Word |
English & Tamil Meaning |
|---|---|
| வயற்சார்பு | vayaṟ-cārpu n. <>id.+. Agricultural tract; மருதநிலம். (W.) |
| வயற்சுள்ளி | vayaṟ-cuḷḷi n. perh. id.+. cf. வயற்கள்ளி. Water-thorn. See பொரிப்பூண்டு, 2. (யாழ். அக.) |
| வயற்செம்பை | vayaṟ-cempai n. <>id.+. A plant; செடிவகை (யாழ். அக.) |
| வயற்சேம்பு | vayaṟ-cēmpu n. <>id.+. A variety of Indian kales, s.sh., Colocasia montana; மழைக்காலத்தில் வரப்புக்களிலுண்டாம் சேம்புவகை. (M. M. 402.) |
| வயற்பயறு | vayaṟ-payaṟu n. <>id.+. 1. Field gram. See சிறுபயறு, 2. (G. Tp. D. I, 134.) 2. Green gram. |
| வயற்றுத்தி | vayaṟṟutti n. <>id.+ துத்தி1. A species of evening mallow; துத்திவகை. (மூ. அ.) |
| வயறு | vayaṟu n. (அரு. நி.) prob. வயிறுகுக்கி. 1. Hook; கொக்கி. 2. Rope; |
| வயன் | vayaṉ n. <>வயனம் 2. See வயணம். நந்திதமராம் வயன்பெறுவீர் (திருமந். 55). . |
| வயன்கட்டு | vayaṉkaṭṭu n. See வசன்கட்டு. (யாழ். அக.) . |
| வயனண்டு | vayaṉaṇṭu n. <>வயல் + நண்டு. Field crab; கழனிநண்டு. (W.) |
| வயனம் 1 | vayaṉam n. <>vacana. 1. Word, speech; வசனம். சரபோசி . . . தனக்கேற்ற வயனத்தான் (சரபேந்திரகுறவஞ்சி, 11, 8). 2. The Vēdas; 3. Reproach, aspersion; |
| வயனம் 2 | vayaṉam n. See வயணம். (யாழ். அக.) வயனங்களா லென்றும் வந்து நின்றானே (திருமந். 1836). . |
| வயனர் | vayaṉar n. <>வயம் 4. Beings in the shape of birds; பறவை வடிவினர். வயனர் சூழு காவிரியும் (திருப்பு. 733). |
| வயா | vayā n. cf. அவா. [O. K. basiru.] 1. Great desire; வேட்கைப் பெருக்கம். (திவா.) (திருக்கோ. 383, உரை.) 2. See வயாநடுக்கம். (தொல். சொல். 371.) 3. Languor or lassitude during pregnancy; 4. Foetus; 5. Womb; 6. Pains of child-birth; 7. Pain; 8. Disease; |
| வயாக்கோட்டி | vayā-k-kōṭṭi n. <>வயா + கோட்டி 1. See வயாநடுக்கம். . |
| வயாநடுக்கம் | vayā-naṭukkam n. <>id.+. Morning sickness and morbid longings of a pregnant woman; கருப்பகாலத்துண்டாம் மசக்கை முதலியன. |
| வயாநோய் | vayā-nōy n. <>id.+. See வயாநடுக்கம். புளிங்காய் வேட்கைத் தன்று நின்மலர்ந்த மார்பிவள் வயா அநோய்க்கே (ஐங்குறு. 51). . |
| வயாப்பண்டம் | vayā-p-paṇṭam n. <>id.+ பண்டம்1. Eatables longed for by women during pregnancy; கருக்கொண்ட மகளிர் விரும்பும் தின்பண்டம். (யாழ். அக.) |
| வயாமது | vayāmatu n. cf. வயமது. Gulancha. See சீந்தில். (மூ. அ.) |
| வயாவு - தல் | vayāvu- 5 v. tr. <>வயா. To desire; விரும்புதல். காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின் (மலைபடு. 476). |
| வயாவு | vayāvu n. See வயா. (பிங்.) (சூடா.) . |
| வயாவுயிர் - த்தல் | vayā-v-uyir- v. intr. <>வயா+. (யாழ். அக.) 1. To yean; to give birth; கருவீனுதல். 2. To be relieved of pain; |
| வயான் | vayāṉ n. cf. வயவன். King-crow; காரிப்புள். (பிங்.) |
| வயானம் 1 | vayāṉam n. perh. vayas. Bird; பறவை. (சூடா.) |
| வயானம் 2 | vayāṉam n. <>மயானம். Cremation ground; சுடுகாடு. சவத்துக்குமுன்னே வயானத்துக்குக் கூட்டிப்போகிறதும் (Pudu. Insc. No. 847). |
| வயானன் | vayāṉaṉ n. See வயான். (யாழ். அக.) . |
| வயிக்கிராந்தம் | vayikkirāntam n. <>vikrānta. A mineral poison; See பாஷாணவகை. (மூ. அ). |
| வயிச்சிரவணன் | vayicciravaṇaṉ n. <>Vaišravaṇa. Kubēra, as the son of Višravas; [விச்சிரவசினுடைய குமாரன்] குபேரன். வழுவில் கொடையான் வயிச்சிரவணன் (திவ். பெரியாழ். 1, 3, 5). |
| வயிச்சுவதேவம் | vayiccuvatēvam n. <>vaišvadēva. A religious ceremony. See வைசுவதேவம். வயிச்சுவதேவ மென்னு மரும்பலி தருவாய் (சேதுபு. கவிசம்பு. 66). |
| வயிட்டணவம் | vayiṭṭanavam. n. <>vaiṣṇava. The Vaisṇava sect; வைஷ்ணவம். |
| வயிட்டணவன் | vayiṭṭaṇavaṉ n. <>vaiṣṇava. Hindu belonging to the Vaiṣṇava sect; வைஷ்ணவன். (திவ். பெரியாழ். 5, 1, 3). |
