Word |
English & Tamil Meaning |
|---|---|
| வடிகால் | vaṭi-kāl, n. <>id.+கால்1. Outlet; நீரை வடியவிடுங் கால்வாய். |
| வடிசதுக்கம் | vaṭi-catukkam, n. <>வடி2-+. Place where filtration is done; தைலம் முதலியன வடிக்கும் இடம். (தைலவ. தைல. பாயி. 44.) |
| வடிசம் | vaṭicam, n. <>badiša. Fish-hook; தூண்டில். (யாழ். அக.) |
| வடிசம்பா | vaṭi-campā, n. prob. வடி4+சம்பா1. A kind of paddy; நெல்வகை. |
| வடிசல் 1 | vaṭical, n. <>வடி1-. (W.) 1. Ebbing; decreasing; நீர் முதலியன வற்றுகை. 2. Being long, lengthening; |
| வடிசல் 2 | vatical, n. <>வடி2-. 1. Straining, filtering; வடிக்கை. 2. Rice boiled and strained; |
| வடிசற்காது | vaṭicaṟ-kātu, n. <>வடிசல்1+காது1. See வடிகாது. (W.) . |
| வடிசாந்து | vaṭi-cāntu, n. <>வடி2-+. Superior fragrant unguent; நற்சாந்து. (யாழ். அக.) |
| வடித்துக்கொட்டு - தல் | vaṭittu-k-koṭṭu-, v. tr. <>id.+. To cook and serve; சமைத்துப் படைத்தல். |
| வடிதங்கம் | vaṭi-taṅkam, n. <>id.+. Purified gold; சுத்தஞ்செய்த தங்கம். (யாழ். அக.) |
| வடிதட்டு | vaṭi-taṭṭu, n. <>id+தட்டு2. A kind of colander; சிப்பற்றட்டுவகை. Loc. |
| வடிதமிழ் | vaṭi-tamiḻ, n. <>id.+. Choice Tamil; தெளிந்த தமிழ். (யாழ். அக.) |
| வடிதயிர் | vaṭi-tayir, n. <>id.+. Thick mass of curds; கட்டித்தயிர். வைத்த நெய்யுங் காய்ந்த பாலும் வடிதயிரு நறுவெண்ணெயும் (திவ். பெரியாழ். 2, 2, 2). |
| வடிதேய் - த்தல் | vaṭi-tēy-, v. tr. <>வடி2-+தேய்2-. To polish, as jewels; to burnish, as gold; பொடியிட்டுத்தேய்த்து மினுக்குதல். Nā. |
| வடிந்தகாது | vaṭinta-kātu, n. <>வடி1-+காது1. See வடிகாது. (W.) . |
| வடிப்பம் | vaṭippam, n. prob. வடி2-.cf. வடிவம். 1. Elegance; செப்பம். வடிப்பம் வடிப்பமாய்ப் பேசிக் கொள்ளாதே (இராமநா. கிஷ். 9). 2. Shapeliness; 3. Beauty; 4. Capacity; ability; |
| வடிப்பு | vaṭippu, n. <>id. 1. Straining, filtering; வடிக்கை. (யாழ். அக.) 2. Selecting, choosing; 3. Iron rod; |
| வடிப்போர் | vaṭippōr, n. <>id. Trainers, as of elephants; யானை முதலியன பயிற்றுவோர். புதுக்கோள் யானையும் . . . பொற்றார்ப் புரவியுங்கதிக்குற வடிப்போர் (மணி. 28, 61). |
| வடிபலகை | vaṭi-palakai, n. <>id.+. A flat piece of wood, used as a strainer in cooking rice; சோறுவடிக்க உதவும் சிறு மரப்பலகை. Tinn. |
| வடிபானை | vaṭi-pāṉai, n. <>id.+. 1. Vessel for cooking rice; சோறுசமைக்கும் பாத்திரம். 2. Condenser in a distilling apparatus; pot which receives the distilled liquid; |
| வடிம்பிடு - தல் | vaṭimpiṭu-, v. tr. <>வடிம்பு+இடு-. 1. To compel; நிர்ப்பந்தித்தல். வடிம்பிட்டு ஆசிரயிக்கைக்காக (ஈடு, 10, 1, 4). 2. To rise and start with a lever, as a temple-car; 3. To urge, move; 4. To slander, blame; |
| வடிம்பு | vaṭimpu, n. prob. வடி1-. 1. Border; edge, as of garment; blade, as of a knife; விளிம்பு. பொன்வடிம் பிழைத்த வான்பகழி (கம்பரா. கிளை. 38). 2. Extremity, as of the foot; 3. Eaves, edge of a roof; 4. Lever; 5. See வடிம்புக்கம்பி. Loc. 6. Mark, scar; 7. Reproach, blame; |
| வடிம்புக்கம்பி | vaṭimpu-k-kampi, n. <>வடிம்பு+கம்பி1. Spar; தாங்குமரம். Loc. |
| வடிம்புக்கழி | vaṭimpu-k-kaḻi, n. <>id.+கழி4. Transverse piece in roofing; குறுக்கு விட்டம். (யாழ். அக.) |
| வடிம்புபிடி - த்தல் | vaṭimpu-piṭi-, v. intr. <>id.+. To tie cross timbers of a roof; குறுக்கு விட்டந் தொடுத்தல். (W.) |
| வடிமணி | vaṭi-maṇi, n. <>வடி1-+. Clearsounding bell; தெளிந்த ஒசையுள்ள மணி. வடிமணி நின்றியம்ப (பு. வெ. 10, 14, பக். 116). |
