Word |
English & Tamil Meaning |
|---|---|
| வட்டோடு | vaṭṭōṭu, n. <>id.+ஓடு2. Goldsmith's pot for live-coals; தட்டாருடைய தீச்சட்டி. |
| வட்புலி | vaṭ-puli, n. prob. வன்-மை+புலி. Lion; சிங்கம்.(சங்.அக.) |
| வட | vaṭa, adj. See வடக்கத்தி. . |
| வடக்கத்தி | vaṭakkatti, adj. <>வடக்கு. North, northern; வடக்கிற்குரிய. Colloq. |
| வடக்கத்தியான் | vaṭakkattiyāṉ, n. <>வடக்கத்தி. Northerner; வடக்குப்பக்கத்தான். Loc. |
| வடக்கயிறு | vaṭa-k-kayiṟu, n. <>வடம்1+. 1.Large, stout rope or cable, as for drawing a temple-car; தேர் முதலியவற்றை இழக்கும் பெருங்கயிறு. வடக்கயிறு வெண்ணரம்பா (தாயு. சச்சிதா.2.) 2. Cord of the ēr-nāḷi; |
| வடக்கன் | vatakkaṉ n. <>வடக்கு. [M. vadakkan.] 1. See வடக்கத்தியான். . 2. A variety of tobacco; |
| வடக்கிரு - த்தல் | vaṭakkiru-, v. intr. <>id.+. To sit facing north, taking a vow of fasting to death; உயிர்துறக்குந் துணிவுடன் வடக்குநோக்கியிருந்து பிராயோபவேசவிரதத்தை மேற்கொள்ளுதல். புறப்புண்ணாணி வடாக்கிருந் தோனே (புறநா.66, 8). |
| வடக்கு | vaṭakku, n. [T. M. vadakku, K. badugu.] North, the north point of the compass நாற்றிசையு ளொன்று. |
| வடக்குத்திருவீதிப்பிள்ளை | vaṭakku-t-tirvīti-p-piḻḻai, n. <>வடக்கு+. A Vaiṣṇava Acārya who embodied the lectures of Nampiḷḷai on Tiruvāymoli into a commentary named Iṭumuppattāṟāyirappati; நம்பிள்ளை உபந்நியசித்தைத் திருவாய்மொழிக்கு ஈடுமுப்பத்தாறாயிரப்படியென்ற வியாக்கியானமாக எழுதின வைஷ்ணவா சாரியர். வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை... நன்குரைத்த தீடுமுப்பத்தாறாயிரம் (உபதேசரத்.44). |
| வடக்குநோக்கி | vaṭakku-nōkki, n. <>id.+நோக்கு-. Magnetic needle, as always indicating north; காந்தவூசி. (மனோன்.iii, 3, 95.) |
| வடக்குமலையான் | vaṭakku-malayāṉ, n. <>id.+. See வடமலையான், 1. . |
| வடக்குவடக்கா - தல் | vaṭakka-vaṭakkā-, v. intr. <>வடம் 1 + வடம்1+. To become matted, as hair; மயிர் முதலியன சடைபற்றுதல். Loc. |
| வடக்குவாசற்செல்வி | vaṭakku-vācaṟ-celvi, n. <>வடக்கு +வாசல்+. Kāḷi, as presiding at the northern gate of a town of city; [ஊரின் வடபுறத்து எல்லைத் தெய்வம்.] காளி. Loc. |
| வடகம் 1 | vaṭakam, n. <>vaṭaka. A mixture of flour, herbs, spices, etc., made into lumps or balls and dried in the sun; அரைத்தமாவுடன் கறிச்சாமான்கள் சேர்த்துச் சமைத்து வெயிலில் உலர்த்திய சிறிய உருண்டை. |
| வடகம் 2 | vaṭakam, n. perh. vastra. 1. Upper garment; மேலாடை. வடகமுந் துகிலுந்தோடும் (சீவக. 462). 2. A superior kind of cloth; 3. Skin; |
| வடகயிலாயம் | vaṭa-kayilāyam, n. <>வட+. 1. Mt. kailas. See கயிலை. 2. A šiva temple near Pērūwe in the Coimbatore District; |
| வடகயிலை | vaṭa-kayilai, n. <>id.+. Mt. kailas. See கயிலை. வடகயிலை யண்டர்நாயக ரிருக்கும் (பெரியபு.திருநாவுக்.364). |
| வடகலை | vaṭa-kalai, n. <>id + கலை 4. 1. Sanskrit literature; வடமொழி நூல். செந்தமிழும் வடகலையுந் திகழ்ந்த நாவர் (திவ்.பெரியதி, 7, 7, 7). 2. Sanskrit; 3. See வடகலைநாமம். 4. A Vaiṣṇav sect, dist. fr. teṉ-kalai, |
| வடகலைத்திருமண் | vaṭakalai-t-tirumaṇ. n. <>வடகலை+. See வடகலைநாமம். . |
| வடகலைநாமம் | vaṭakalai-nāmam, n. <>id.+. The U-shaped caste of mark by the vaṭakalai Vaiṣṇavas; வடகலை.வைஷ்ணவர் தரிக்குந் திருமண்காப்பு. |
| வடகலையார் | vaṭakalaiyār, n. <>id. A Vaiṣṇava sect. See வடகலை, 4. |
| வடகாற்று | vaṭa-kāṟṟu, n. <>வட+. North wind; வாடை. (சூடா.) |
| வடகிரி | vaṭa-kiri, n. <>id + கிரி 2. Mt. Mēru, as the northern mountain; மேருமலை. (யாழ். அக.) |
| வடகிழக்கு | vaṭa-kiḷakku, n. <>id+. Northeast; வடக்குங் கிழக்குஞ் சேருங் கோணத்திசை. |
| வடகீழ்த்திசை | vaṭa-kiḷ-t-ticai, n. See வடகிழக்கு (யாழ்.அக.) . |
| வடகீழ்த்திசைப்பாலன் | vaṭakīḻ-t-ticai-p-pālaṉ. n. <>வடகீழ்த்திசை+. īcāṉaṉ, as the regent of the North-east; ஈசானன். (யாழ்.அக.) |
| வடகு | vaṭaku, n. <>வடகம்2. Skin; தோல். (இலக்.அக.) |
| வடகுணதிசை | vaṭa-kuṇaticai, n. <>வட+. See வடகிழக்கு. . |
