Word |
English & Tamil Meaning |
|---|---|
| வடியல் | vaṭiyal, n. <>வடி2-. 1. See வடிசல்2, 1. . 2. Strained or filtered liquid; 3. That which is cooked; |
| வடியிடு - தல் | vaṭi-y-iṭu-, v. tr. <>id.+. To be filtered; வடித்தெடுத்தல். தெள்ளிமறை வடியிட்ட வமுதப்பிழம்பே (தாயு. கருணா. 8). |
| வடியெண்ணெய் | vaṭi-y-eṇṇey, n. <>id.+. Clarified medicinal oil; வடித்தெடுத்த மருந்தெண்ணெய். (W.) |
| வடிவணங்கு | vaṭivaṇaṅku, n. <>வடிவு+அணங்கு. Beautiful lady, as fair-complexioned; அழகிய பெண். ஆதிமா மரபின்வரு வடிவணங்கை (திருவாலவா. 11, 3). |
| வடிவம் | vaṭivam, n. cf. படிவம். 1. Form, shape, figure; உருவம். (பிங்.) சங்கம வடிவம் . . . தாபர வடிவம் (திருவாலவா. 61, 14). 2. Body; 3. Beauty, comeliness, elegance; 4. Complexion; colour; 5. Lustre; 6. True word; truth; |
| வடிவவுவமம் | vaṭiva-v-uvamam, n. <>வடிவம்+. (Rhet.) Simile in which the comparison is in respect of shape or form; உருவத்தை ஒப்பித்துக்கூறும் உவமை. (யாழ். அக.) |
| வடிவாக | vaṭivāka, adv. <>வடிவு1+ஆ-. Completely; முற்றும். Tinn. |
| வடிவாளன் | vaṭivāḷaṉ, n. <>id.+ஆளன். Handsome man; அழகுள்ளவன். Loc. |
| வடிவிலாக்கூற்று | vaṭivilā-k-kūṟṟu, n. <>id.+இல் neg.+. Voice from an invisible speaker; voice from heaven; அசரீரிவாக்கு. பிறந்திட்டதோர் வடிவிலாக்கூற்று (சேதுபு. பராவு. 42). |
| வடிவு 1 | vaṭivu, n. <>வடிவம். [T. vaduvu, M. vadivu.] 1. Form, shape; உருவம் வண்ணந்தானது காட்டி வடிவுகாட்டி (திருவாச. 5, 25). 2. Body; 3. Pudendum muliebre; 4. Beauty; 5. Fair complexion; 6. Brightness; lustre; 7. True word; truth; |
| வடிவு 2 | vaṭivu, n. <>வடி2-. Loc. 1. That which is strained or filtered; வடித்தது. 2. Outflow; surplus water; |
| வடிவுப்பானை | vaṭivu-p-pāṉai, n. <>வடிவு2+. See வடிபானை. (W.) . |
| வடிவுவமை | vaṭi-v-uvamai, n. <>வடிவு1+. (Rhet.) See வடிவவுவமம். (சங். அக.) . |
| வடிவெழுத்து | vaṭi-v-eḻuttu, n. <>id.+. 1.A letter, written symbol of an uttered sound, dist. fr. oli-y-eḻuttu; ஒலியின் குறியாக எழுதப்படும் அட்சரம். (நன். 256, மயிலை.) (பிங்.) 2. Fine writing; |
| வடிவேல் | vaṭi-vēl, n. <>வடி4+. 1. Sharplance; கூரிய வேல். வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே (கந்தரலங். 70). 2. Skanda, as wielding the lance; |
| வடு 1 | vaṭu, n. 1. cf. வடி5. [K. midi.] Unripe fruit, especially very green mango; மாம்பிஞ்சு. மாவின் வடுவகிரன்ன கண்ணீர் (திருவாச. 9, 2). (பிங்.) 2. Wart, mole; 3. Scar, cicatrice, wale; 4. cf. வடி7. Chiselled figure; 5. Mouth of an ulcer or wound; 6. Fault, defect; 7. Reproach; 8. Injury, calamity; 9. Fine, black sand; 10. Copper; 11. Sword; 12. Beetle; |
| வடு 2 - த்தல் | vaṭu-, v. <>வடு1. intr. To bear fruit; பிஞ்சு விடுதல். (W.)--tr. To exhibit, manifest; |
| வடு 3 | vaṭu, n. <>vaṭu. 1. Celibate student; பிரமசாரி. Loc. 2. See வடுகன்1, 3. 3. Bhairava; 4. Clever boy; |
| வடுக்கொள்(ளு) - தல் | vaṭu-k-koḷ-, v. intr. <>வடு1+. 1. To bear mark; தழும்பு படுதல். நல்லகம் வடுக்கொள முயங்கி (அகநா. 100). 2. To begin to heal, as a sore; |
| வடுகக்கடவுள் | vaṭuka-k-kaṭavul, n. <>வடுகன்1+. Bhairava, a form of šiva; வைரவ மூர்த்தி. (திவா.) |
| வடுகக்காது | vaṭuka-k-kātu, n. prob. வடுகன்2+ காது1. See வடிகாது. (W.) . |
