Word |
English & Tamil Meaning |
|---|---|
| வதுக்கு | vatukku n. [T.batuku K. baduku.] Improved condition; good circumstances; நன்னிலை. வதுக்குப் பெற்றிருக்கிறான். (W.) |
| வதுகி | vatuki n. Straw; வைகொல். (சங். அக.) |
| வதுகை | vatukai n. <>vadhūkā. Wife; மனைவி. (யாழ். அக.) |
| வதுமரம் | vatumaram n. A tree; மரவகை. (சங். அக.) |
| வதுவடி | vatuvaṭi n. Wedge-leaved apeflower; See உலக்கைப்பாலை. (மலை.) |
| வதுவர் | vatuvar n. <>வாதுவர். Horsegrooms; mahauts ; வாதுவர். (சூடா.) |
| வதுவை | vatuvai n. prob. vadhū. [K.maduve Tu. madume.] 1. Bride; மணமகள். வதுவை நாறும் வண்டுகம ழைம்பால் (மலைபடு. 30). 2. Wedding, marriage; 3. Wedding garland; 4. Fragrance; 5. Sexual union; 6. cf. baddha. Compulsion; force; |
| வதுவைக்கணம் | vatuvai-k-kaṇam n. <>வதுவை +கணம்4 . (Astrol.) Correspondence in respect of irāci of the bride and bridegroom ; மணமக்களின் இராசிப்பொருத்தம். (W.) |
| வதுவைக்கலியாணம் | vatuvai-k-kaliyāṇam n. <>id.+. Marriage in the form approved by the šāstras; சாஸ்திரீயமான விவாகம். தன்னகத்து வதுவைக் கலியாணஞ் செய்வான் (இறை 23, உரை, பக். 127) . |
| வதுவைச்சூட்டணி | vatuvai-c-cūṭṭaṇi n. <>id + சூட்டு2 + அணி2. Wedding garland; மணமாலை. வதுவைச் சூட்டணி வண்டுவாய் திறப்பவும் (பெருங். உஞ்சைக். 33, 75). |
| வதுவைத்திண்ணை | vatuvai-t-tiṇṇai n. <>id.+. Marriage-dais; கலியாணவேதிகை. (பிங்.) |
| வதுவைநாற்றமை | vatuvai-nāṟṟam n. <>id.+. New fragrance; புதுமணம். வதுவை நாற்றம் புதுவது கஞல (அகநா. 25) . |
| வதுவைமணம் | vatuvai-maṇam n. <>id.+. See வதுவைக்கலியாணம். நாளை வதுவைமண மென்று நாளிட்டு (திவ். நாய்ச். 6, 2). . |
| வதுவைமுளை | vatuvai-muḷai n. <>id.+. Earthen pot in which nava-tāṉiyam is sown and allowed to sprout in marriage; விவாகத்தில் நவதானியம் விதைகும் பாலிகை. (பிங்.) |
| வதூ | vatū- n. <>vadhū . See வது. (யாழ். அக.) . |
| வதூவரர் | vatū-varar n. <>id.+ vara. Bride and bridegroom; மணமகனும் மணமகளும் . |
| வதை 1 | vatai n. <>vadha . 1. Murder; கொலை. களிறுதன்னை வதைசெய்து (தேவா. 965, 8). 2. Affliction, torment; |
| வதை 2 - த்தல் | vatai- 11 v. <>வதை1. tr. 1. To kill, murder; கொல்லுதல். 2. To torment ; to cause distress in body or mind; 3. To be tormented; to be in great anguish; |
| வதை 3 - தல் | vatai- 4 v. intr. See வதை2-. . |
| வதை 4 | vatai n. Honeycomb; தேன்கூடு. (W.) |
| வந்தட்டி | vantaṭṭi n. <> வா- + அண்டு-. See வந்தேறி. . |
| வந்தட்டிவரத்தட்டி | vantaṭṭi-varattaṭṭi n. Redupl. of வந்தட்டி. See. வந்தேறி Loc. . |
| வந்ததுகொண்டுவாராததுணர்த்தல் | vantatu-koṇṭu-vārātatuṇarttal n. <>வா-+. A literary device which consists in applying to an earlier statement an implication drawn from a later explicit statement; பின் ஒருவழி வந்தது கொண்டு முன்வாராததொரு பொருளை அறியவைக்கும் தந்திரவுத்திவகை. (தொல். பொ. 666.) |
| வந்தமார்க்கம் | vantamārkkam n. cf. apāmārga. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) |
| வந்தரர் | vantarar n. <>vyantara. A class of gods; வியந்தார் எண்ணவொண்ணா சீரிய வந்தரர் «¦சாதிடத்தீசர் நற்சேதியமே (திருநூற். 92). |
| வந்தனம் 1 | vantaṉam n. <>vandana. 1. Reverence, homage, adoration, worship, salutation; வணக்கம். வந்தனஞ் செய்தாற்கு (தேவா.132, 8). 2. Humility; modesty; 3. A term expressing thankfulness; |
| வந்தனம் 2 | vantaṉam n. <>vadana. Face; முகம். (யாழ். அக.) |
| வந்தனமாலை | vantaṉa-mālai n. <>vaṅdana-mālā. 1. A kind of wreath of flowers or leaves hung over the door of a house; வாயிலிற்கட்டுந் தோரணவகை. (யாழ். அக.) 2. The ornamental arch of a gateway; |
