Word |
English & Tamil Meaning |
|---|---|
| வயிரப்பசை | vayira-p-pacai n. <>id.+. Glue; வச்சிரப்பசை. |
| வயிரப்படை | vayira-p-paṭai n. <>id.+. Thunderbolt; வச்சிராயுதம். (பிங்.) |
| வயிரப்பொடி | vayira-p-poṭi n. <>id.+. Small-sized diamond; சிறுவயிரம். Loc. |
| வயிரப்பொலி | vayira-p-poli n. <>id.+. Mature grain of corn; முற்றிய தானியமணி. Loc. |
| வயிரம் 1 | vayiram n. <>vajra. 1. Thunderbolt; வச்சிராயுதம். (பிங்.) 2. Diamond, one of nava-maṇi, q.v.; 3. Core of a tree, as the hardest part; 4. Robustness, firmness; 5. Strength; 6. Sharpness, pointedness; 7. Ornamental knob, as on a tusk or horn; 8. Club; 9. The 22nd nakṣatra. See திருவோணம். (திவா.) 10. The flat metal piece of a kind of ear-ring; |
| வயிரம் 2 | vayiram n. <>vaira. Anger; animosity; செற்றம். வாள்வயிரம் விற்கு மடநோக்கி (சீவக.645). |
| வயிரம் 3 | vayiram n. cf. வயிரியம். Woollen cloth; மயிர்ப்படாம். (நாமதீப. 55.) |
| வயிரமணி | vayira-maṇi n. <>வயிரம4¢+. 1. See வயிரம், 2. . 2. Bead of gold; |
| வயிரமுடி | vayira-muṭi n. <>id.+. 1. Crown set with diamonds; வயிரம் இழைத்த கீரீடம். 2. Head-ornament of an idol, set with diamonds and other precious stones; |
| வயிரமுத்து | vayira-muttu n. <>id.+ முத்து2. Pearl of the best quality; ஆணிமுத்து. (W.) |
| வயிரமேகவிருத்தி | vayiramēka-virutti n. A treatise on grammar; ஒர் இலக்கண நூல். (தக்கயாகப்.16, உரை.) |
| வயிரவசாந்தி | vayirava-cānti n. <>Bhairava+šānti. Ceremony of appeasing Bhairava by making offerings in the sacrificial fire at the funeral ceremonies of a person who dies an unnatural death; துர்மரணம் நேர்ந்தவர்களுக்குப் பிராயச்சித்தமாக வயிரவக்கடவுளைக் குறித்துச் செய்யுஞ் சாந்திச்சடங்குவகை. (W.) |
| வயிரவபூசை | vayirava-pūcai n. <>id.+ pūjā. Worship of Bhairava performed on return from a pilgrimage; தீர்த்தயாத்திரை சென்று திரும்பிவந்தவுடன் வயிரவக்கடவுளுக்குச் செய்யும் பூசை. Nā. |
| வயிரவம் | vayiravam n. <>bhairava. 1. (šaiva.) The Bhairava sect; ஓர் அகப்புறச்சமயம். சிலர்கடாம் வயிரவத்தினை மேலெனத் தேர்வார் (திருக்காளத். பு. 30, 26). 2. Terror, fear, horror; |
| வயிரவராதி | vayira-v-arāti n. prob. id.+ ārādhin. (சங். அக). 1. See வலம்புரிச்சங்கு. . 2. East-Indian rosebay. |
| வயிரவல்லி | vayira-valli n. <>vajra-vallī. Square-stalked vine. See பிரண்டை. (மூ. அ.) |
| வயிரவளை | vayira-vaḷai n. perh. வயிரம்1+ வளை-. Field-gram. See சிறுபயறு, 2. (மலை.) |
| வயிரவன் | vayiravaṉ n. <>Bhairava. 1. A manifestation of šiva; சிவமூர்த்தங்களுளொன்று. 2. A species of amaranth, Amaranthus compestris; |
| வயிரவன்மடை | vayiravaṉ-maṭai n. <>வயிரவன்+மடை1. Oblations offered to Bhairava; வயிரவர்க்கிடும் பலி. (W.) |
| வயிரவன்வாகனம் | vayiravaṉ-vākaṉam n. <>id.+. Dog, as the vehicle of Vayiravaṉ; நாய். சீராடையற்ற வயிரவன்வாகனஞ் சேரவந்து (தனிப்பா, i, 186, 14). |
| வயிரவாள் | vayira-vāḷ n. <>வயிரம1¢+. Thunderbolt. See வயிரப்படை. (யாழ். அக.) . |
| வயிரவாளி | vayira-vāḷi n. <>id.+. 1. Adamantine arrow; வயிரவுறுதியுள்ள அம்பு. (W.) 2. A woman's ear-ornament; |
| வயிரவி | vayiravi n. <>Bhairavī. 1. Durgā. See பைரவி, 1. 2. (Mus.) A musical mode. |
| வயிரவிழா | vayira-viḻā n. <>வயிரம்1+. Diamond jubilee; அறுபதாமாண்டு நிறைவுக் கொண்டாட்டம். Mod. |
| வயிரவூசி | vayira-v-ūci n. <>id.+ ஊசி1. 1. Glazier's diamond for cutting glass; கண்ணாடியறுக்குங் கூரிய வயிரம். வயிரவூசியு மயன்வினையிரும்பும் (நன்.265, சங்கர.) 2. Diamond-drill; needle for boring pearls; |
