கலிங். 413). 2. A kind of big shield; |
| வட்டணி - த்தல் | vaṭṭaṇi- 11 v. <>வட்டம்1. (J.) tr. 1. To make round or circular; வட்டமாக்குதல்.--intr. 2. To become round or circular; |
| வட்டணிப்பு | vaṭṭaṇippu n. <>வட்டணி-. Roundness, circularity, rotundity; வட்டமாயிருக்கை. குண்டல மென்று வட்டணிப்பைச் சொல்லவுமாம் (திருவிருத். 57, வ்யா. பக். 318). |
| வட்டணை 1 | vaṭṭaṇai n. cf. வக்கணை1. Flowery speech; learned jargon. See வக்கணை1, 3. வட்டணை பேசுவர் (பதினொ. கோபப்பிர. 85). |
| வட்டணை 2 | vaṭṭaṇai n. prob. vartula. 1. See வட்டம்1, 1. (பிங்.) வாயினூலால் வட்டணைப் பந்தர் செய்த சிலந்தி (தேவா. 507, 2). 2. Globe, ball; 3. Circular course, as of a horse; 4. Moving left and right, as in pugilistic performance; 5. (Nāṭya.) A gesture with both hands. 6. Cymbals; 7. (Mus.) Beating time; 8. Beating; 9. Dashing against; |
| வட்டணை 3 | vaṭṭaṇai n. <>வட்டணம். Shield; கேடகம். மன்னவர்காண வட்டணைவா ளெடுத்து (கல்லா. 48, 8). |
| வட்டணை 4 | vaṭṭaṇai n. <>வட்டம்1+அணை4. Circular bed or cushion; வட்டமான அணை. வட்டணை . . . இரீஇயினாரே (சீவக. 2433). |
| வட்டணையுறுத்து - தல் | vaṭṭaṇai-y-uṟuttu- v. intr. <>வட்டணை2+. (Mus.) To beat time; தாளம்போடுதல். (W.) |
