Word |
English & Tamil Meaning |
|---|---|
| வடையற்றது | vaṭai-y-aṟṟatu, n. perh. id.+அறு1-. That which is useless; வீணானது. (யாழ். அக.) |
| வண்களமர் | vaṇ-kaḷamar, n. <>வண்-மை+. 1. Vēḷāḷas; வேளாளர். (திவா.) 2. Persons of šudra caste; |
| வண்சிறை | vaṇ-ciṟai, n. <> வன்சிறை. Battlement; மதில். (சது.) |
| வண்டத்தனம் | vaṇṭa-t-taṉam,. n. <>வண்டன்1+தனம்1. [T. baṇdatanamu, K. baṇdatana.] 1. Wickedness, impudence; குறும்பு. Colloq. 2. Lewdness; |
| வண்டப்புரட்டன் | vaṇṭa-p-puraṭṭaṉ, n. <>id.+. Consummate cheat; பெருமோசக்கரான். வண்டப் புரட்டர்தா முறிதந்து பொன்னடகு வைக்கினுங் கடனீந்திடார் (குமரே. சத. 4). |
| வண்டப்பேச்சு | vaṇṭa-p-pēccu, n. <>id.+. 1. Impudent talk; குறும்புப்பேச்சு. 2. Lewd talk; |
| வண்டம் | vaṇṭam, n. <>vaṇṭha. A weapon. See குந்தம்5. (சங். அக.) . |
| வண்டமை | vaṇṭamai, n. Shell-fish; கடல் மீன்வகை. (சங். அக.) |
| வண்டயம் 1 | vaṇṭayam, n. [T. peṇdiyamu, K. peṇdeya.] Anklet ; கழல். வீரவண்டயம் அணிந்த திருவடிகள் (திவ்.திருப்பா.17, அரும். பக்.162). |
| வண்டயம் 2 | vaṇṭayam, n. See வண்டவாளம். அவன் வண்டயமெல்லாம் வெளிவந்துவிட்டது. . |
| வண்டர் | vaṇṭar, n. perh. vandin. 1. Panegyrists who keep the king informed of the time, by praising him at stated hours; அரசனுக்கு நாழிகையறிவிக்கும் கடிகையார். வண்டருமோவரும் பாட (சீவக. 1844). 2. Panegyrists, bards; 3. Warriors; |
| வண்டரம் | vaṇṭaram, n. <>vaṇṭhara. (யாழ். அக.) 1. Dog's tail; நாயின் வால். 2. Dog; 3. Cloud ; 4. Breast; |
| வண்டரன் | vaṇṭaraṉ, n. <>vaṇdara. (யாழ். அக.) 1. Eunuch; அலி. 2. Miser; |
| வண்டல் | vaṇṭal, n. perh. மண்டு-. [T. vaṇdu.] 1. A girls' game of making toy-houses; மகளிர்வி¬ளாட்டுவகை. (திவா.) தண்முத்தம் பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும் (ஐந். ஐம். 46). 2. Bevy of ladies; 3. Toy-house; 4. Dregs, lees, sediment; silt, mud, mire, slush; 5. Earth washed ashore by a river, lake etc.; 6. Alluvial, soil, capable of retaining moisture and of a light red colour; 7. Flake. See பொருக்கு, 2. (இலக். அக.) 8. Pebble; 9. Whirlpool; |
| வண்டலடி - த்தல் | vaṇṭal-aṭi-, v. intr. <> வண்டல்+. 1. To spread alluvial deposit in fields, as manure; வயலுக்கு உரமாக வண்டல் பரப்புதல். (C. G.) 2. To become silted up, as a field; |
| வண்டலம் | vaṇṭalam, n. <>id. Slush; சேறு. (யாழ். அக.) |
| வண்டலவர் | vaṇṭalavar, n. <>id. Girls at play; விளையாட்டு மகளிர். இரிவுற்றார் வண்டிற்கு வண்டலவர் (கலித். 92). |
| வண்டலாயம் | vaṇṭal-āyam, n. <>id.+. ஆபம்1. A company of girl-playmates; விளையாடும் தோழியர் கூட்டம். வண்டாலாயமொ டுண்டுறைத் தலைஇ (பெரும்பாண். 311). |
| வண்டலிழை - த்தல் | vaṇṭal-iḻai-, v. intr. <>id.+ இழை2-. To make a toy-house out of sand; மணலாற் சிற்றிலிழைத்து விளையாடுதல். (பொருந்.187, உரை.) |
| வண்டவாளம் | vaṇṭavāḷam, n. [T. baṇdavālamu, K. Tu. baṇdavāla.] Loc. 1. State, condition, used in contempt; நிலைமை. 2. Capital, funds; |
| வண்டற்படுகை | vaṇṭaṟ-paṭukai, n. <>வண்டல்+. Muddy bank of a river; வண்டலிட்ட ஆற்றங்கரை. (W.) |
| வண்டற்பாவை | vaṇṭaṟ-pāvai, n. <>id.+. Toy made of mud; வண்டலாற் செய்த விளையட்டுப் பாவை. வண்டாற்பாவை வௌவலின் நுண்பொடி யளைஇக் கடறூர்ப் போளே (ஜங்குறு.124) . |
| வண்டன் 1 | vaṇṭaṉ, n. <>vaṇṭha. 1. Short, dwarfish person; குள்ளன். (இலக். அக.) |
| வண்டன் 2 | vaṇṭaṉ, n. cf. மிண்டன். Brave man; திண்ணியன். (பிங்.) |
| வண்டன் 3 | vaṇṭaṉ, n. <>வண்டு1. Wicked person; தீயோன். வண்டர் மும்மதின் மாய்தர வெய்தவன் (தேவா.755, 7). |
