Word |
English & Tamil Meaning |
|---|---|
| வயிரவேர் | vayira-vēr n. perh. id.+. Indian madder. See சாயவேர். (மலை.) |
| வயிராக்கியம் | vayirākkiyam n. <>vairāgya. See வைராக்கியம். வேண்டும் வயிராக்கியத்துக்குற்ற வனிதாதி (வேதா. சூ. 143). . |
| வயிராக்கியன் | vayirākkiyaṉ n. <>வைராக்கியம். 1. One who is free from worldly desires; பற்றற்றவன். Loc. 2. Obstinate, pertinacious person; 3. Zealot; enthusiast; |
| வயிராகம் | vayirākam n. <>virāga. 1. Absence of worldly passions; பற்றின்மை. ஊன்று ஞானமோ டுயர்வயிராக நல்லொழுக்கம் (பிரபுலிங். கைலாச. 43). 2. Zeal, enthusiasm; 3. Obstinacy, pertinacity; |
| வயிராகி | vayirāki n. <>virāgin. 1. Pilgrim from North India, who has renounced the world; தேசசஞ்சாரியன வடநாட்டுத்துறவி. Colloq. 2. See வயிராக்கியன். (W.) |
| வயிராவி | vayirāvi n. See வயிராகி. (யாழ். அக.) . |
| வயிரி - த்தல் | vayiri- 11 v. intr. <>வயிரம்1. (W.) 1. To be hardened, as in feeling; மனம் முதலியன கடினமாதல். 2. To be obstinate; |
| வயிரி 1 | vayiri n. <>vairin. Enemy; சத்துரு. அவ்வயிரி செய்த (திருநூற். 34). |
| வயிரி 2 | vayiri n. <>வயிரம்1. Hard-hearted person; வன்னெஞ்சுடையவன். (யாழ். அக). |
| வயிரி 3 | vayiri n. <>U. bahri. Royal falcon. See வல்லூறு. (W.) |
| வயிரிப்பு | vayirippu n. <>வயிரி-. 1. Hardening; கடினமாகை. (W.) 2. Obstinacy; |
| வயிரியம் | vayiriyam n. cf. வயிரம்3. Woollen cloth; மயிர்ச்சீலை. (பிங்.) |
| வயிரியமாக்கள் | vayiriya-mākkaḷ n. <>வயிரியர்+. 1. See வயிரியர், 1. . 2. Professional musicians; |
| வயிரியர் | vayiriyar n. <>வயிர்.4 1.Professional dancers, actors; கூத்தர் விழவினாடும் வயிரியர் மடிய (மதுரைக் 628). 2. See வயிரியமாக்கள், 2. |
| வயிரோசனன் | vayirōcaṉaṉ n. <>Vairōcana. Mahābali, son of Virōcana; [விரொசனன் மகன்] மாவலி. வயிரோசனனுக்குல கீந்தவர் (வெங்கைக்கோ. 162). |
| வயிரோசனி | vayirōcaṉi n. perh. virēcanī. Indian jalap. See சிவதை. (சங். அக). |
| வயிலத்தி | vayilatti n. Sole of foot; உள்ளங்கால். (சங். அக.) |
| வயிற்றகமுடையான் | vayiṟṟakam-uṭai-yāṉ n. <>வயிறு+அகம்1+. Son, as born of one's womb; [வயிற்றுற் பிறந்தவன்] மகன். Loc. |
| வயிற்றளைச்சல் | vayiṟṟaḷaiccal n. <>id.+ அளை-. Dysentery; வயிற்றுநோய்வகை. |
| வயிற்றாசாரம் | vayiṟṟācāram n. <>id.+ ஆசாரம்1. Conduct dictated by necessitous circumstances; law of the belly; வயிற்றுக் கொடுமைக்காக நடந்துகொளும் நடந்தை. Loc. |
| வயிற்றாத்திரம் | vayiṟṟāttiram n. <>id.+ ஆத்திரம். Hunger; பசி. Loc. |
| வயிற்றாலெடு - த்தல் | vayiṟṟāl-eṭu- v. intr. <>id.+ எடு-. See வயிற்றாலேபோ-. Colloq. . |
| வயிற்றாலேபோ - தல் | vayiṟṟālē-pō- v. intr.<>id.+ போ-. To have diarrhoea or loose motions; வயிற்றுப்போக்காதல். Colloq. |
| வயிற்றாளி | vayiṟrāḷi n. <>id.+ ஆள்-. Belly-slave, glutton; பெருந்தீனிக்காரன. Loc. |
| வயிற்றான் | vayiṟṟāṉ n. <>id. Big-bellied man; பெருவயிறன். Loc. |
| வயிற்றிசிவு | vayiṟṟicivu n. <>id.+இசிவு. 1. See வயிற்றுவலி. (W.) . 2. See வயிற்றுநோவு, 2. |
| வயிற்றிரைச்சல் | vayiṟṟiraiccal n. <>id.+ இரை2-. Rumbling of the bowels; வாயுவால் வயிற்றில் சத்தமுண்டாகை. Loc. |
| வயிற்றிலடி - த்தல் | vayiṟṟil-aṭi- v. tr. <>id.+ அடி-. To deprive a person of his food or of his means of livelihood, as striking at the stomach; சீவனத்தைக் கெடுத்தல். Colloq. |
| வயிற்றிலிட்டுக்கொள்(ளு) - தல் | vayiṟ-ṟil-iṭṭu-k-koḷ- v. intr. <>id.+. 1. See வயிற்றாலேபோ-. . 2. To be affected physically, as by a calamity; |
| வயிற்றிற்கிருமி | vayiṟṟiṟ-kirumi n. <>id.+. See வயிற்றுக்கிருமி. (W.) . |
| வயிற்றிற்கொள்(ளு) - தல் | vayiṟṟiṟ-koḷ- v. tr. <>id.+கொள்-. 1. To eat; உண்ணுதல். தம் வயிற்றிற் கொண்டு (திவ். திருவாய். 8, 7, 9). 2. To protect; 3. To retain in memory; to keep in mind; |
