Word |
English & Tamil Meaning |
|---|---|
| வரதனம் | varataṉam n. perh.வா-+ தனம்2. See வர்த்தனை2. Loc. . |
| வரதனு | vara-taṉu n. vara-tanu. Beauty of form; மெய்யழகு. (யாழ். அக.) |
| வரதஹஸ்தம் | varata-hastam n. <>vara-da+hasta. A hand-pose symbolic of readiness to grant boons; வரந்தருதற்கு அரிகுறியாக அமையும் கை. |
| வரதாரு | vara-tāru n. <>vara+dāru. Teak; See தேக்கு3, 1.(மூ. அ.) |
| வரதானம் | vara-tāṉam n. <>id.+dāna. The granting of a boon; வரமளிக்கை. |
| வரதுங்கராமன் | varatuṅkarāmaṉ, n. A later Pāṇdya king, author of Piramōttara-kāṇṭam; பிரமோத்தரகாண்டம் இயற்றிய பிற்காலத்துப் பாண்டியன். |
| வரதை | varatai n. <>vara-dā. 1. Pārvatī, as bestowing boons; பார்வதி. (கூர்மபு. திருக். 22.) 2. Maiden; |
| வரந்தருவார் | varantaruvār n. A poet, son of Villiputtūr-āḻvār; வில்லிபுத்தூராழ்வாரின் புதல்வராகிய ஒரு புலவர். (பாரத. சிறப்புப். 23, தலைப்பு.) |
| வரநதி | vara-nati n. <>vara-nadī. Th Ganges; கங்கை. மன்னவன் ... வரநதிக் கரையிலுற்றான் (பாகவ. 1, தன்மபுத்திரன். 8). |
| வரநிச்சயம் | vara-niccayam n. vara+. Selecting the bridegroom for a particular bride; மணமகனை இன்னானென்று தீர்மானித்துகொள்ளுகை. |
| வரப்படி | varappaṭi n. வரப்பு+அடி3. Portion of a field, adjoining the ridges; வரப்பின் அருகிலுள்ள வயற்பகுதி. |
| வரப்படுத்து - தல் | vara-p-paṭuttu- v. tr. <>வா-+. 1. To cram, as a lesson; நெட்டுருப் பண்ணுதல். பாடத்தை வரப்படுத்துகிறான். 2. To credit; to appropriate; to accept whatever is offered; |
| வரப்பண்ணு - தல் | vara-p-paṇṇu- v. tr. <>id.+. 1. To cause to come; to bring; to produce; வரவழைத்தல். 2. See வரப்படுத்து-, 1. |
| வரப்பற்று - தல் | vara-p-paṟṟu- v. tr. <>id.+. 1. To get into one's possession; to take hold of; to clutch eagerly; தன்வசமாக்குதல். 2. See வரப்படுத்து-, 2. |
| வரப்பார் - த்தல் | vara-p-pār- v. <>id.+. intr. To await; to wait for; பிறர் வரவுக்காகக் காத்தல். (யாழ். அக.)--tr. To cause to come; |
| வரப்பிரசாதம் | vara-p-piracātam n. <>vara+. Gracious gift from the gods; கடவுளரின் அருட்கொடை. தெய்வச்செயல் வரப்பிரசாதம் (தனிச். சிந். 231, 18). |
| வரப்பிரசாதி | vara-p-piracāti n. வரப்பிரசாதம். Bestower of boons; வரங்களை யருள்பவர். பழனியாண்டவர் நல்ல வரப்பிரசாதி. |
| வரப்பிரதானம் | vara-p-piratāṉam n. <>வரம்1+. 1. See வரதானம். . 2. Excellent gift; |
| வரப்பிரதை | varappiratai n. <>varapradā. 1. Benevolent goddess; வரமளிக்கும் தேவதை. 2. Lopāmudrā, the wife of Agastya; |
| வரப்பு | varappu n. <>வரம்பு. 1. Ridge of a field; வயல் வரப்பு. 2. Limit, boundary; |
| வரப்புக்கடா | varappu-k-kaṭā n. <>வரப்பு+கடா2. Field-crab; நண்டுவகை. (சங். அக.) |
| வரப்புச்சுண்டெலி | varappu-c-cuṇṭeli n. <>id.+. Field-mouse; எலிவகை. |
| வரப்புள் | varappuḷ n. <>id.உள்2. Paddyfield; வயல். (பிங்.) |
| வரப்பெலி | varappeli n. <>id.+எலி1. Field-rat; See வயலெலி. |
| வரப்போ - தல் | vara-p-pō- v. intr. <>வா+. To be about to come; to come in the future; சம்பவிக்கக்கூடியதாதல். உனக்கு நல்லகாலம் வரபோகிறது. |
| வரபட்சம் | vara-paṭcam n. vara+. The bridegroom's party; மணமகனைச் சார்ந்தவர். (யாழ். அக.) |
| வரபலம் 1 | vara-palam n. <>id.+ bala. Strength due to divine gifts; வரத்தினாலாகிய வலிமை. இராவணன் வரபல புஜபலங்களால் மிக்கவன். |
| வரபலம் 2 | vara-palam n. <>vara-phala. Coconut-tree; தென்னைமரம். (சங். அக.) |
| வரம் 1 | varam n. <>vara. 1. Boon, gift, blessing by a deity or a great person; தெய்வம் முதலியவற்றாற் பெறும் பேறு. காதலி னுவந்து வரங்கொடுத் தன்றே (திருமுரு. 94). 2. Grace, favour, help; 3. Blessing; 4. Supplication, solicitation, entreaty, request, as made to a deity or a great person; 5. Desire; 6. Excellence, eminence; 7. A treasure; 8. Enclosed space; 9. Sparrow; 10. Ant; |
