Word |
English & Tamil Meaning |
|---|---|
| வந்தேறுங்குடி | vantēṟuṅ-kuṭi n. <>வந்தேறு-+குடி4. Immigrant cultivator; ஒரூரில் புதிதாக வந்து நிலச்சாகுபடி செய்யுங் குதியானவன். |
| வந்தை 1 | vantai n. cf. vandya-tā. Greatness; பெருமை . (யாழ். அக.) |
| வந்தை 2 | vantai n. <>vandā. Honeysuckle mistletoe; See புல்லுருவி. |
| வந்தை 3 | vantai n. <>vandhyā. See வந்தியை வந்தைக்கும் . . . இரண்டிலை பதியின்றேல் (சேதுபு. துத்தம். 9). . |
| வப்பிரம் | vappiram n. <>vapra. 1. Encircling wall, as of a temple; சுற்றுமதில். 2. Fort; 3. Slope of a hill; 4. Foundation of a building; 5. Ditch; 6. Field; 7. Dust; 8. Lead; |
| வப்பு | vappu n. Crevice; cleft; நடுவிலேயுள்ள பிளவு. (யாழ். அக.) |
| வபனம் | vapaṉam n. <>vapana. 1. Shaving; மயிர்களைகை. பொருந்த வபனம் போற்றியறலாடி (திருவானைக். கோச்செங். 78). 2. Sowing; 3. Seed-grain for sowing; 4. Semen; |
| வபஸ்தாபனம் | vapa-s-tāpaṉam n. <>vapā + tāpana. Peritonitis; வயிற்றுப்பை வீக்கம். (M. L.) |
| வபாமது | vapāmatu n. cf. வயமது. Gulancha. சீந்தில். (ப. மூ.) |
| வபிலன் | vapilaṉ n. <>vapila. Father; பிதா. (யாழ். அக.) |
| வபு | vapu n. <>vapus. Body; உடல். (யாழ். அக.) |
| வபை | vapai n. <>vapā. 1. Omentum, caul, fat or marrow near the navel; வயிற்றுள் நாபியருகிலிருக்கும் நிணம். வேதம்பணித்திடும் வபையைவாங்கி (திருவிளை. மாணிக். 34). 2. That which is important; |
| வபையெடு - த்தல் | vapai-y-eṭu- v. <>வபை+. intr. 1. To remove the omentum or vapai of a sheep or cow for sacrificial purposes; யாகபசுவின் வபையை ஒமஞ்செய்தற்கு எடுத்தல். 2. To grasp the essence of things; 3. To torment; to cause fatal injury, as by removing one's entrails; |
| வம்சம் | vamcam n. <>vamša. See வமிசம். . |
| வம்பக்கோட்டி | vampa-k-kōṭṭi. n. <>வம்பு1 + கோட்டி2. Assembly of men indulging in vain and aimless talk; பயனில்சொற்களைச் சொல்லுவோரின் கூட்டம். வட்டுஞ் சூதும் வம்பக்கோட்டியும் (மணி. 14, 63). |
| வம்படி - த்தல் | vampaṭi- v. <>id.+. intr. (யாழ். அக.) 1. To indulge in idle talk; வீண்வார்த்தைபேசுதல். 2. To indulge in wanton talk; 3. To speak evil; 4. To talk disparagingly; 5. To do harm; 6. Seel வம்பள-. Colloq. |
| வம்பப்பரத்தர் | vampa-p-parattar n. <>id.+. Lascivious men who are ever after fresh victims for their lust; புதிய நுகர்ச்சியை விரும்புங் காமுகர் வறுமொழியாளரொடு வம்பப்பரத்த ரொடு (சிலப். 16, 63). |
| வம்பப்பரத்தை | vampa-p-parattai n. <>id.+ பரத்தை2. Lustful mistress or prostitute; சழிகாமத்தையுடைய கணிகை. வம்பப்பரத்தை வறுமொழியாளனொடு . . . குறுகினர் (சிலப். 10, 219). |
| வம்பம் | vampam n. A mineral poison; சாலங்கபாஷாணம். (யாழ். அக.) |
| வம்பமாக்கள் | vampa-mākkaḷ n. <>வம்பு1+. Newcomers, strangers; foreigners; புதியோர். வம்பமாக்கல் . . . கட்போ ருளரெனில் (சிலப். 5, 111). |
| வம்பமா ந்தர் | vampa-māntar n. <>id.+. 1. See வம்பமாக்கள். . 2. Nondescript persons; |
| வம்பமாரி | vampa-māri n. <>id.+ மாரி1. Unseasonal rains; காலமல்லாத காலத்துப் பெய்யும் மழை. வம்பமாரியைக் காரென மதித்தே (குறுந். 66). |
| வம்பல் | vampal n. [T. vampu.] Region, point of the compass; திசை. (பிங்.) |
| வம்பலன் | vampalaṉ n. <>வம்பு1. 1. Newcomer, stranger; புதியோன். வம்பலர் துள்ளுநர்க்காண்மார் (கலித். 3). 2. Wayfarer; 3. Neighbour; |
| வம்பலாட்டம் | vampal-āṭṭam n. <>id.+ ஆட்டம். Complication; perplexity; குழப்பம். Loc. |
