Word |
English & Tamil Meaning |
|---|---|
| வயிடூயம் | vayiṭūyam n. See வயிடூரியம். வயிடூயம் வெயிற் கோமேதம் (திவிளை. மாணிக். 46). . |
| வயிடூரியம் | vayiṭūriyam n. <>vaidūrya. Cat's-eye, a variety of quartz exhibiting a yellowish opalescent radiation, one of navamaṇi, q.v.; நவமணிகளுள் ஒன்று. மருவிய மயிர்வயிடூரியம் (திருவாலவா. 25, 10). |
| வயிணவம் | vayiṇavam n. See வயிட்டணவம். . |
| வயிணவயாகம் | vayiṇava-yākam n. <>vaiṣṇava+. A Kind of Vēdic sacrifice; யாக வகை. வயிணவயாகங்களிங் கொருநூறு செய்தோர் (திருக்காளத். பு. பஞ்சாக்கர.22). |
| வயிணவன் | vayinavaṉ n. See வயிட்டணவன். . |
| வயிணவி | vayiṇavi n. <>Vaiṣṇavī. Vaiṣṇavī, one of catta-mātar, q.v.; சத்தமாதருளொருத்தி. வயிணவி துகளிலாக மெங்கணுங் காக்க (காசிக. வச்சி. 1). |
| வயித்தியம் | vayittiyam n. <>வயித்தியன். 1. Medical science; வைத்திய சாத்திரம். (W.) 2. Medical treatment; 3. Medical profession; |
| வயித்தியவிருத்தி | vayittiya-virutti n. <>vaidya+. Grant of lands to physicians for their services; வைத்தியம் செய்தவதற்காக வைத்தியர்களுக்கு மானியமாக விடும் நிலம். (S. I. I. i, 91.) |
| வயித்தியன் | vayittiyaṉ n. <>vaidya. Doctor, medical man; வைத்தியம் செய்வோன். (W.) |
| வயிதா | vayitā n. <>வாயிதா. Instalment; தவணை (W.) |
| வயிதேவி | vayitēvi n. <>Vaidēhī. Sītā; சீதை. (வீரசோ. தத்தி. 7, உரை.) |
| வயிந்தவம் 1 | vayintavam n. <>baindava. (Phil). Māyā; மாயை. வயிந்தவத்தின் கலக்கந்தருஞானம் (சி. சி. 11,2). |
| வயிந்தவம் 2 | vayintavam n. prob. saindhava. Horse; குதிரை. (W.) |
| வயிர் - த்தல் | vayir- 11 v.intr. <>வயிரம்1. To harden; வயிரங்கொள்ளுதல். வயிர்த்தனணிலத்தினுயர் வானமினி தென்பாள் (பாரத.சம்பவ.102). |
| வயிர் | vayir n. <>வயிர்1-. Sharpness; கூர்மை. (அரு. நி.) வச்சிரவயிர்வாயால் ... கொய்திட்டான் (சேதுபு. துத். 19). |
| வயிர் - த்தல் | vayir- 11 v. intr. <>வயிரம்2. To be angry; to bear grudge; செற்றங் கொள்ளுதல். |
| வயிர் | vayir n. <>வெதிர். 1. [K. bidir.] Bamboo; மூங்கில். முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூரெரி (ஐங்குறு. 395). 2. Large trumpet, horn, bugle; |
| வயிரக்கல் | vayira-k-kal n. <>வயிரம்1+. Diamond; வயிரமணி, 1. |
| வயிரக்குணங்கள் | vayira-k-kuṇaṅkaḷ n. <>id.+ குணம்1. Good qualities in diamonds, five in number, viz., eight kinds of palakai, six kinds of kōṇam, tārai, cutti, tarācam; எட்டுவகைப்பலகை, ஆறுவகைக் கோணம், தாரை, சுத்தி, தராசம் என வயிரத்திற் காணப்படும் ஐந்துவகை நற்குணங்கள். (சிலப். 14, 180, உரை.) |
| வயிரக்குப்பாயம் | vayira-k-kuppāyam n. <>id.+. Impenetrable coat of armour; உறுதியான கவசம். எடுத்தென்னுஞ் சொல்லுக்கிட்ட வயிரக்குப்பாயம். |
| வயிரக்குற்றம் | vayira-k-kuṟṟam <>id.+. Flaws in diamonds, 12 in number, viz., carai-malam, kīṟṟu, cappaṭi, piḷattal, tuḷai, kari, vintu, kāka-pātam, iruttu, kōṭi-y-illaṉa, kōṭi-murintaṉa, tārai-maḻuṅkal; சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை, கரி, விந்து, காகபாதம், இருத்து, கோடியில்லன, கோடிமுரிந்தன, தாரைமழுங்கல் என வயிரத்திற்காணப்படும் பன்னிரண்டு குற்றங்கள். (சிலப். 14, 180, உரை.) |
| வயிரகரணி | vayira-karaṇi n. perh. vajrakaraṇī. A stout-stemmed herb. See பெருநெருஞ்சி. (மலை.) |
| வயிரங்கி | vayiraṅki n. cf. பீரங்கி. An instrument for opening the touch-hole of a gun; துப்பாக்கியின் திரிவாயைத் துளைக்கும் சிறு கருவிவகை. (யாழ். அக.) |
| வயிரச்சங்கிலி | vayira-c-caṅkili n. <>வயிரம்1 + சங்கிலி1. A kind of necklace; சரப்பணியென்னும் அணி. (பிங்.) |
| வயிரச்சன்னம் | vayira-c-caṉṉam n. <>id.+. See வயிரப்பொடி. . |
| வயிரஞ்சாதி - த்தல் | vayira-cāti- v. intr. <>வயிரம்2 + சாதி1 -. To wreak vengeance; to fulfil one's hatred; பகை சாதித்தல். (யாழ். அக.) |
| வயிரத்தளம் | vayira-t-taḷam n. <>வயிரம்1+ தளம்3 . Flat diamond; தட்டையானவயிரம். (W.) |
| வயிரத்தனம் | vayira-t-taṉam n. <>id.+ தனம்1. Hardness; வன்குணம். (யாழ். அக). |
| வயிரத்தாரணை | vayira-t-tāraṇai n. <>id.+ தாரணை1. One of nava-tāraṇai, q.v. See வச்சிரதாரணை. |
