Word |
English & Tamil Meaning |
|---|---|
| வயணம் | vayaṇam n. cf. vayuna. [K. vaina.] 1. Manner, method, way; விதம். (W.) 2. Circumstance; condition; 3. Clear details; particulars; 4. Sumptuousness; 5. Good, agreeable condition; 6. Neatness; 7. cf. வயம்5. Favourableness, suitability; 8. Reason, cause; |
| வயத்தம்பம் | vayat-tampam n. <>vayas-stambha. Art of arresting the influence of advancing age in a person; யௌவனநிலை மாறாமல் நிறுத்தும் வித்தை. இகலிலா வயத்தம்பமென்றின்னவை செய்தும் (திருவிளை. எல்லாம். 17). |
| வயத்தன் | vayattaṉ n. <>வயம் 5. One brought to a state of subjection; வசப்பட்டிருப்பவன். (யாழ். அக.) |
| வயதரம் | vayataram n. perh. vayasthā. Chebulic myrobalan. See கடுக்காய், 2. (மலை). |
| வயது | vayatu n. See வயசு. நாலிருவயது நண்ணினாள் கவுரி (திருவானைக். கோச்செங். 139). . |
| வயதுசென்றவன் | vayatu-ceṉṟavaṉ n. <>வயது+செல்-. 1. Aged man; முதியவன். 2. See வயதுவந்தவன். |
| வயதுவந்தவன் | vayatu-vantavaṉ n. <>வயதுவா-. One who has attained the age of discretion; பகுத்தறியும் பருவமடைந்தவன். Loc. |
| வயதுவம் | vayatuvam n. prob. வயோதிகம். Ripe age; முதிர்வயது. (யாழ். அக.) |
| வயதுவா - தல் [வயதுவருதல்] | vayatu-vā v. intr. <>வயது+. To attain the age of discretion, majority or puberty; பகுத்தறியும் பருவம் அடைதல். |
| வயதெற்றி | vayateṟṟi n. cf. வயவெற்றி. Long pepper; திப்பலி. (சங். அக.) |
| வயந்தக்கிழவன் | vayanta-k-kiḻavaṉ n. <>வயந்தம்+. See வயந்தமன்னவன். வயந்தக் கிழவற்கு . . . விழவணி (பெருங். மகத. 6, 179). . |
| வயந்தகம் | vayantakam n. perh. vasantaka. Pendant in front of a head-ornament, worn by women; மகளிர் தலைக்கோலத்தின் தொங்கலுறுப்பு. அணிநுதல் வகைபெறச் செரீஇய வயந்தகம்போற் றோன்றும் (கலித். 79). |
| வயந்தம் | vayantam n. <>vasanta. 1. Spring; வசந்தகாலம். (இலக். அக.) 2. Spring festival, as in a temple; |
| வயந்தமன்னவன் | vayanta-maṉṉavaṉ n. <>வயந்தம்+. Kāma, as the lord of the spring season; [வசந்தகாலத்து அதிபதி] மன்மதன். வயந்த மன்னவன் வந்தனன். (யசோதர. 1, 9). |
| வயந்தன் | vayantaṉ n. <>vasanta. 1. See வசந்தன், 1, 2, 3. . 2. Spring season; |
| வயப்படு - தல் | vaya-p-paṭu- v. intr. <>வயம் 5+. To be brought under another's influence; to be subjugated; வசமாதல். தீமையுடையார் வருந்தினா ரென்றே வயப்படுவதுண்டோ (பழமொ. 110). |
| வயப்புலி | vaya-p-puli n. <>வய+. Lion; சிங்கம். (திவா.) வயப்புலியை வாலுருவிவிடுகின்றீரே (பாரத. சூதுபோர். 265). |
| வயப்போத்து | vaya-p-pōttu n. <>id.+ போத்து1. Lion; சிங்கம். (பிங்.) |
| வயம் 1 | vayam n. <>id. 1. Power, might; வலி. (நாமதீப. 793.) 2. Victory, conquest; |
| வயம் 2 | vayam n. <>வையம். Earth; பூமி. வயமுண்ட மாலும் (தேவா. 69, 9.) |
| வயம் 3 | vayam n. cf. வயா. [O. K. bayake.] Desire; வேட்கை. வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திறவார் (திருக்கோ. 383). |
| வயம் 4 | vayam n. <>vayas. Bird; பறவை. (பிங்.) |
| வயம் 5 | vayam n. <>vaša. 1. State of subjugation; வசம். வயங்கொள நிற்பதோர் வடிவினையுடையார். (தேவா. 1133, 2). 2. Means, agency; 3. Connection; 4. cf. வயணம். Suitability; |
| வயம் 6 | vayam n. <>payas. Water; நீர். (பிங்.) |
| வயம் 7 | vayam n. <>ayas. Iron; இரும்பு (அக. நி.) |
| வயம் 8 | vayam n. <>haya. Horse; குதிரை. (யாழ். அக.) |
| வயம் 9 | vayam n. prob. aja. Sheep; ஆடு. (அக.நி.) |
| வயம் 10 | vayam n. 1. Hare; முயல். (பிங்.) 2. Clove; |
