Word |
English & Tamil Meaning |
|---|---|
| வட்டியில்லாக்கடன் | vaṭṭi-y-illā-k-kaṭaṉ, n. <>id.+இல் neg.+ஆ6-+. 1. Debt not carrying interest; வட்டியின்றிக் கொடுக்குங் கடன் தொகை. 2. Present made in expectation of a return; |
| வட்டில் | vaṭṭil, n. <>vrtta. cf. வட்டி2. [K. baṭṭalu.] 1. Porringer, platter, plate, cup; கிண்ணம். பொன்வட்டில் பிடித்து (திவ். பெருமாள். 4, 3). 2. Measure of capacity. 3. Clepysydra; a small vessel with holes in the bottom, floating on the water and sinking at the end of a nālikai, being a contrivance for determining time; 4. Quiver for arrows; 5. Basket; 6. Path, way; 7. An item of paraphernalia; 8. Draught-board; 9. Ball of dough, for preparing appaḷam; |
| வட்டிலை | vaṭṭilai, n. <>வடு1+இலை. Caricature plant, m. sh., Graptophyllum hortense; முட்செடிவகை. (M. M. 293.) |
| வட்டிவாசி | vaṭṭi-vāci, n. <>வட்டி3+. 1. Rate of interest; வட்டிவிகிதம். 2. Interest; |
| வட்டிற்பூ | vaṭṭiṟ-pū, n. <>வட்டில்+பூ3. Lotus; தாமரைப்பூ. (சங். அக.) |
| வட்டினி | vaṭṭiṉi, n. Wager, stake in a game; பந்தயப்பொருள். வட்டினி கொடுத்து . . . வட்டாட்டாடிடம் (கம்பரா. மிதிலை. 17). |
| வட்டு | vaṭṭu, n. <>Pkt. vaṭṭa <>vrtta. 1. Small spheroidal pawn, dice, draught; சூதாடு கருவி. கையாடு வட்டிற் றோன்றும் (அகநா. 108). 2. Roundness; 3. Anything round; 4. A water-squirt; 5. A circular piece used in pāṇṭi game; 6. A game-piece; 7. See வட்டில், 9. Loc. 8. Candied sugar; 9. Indian nightshade. 10. The circular piece to which the ribs of an umbrella are joined; 11. Small piece of cloth; |
| வட்டுக்கருப்பட்டி | vaṭṭu-k-karuppaṭṭi, n. <>வட்டு+. Large ball of jaggery; பனாட்டுக்கட்டி. |
| வட்டுக்கருப்புக்கட்டி | vaṭṭu-k-karuppu-k-kaṭṭi, n. <>id.+. See வட்டுக்கருப்பட்டி. (W.) . |
| வட்டுக்காய் | vaṭṭu-k-kāy, n. <>id.+காய்3. Dice; சூதாடுகருவி. |
| வட்டுக்குத்தி | vaṭṭukkutti, n. The part just below the top of a fresh palm leaf; பனைக்குருத்தி னடி. (W.) |
| வட்டுடை | vaṭṭuṭai, n. <>வட்டு+உடை. 1. Cloth tied round the waist and reaching down the knee; முழந்தாளளவாக உடுக்கும் உடை விசேடம். அந்நுண் மருங்கு லிகந்த வட்டுடை (மணி. 3, 122). 2. Garment; |
| வட்டுப்போர் | vaṭṭu-p-pōr, n. <>id.+போர்3¢. Gambling; சூதாட்டம். வட்டுப்போர்கள் பொருதல் அரிய வாமாறு போல (பழமொ. 176, உரை). |
| வட்டுவப்பை | vaṭṭuva-p-pai, n. <>வட்டுவம்+பை4. See வட்டுவம். (W.) . |
| வட்டுவம் | vaṭṭuvam, n. [T. vaṭṭuvamu.] 1.Pouch in which betel leaves, nuts, chunam, tobacco, etc., are kept; வெற்றிலை முதலியன வைக்கும் பை. (W.) 2. Medicine pouch; 3. Pocket inside a pouch or purse; |
| வட்டுறுப்பு | vaṭṭuṟuppu, n. <>வட்டம்1. Exactness, precision, correctness; திருத்தம். (யாழ்.அக.) |
| வட்டெலி | vaṭṭeli, n, perh. id.+எலி1 A species of rat, Mus brunneus; மரவெலி. (W.) |
| வட்டெழுத்து | vaṭṭeḻuttu, n. <>id.+. An ancient Tamil script; ஒருவகைப் பழைய தமிழெழுத்து. (I.M.P.) |
| வட்டை 1 | vaṭṭai, n. <>Pkt. vaṭṭā <>vartman. Way; வழி. வல்லுயிர்தாங்கும் வட்டை வந்தனை (கல்லா. 40, 13). (சூடா.) |
| வட்டை 2 | vaṭṭai, n. <>வட்டம்3. 1.Felloe, rim of a wheel; சக்கரத்தின் மேல் வளைமரம். உருள்கின்ற மணிவட்டை (சிலப்.29, உரைப்பாட்டு மடை). 2. Car, chariot; 3. Stripes on a tiger's body; 4. See வட்டகை, 1. 5. Mountain tamana oil tree. 6. Marote, I.tr., Hydnocarpus wightiana; 7. See வட்டப்பக்கா. Nā. |
