Word |
English & Tamil Meaning |
|---|---|
| வந்தனி 1 - த்தல் | vantaṉi-, 11 v. tr. <>வந்தனம்1. To revere, adore; to pay respects; பணிதல். (யாழ். அக.) |
| வந்தனி 2 | vantaṉi n. <>vandanī. Bezoar of the cow; கோரோசனை. (நாமதீப. 393.) |
| வந்தனை | vantaṉai n. <>vandanā. See வந்தனம்1, 1. வந்தனையு மம்மலர்க்கே யாக்கி (திருவாச. 5, 26). . |
| வந்தனைவழிபாடு | vantaṉai-vaḻipāṭu n. <>வந்தனை+. Worship, homage, adoration, as to a deity; கடவுளுக்குச் செய்யவேண்டிய வணக்கமும் பூசையும். |
| வந்தி 1 - த்தல் | vanti- 11 v. tr. <>vand. To pay homage; to salute reverentially; வணங்குதல். திருமால் திருவடியே வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து (திவ். இயற். 3, 95). |
| வந்தி 2 | vanti- n. <>வந்தி1-. Adoration, homage, reverence; வணக்கம். குஞ்சியார வந்தி செய்ய (தேவா. 693, 4). |
| வந்தி 3 | vanti n. <>vandin. 1. Panegyrist; மங்கலபாடகன். (சூடா.) 2. Eulogist of a king's court; 3. Professional bard; |
| வந்தி 4 - த்தல் | vanti- 11 v. tr. <>பந்தி-. To tie; கட்டுதல். வந்தித்திடுத லெமக்காரோபிதமாம் (பிரபோத. 41, 26). |
| வந்தி 5 | vanti- n. <>vandhyā. See வந்தியை. வந்திக்கு மகவுண்டாகும் (திருக்காளத். பு. 25, 27). . |
| வந்தி 6 | vanti n. <>bandha. 1. Bracelet. See கைவந்தி. (W.) 2. Difficulty; 3. Compulsion; 4. That which comes through external compulsion; 5. Perversity; pertinacity; 6. Quarrel; 7. Ladder; |
| வந்திகட்டு - தல் | vanti-kaṭṭu- v. tr. <>வந்தி 6+. To compel; பலவந்தம் பண்ணுதல். (யாழ். அக.) |
| வந்திகன் | vantika¢ṉ. n. <>vandika. See வந்தி3. வந்திகர் வாழ்த்த வந்தான் (கம்பரா. மாயாசனகப். 7). . |
| வந்திகை 1 | vantikai n. <>bandhikā. 1. Bracelet. See கைவந்தி. 2. Armlet; 3. An ornament worn on the forehead; 4. Ornament; |
| வந்திகை 2 | vantikai n. cf. வசந்திகை. Yellow spreading spots. See சுணங்கு3, 1. (அரு. நி.) |
| வந்திகை 3 | vantikai n. See வந்தியை. . |
| வந்தித்தல் | vantittal n. Worm-killer. See பங்கம்பாளை, 1. (மலை.) |
| வந்தித்துநிற்போர் | vantittu-niṟpōr n. <>வந்தி1-+நில்-. Professional bards; பாணர். (சூடா.) |
| வந்திபற்று - தல் | vanti -paṟṟu- v. tr. <>வந்தி6+. To obtain by force; வலிந்து அபகரித்தல். வரிவளையிற் புகுந்து வந்திபற்றும் வழக்குளதே (திவ். நாய்ச். 9, 3). |
| வந்திபாடம் | vanti-pāṭam n. <>வந்தி3 + பாடு-. Panegyric, as of a bard; புகழ்ந்துபாடும் பாட்டு. (யாழ். அக.) |
| வந்திபோடு - தல் | vanti-pōṭu- v. tr. <>வந்தி6+. To force responsibility upon; கட்டயமாய்ப் பொறுப்பேற்றுதல். (யாழ். அக.) |
| வந்தியிறு - த்தல் | vanti-y-iṟu- v. tr. <>id.+. To pay tax, etc., under compulsion; பலவந்தத்துக்கு உட்பட்டு வரிமுதலியன இறுத்தல். (யாழ். அக.) |
| வந்தியை | vantiyai n. <>vandhyā. Barren woman; மலடி. (W.) |
| வந்திவாங்கு - தல் | vanti-vāṅku- v. tr. <>வந்தி6+. To collect tax, etc., using force; பலவந்தத்துக்கு உட்படுத்தி வரிமுதலியன வசூலித்தல். (யாழ். அக.) |
| வந்து | vantu prob. வா-. n. 1. Wind; காற்று வந்தெனக் கந்தனூறு கணைதொடா (கந்தபு.சூர. வதை. 188). (பிங்.)-part. 2. An expletive; |
| வந்தேறி | vantēṟi n. <>வந்தேறு-. 1. Newcomer, immigrant; புதிதாகக் குடியேறியவன். வந்தேறிகளாய்த் திருநாள் ஸேவித்துப போவாரைப் போலே (திவ். நாய்ச். 8, 9, வ்யா.) 2. That which is introduced from outside; exotic; |
| வந்தேறு - தல் | vantēṟu- v. intr. <>வா-+. To come and settle permanently; to immigrate; புரிதாகவந்து குடிபுகுதல். இருவினைகள் வந்தேற வழியுமில்லை (தாயு. ஆனந்த. 10). |
