Word |
English & Tamil Meaning |
|---|---|
| வயிறுகாந்தல் | vayīṟu-kāntal n. <>id.+காந்து-. See வயிற்றுப்புகைச்சல். . |
| வயிறுகாந்துதல் | vayiṟu-kāntutal n. <>id.+id. See வயிறுகாய்தல். (W.) . |
| வயிறுகாய்தல் | vayiṟu-kāytal n. <>id.+ காய்1-. Fasting; being pinched with hunger; பட்டினியாயிருக்கை. வயிறுகாய் பெரும்பசி (மணி. 14, 6). |
| வயிறுகிண்டுதல் | vayiṟu-kiṇṭutal n. <>id.+ கிண்டு-. See வயிறுகாய்தல்.Loc. . |
| வயிறுகிள்ளுதல் | vayiṟu-kiḷḷutal n. <>id.+கிள்ளு-. See வயிறுகாய்தல். . |
| வயிறுகுத்துதல் | vayiṟu-kuttutal n. <>id.+. Having pain in the stomach; வயிற்றில் வலியுண்டாகை. (தொல். சொல்.15, உரை.) |
| வயிறுகுளிர் - தல் | vayiṟu-kuḷir- v. intr. <>id.+. To be refreshed, as by food; to be satisfied; திருத்தியடைதல். அவன் வயிறுகுளிர்ந்தான். (W.) |
| வயிறுகூப்பிடுதல் | vayiṟu-kūppiṭutal n. <>id+கூப்பிடு1-. See வயிறழுதல் Loc. . |
| வயிறுகொட்டல் | vayiṟu-koṭṭal n. <>id.+கொட்டு-. Dysentery; சீதபேதி. (M. L.) |
| வயிறுதள்ளுதல் | vayiṟu-taḷḷutal n. <>id.+தள்ளு-. Colloq. 1. Being pot-bellied; தொந்தி விழுகை. 2. Becoming pregnant; |
| வயிறுதாரி | vayiṟu-tāri n. <>id.+தாரி4. 1. Person with a big belly; pot-bellied person; பெருவயிறன். கணபதியேல் வயிறுதாரி (தேவா. 1053, 2). 2. Glutton; 3. Extremely selfish person; |
| வயிறுதிறத்தல் | vayiṟu-tiṟattal n. <>id.+ திற-. 1. Giving birth to children; மகப்பெறுகை. Loc. 2. Being gluttonous; |
| வயிறுநோ - தல் | vayiṟu-nō- v. intr. <>id.+. To have labour-pains; பிரசவவேதனை யுண்டாதல். |
| வயிறுப்பசம் | vayiṟuppacam n. <>id.+உப்பசம். Tympanites; உணவு சீரணமாகாமல் வயிறுபெருக்கை. Colloq. |
| வயிறுபிடி - த்தல் | vayiṟu-piṭi- v. intr. <>id.+. To press one' stomach with one's hands, as in grief; துக்கக்குறியாக வயிற்றைப் பிசைதல். ஏத்தாத நாளைக்கும் வயிறுபிடிக்கவேண்டும் படியான விஷயம் (ஈடு, 10, 1, 2). |
| வயிறுபுழு - த்தல் | vayiṟu-piḻu- v. intr. <>id.+. To conceive; கருக்கொள்ளுதல். அவள் அடிக்கடி வயிறுபுழுத்தவண்ணம் இருக்கிறாள். |
| வயிறுபேதித்தல் | vayiṟu-pētittal n. <>id.+ பேதி-. See வயிறுகழிதல். (யாழ். அக.) . |
| வயிறுபொருமுதல் | vayiṟu-porumutal n. <>id.+ பொருமு-. 1. See வயிறுப்பசம். . 2. See வயிற்றெரிச்சல், 2. |
| வயிறுவளர் - த்தல் | vayiṟu-vaḷar- v. intr. <>id.+. See வயிறுகழுவு-. (யாழ். அக.) . |
| வயிறுவாய் - த்தல் | vayiṟu-vāy- v. <>id.+. tr. To bring forth a child; மகப்பெறுதல். திதியென்பாள்... அசுரர்தமை வயிறு வாயத்தாள் (கம்பரா. சடாயுகாண். 25). -intr. To remain in the womb, as foetus; |
| வயிறுவிடுதல் | vayiṟu-viṭutal n. <>id.+ விடு-. See வயிறுகழிதல். (யாழ். அக.) . |
| வயிறுவீக்கம் | vayiṟu-vīkkam n. <>id.+. Swelling of the abdomen, Ascites; வயிறு வீங்குகை. |
| வயிறுவெடித்தல் | vayiṟu-veṭittal n. <>id.+ வெடி-. Bursting, as with food, envy or laughter; பேருண்டி பெருஞ்சிரிப்பு முதலியவற்றால் வயிறு வெடிப்பதுபோலாகை. Colloq. |
| வயிறுவே - தல் | vayiṟu-vē- v. intr. <>id.+. See வயிறெரி-. . |
| வயிறூதுகை | vayiṟūtukai n. <>id.+ ஊது-. See வயிறுபொருமுதல். (W.) . |
| வயிறெடுத்தல் | vayiṟeṭuttal n. <>id.+ எடு-. See வயிறுகழிதல். . |
| வயிறெரி - தல் | vayiṟeri- v. intr. <>id.+ எரி1-. 1. To be envious, jealous; பொறாமை கொள்ளுதல். அவள் சம்பந்தத்தைக்கண்டு வயிறெரிகிறாள். 2. To be moved by sorrow or pity; |
| வயிறெரித்தல் | vayiṟerittal n. <>வயிறெரி-. See வயிற்றெரிச்சல்.மிகவும் வயிறெரித்தலுக்கு உடலா யிருக்குமிறே (ஈடு, 4, 3, 4). . |
| வயிறெரிவு | vayiṟerivu n. <>id. See வயிற்றெரிச்சல். (W.) . |
| வயிறெற்று - தல் | vayiṟeṟṟu- v. intr. <>id.+ எற்று-. See வயிறடி-. வயிறெற்றி யெற்றி (கம்பரா. கைகேசிசூழ்.47). . |
| வயின் | vayiṉ n. 1. Place; இடம். (பிங்.) யாழ்ப்பாணர் வயின்வயின் வழங்குபாடல் (கம்பரா. நாட்டுப். 8). 2. Side; 3. House; 4. Belly, stomach; 5. Proper stage, as in boiling rice; 6. Order; 7. Boundary; 8. Security; 1. Sign of the locative; 2. An expletive; |
