Word |
English & Tamil Meaning |
|---|---|
| வட்டம் 2 | vaṭṭam n. <>U. baṭṭā. 1. Rate of exchange; money-changer's commision; நாணயமாற்றின் வட்டம். நாணயத்தின் வட்டமென்றும் (பணவிடு. 179). 2. Trade discount; 3. Profit; |
| வட்டம்பண்ணு - தல் | vaṭṭam-paṇṇu- v. tr. <>வட்டம்1+. To recite daily mantras, etc.; மந்திரம் முதலியவற்றை தினசரி செபித்தல். (j.) |
| வட்டம்பிரிதல் | vaṭṭam-pirital n. <>வட்டம்2+. Gaining in exchange; நாணயமாற்றம் முதலியவற்றில் இலாபம் பெருகை. (W.) |
| வட்டம்போடு - தல் | vaṭṭam-pōṭu- v. <>வட்டம்1+. intr. 1. See வட்டமிடு-. (W.) . 2. To spread sheaves of paddy on the threshing-floor for being threshed; 3. See வட்டமிடு. |
| வட்டமடக்கி | vaṭṭam-aṭakki n. <>id.+ மடக்கு-. See வட்டத்திருப்பி. (சங். அக.) . |
| வட்டமணியக்காரன் | vaṭṭamaṇiya-k-kāraṉ n. <>வட்டமணியம்+காரன்1. Headman of a group of villages; நாட்டாண்மைக்காரன். |
| வட்டமணியம் | vaṭṭa-maṇiyam n. <>வட்டம்1+. 1. Office of headman of a circle or group of villages; நாட்டாண்மை. 2. Village headman; |
| வட்டமணை | vaṭṭa-maṇai n. <>id.+மணை1. 1. Circular platform for idols, in a temple; கோயில் முர்த்தங்களை வைப்பதற்குரிய வட்டமான பீடம். 2. Seat offered as a mark of respect; |
| வட்டமணைவேதியை | vaṭṭamaṇai-vēti-yai n. <>வட்டமணை+. See வட்டமணை. Loc. . |
| வட்டமரம் | vaṭṭa-maram n. <>வட்டம்1+. 1. Turning pole of an oil-press; செக்கின் ஆட்டுமரம். 2. A jungle tree; |
| வட்டமறுதி | vaṭṭam-aruti n. <>id.+. Conclusion; close, as of a chit fund; சீட்டு முதலியவற்றின் முடிவு. Colloq. |
| வட்டமிடு - தல் | vaṭṭam-iṭu- v. <>id.+.intr. 1. To hover about, as a hawk; to gyrate; பறவை முதலியன சுற்றிவருதல். 2. To be round or globular; 3. To run in circular rounds, as a horse; 4. To hang about in order to gain an object; |
| வட்டமேசைமகாநாடு | vaṭṭa-mēcai-makā-nāṭu n. <>id.+மேசை+. Round table conference, as of persons sitting in conference round a circular table; தனிப்படக்கூட்டிய ஆலோசனைச்சபை. Mod. |
| வட்டரவு | vaṭṭaravu n. <>id. Circularity; வட்டவடிவு. (j.) |
| வட்டராயசம் | vaṭṭa-rāyacam n. <>id.+. Revenue inspector's clerk; ஒருவகை உத்தியோகஸ்தரின் கீழ்க்குமாஸ்தா. (G. Tp. D. I, 241.) |
| வட்டறவு | vaṭṭaṟavu n. <>வட்டு + அறு1-. Final determination; முடிவாக அறுதியிடுகை (யாழ். அக.) |
| வட்டன் 1 | vaṭṭaṉ n. <>வட்டு. Round person; வட்டுப்போன்ற உடலுடையன். குறுவட்டா நின்னி னிழிந்தோ கூனின் பிறப்பு (கலித். 94, 27). |
| வட்டன் 2 | vaṭṭaṉ part. <>வட்டம்1. Each, every. See தோறும். ஆட்டைவட்டன் முக்குறுணி நெற் பொலிசையாக (S. I. I. ii, 69, 3). . |
| வட்டா | vaṭṭā n. perh. id. Plate, porringer, bowl; வாயகன்ற கலவகை. வட்டாவுந் தாம்பூலமுந்துகிலுந் தாங்கிநிற்ப (சீதக்.). |
| வட்டாகிருதி | vaṭṭākiruti n. <>id.+ஆகிருதி. (W.) 1. Circular shape of form; ellipse or other curvilinear figure; வட்டவடிவு. 2. Periphery of a curvilinear figure; |
| வட்டாட்டு | vaṭṭāṭṭu n. <>வட்டாடு-. Game of dice; வட்டுக்கொண்டு ஆடும் சூதாட்டம். வட்டாட்டாடிடம் பலவுங் கண்டார் (கம்பரா. மிதிலை. 17). |
