Word |
English & Tamil Meaning |
|---|---|
| வரலாற்றுமுறைமை | varalāṟṟu-muṟaimai n. <>வரலாறு+. Ancient and unbroken tradition or usage; பரம்பரையாகக் கையாளப்படும் அடிப்பட்ட வழக்கு. மரபு வழுவாவது வரலாற்று முறைமையின் மயங்கச் சொல்லுவது (நன். 374, மயிலை) . |
| வரலாற்றுவஞ்சி 1 | varalāṟṟ-vaci n. <>id.+ வஞ்சி2. A panegyric in vaci-p-pā on the noble birth, greatness and fame of a hero, one of the 96 pirapantam , q.v. ; பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் தலைவனது குலப்பிறப்பு முதலிய பல சிறப்பையும் கீர்த்தியையும் வஞ்சிப்பாவாற் கூறும் பாடல்வகை . |
| வரலாற்றுவஞ்சி 2 | varalāṟṟu-vaci n. <>id.+ வஞ்சி3. A poem describing the march of an army to the battle-field ; போர்க்களத்துச் செல்லும் படையெழுச்சியைக் கூறும் பிரபந்தம். (இலக். வி. 869) . |
| வரலாறு | varal-āṟu n. <>வா + ஆறு1. 1. Order of events; நிகழ்ச்சிமுறை. 2. History; 3. Antecedents; 4. Circumstances; 5. Details; 6. Means, device; 7. Example, illustration ; |
| வரவண்ணினி | varavaṇṇiṉi n. <>varavarṇinī. (யாழ்.அக.) 1. Lakṣmī; இலக்குமி. 2. Pārvatī; 3. Sarasvatī; 4. Chaste woman; 5. Woman; 6. Turmeric; 7. A colour ; |
| வரவர | vara-vara adv. <>வா-+ வா-. 1. Gradually ; படிப்படியாய். வரவர அறிவு பெருகும். 2. Further and further ; |
| வரவரமுனி | varavaramuṉi n. A Vaiṣṇava ācārya ; See மணவாளமாமுனி. |
| வரவழை - த்தல் | vara-v-aḻai- v. tr. <>வா- + அழை-. To send for, invite ; வருவித்தல். மாதை யீங்கு வரவழைத்தே (வெங்கைக்கோ. 336) . |
| வரவாயு | varavāyu n. Corr. of வரள்வாயு . |
| வரவிடு - தல் | vara-viṭu v. tr. <>வா-+. To send ; அனுப்புதல். இவையெல்லாம் வரவிடுதற்கு முன்னேயும் (திவ். பெரியாழ், 1, 3, 2, வ்யா.) . |
| வரவிருத்தன் | varaviruttaṉ n. <>Varavṟddha. šiva ; சிவபிரான். (யாழ்.அக). |
| வரவு | varavu n. <>வா- [K. baravu.] 1. Coming, advent; வருகை. செலவினும் வரவினும் (தொல். சொல். 28). படிகாரிரெம் வரவு சொல்லுதிர் (கம்பர. பள்ளிபடை. 1). 2. Income, receipts; 3. History; 4. Origin; 5. Way, path; 6. Worship; |
| வரவுதாழ் - த்தல் | varavu-tāḻ-, v. intr. <>வரவு+. To delay in coming; to be delayed ; தாமதித்து வருதல். உணவு வரவு தாழ்த்தது (கம்பரா. பிரமாத்திர.88) . |
| வரவுமுறை | varavu-muṟai n. <>id.+. Source of income ; வருவாய். Loc. |
| வரவுவை - த்தல் | varavu-vai- v. tr. <>id.+. To credit in account; to enter the receipt of money, as on a pro-note or document ; செலுத்திய தொகையைக் குறித்து எழுதிவைத்தல். |
| வரவெக்கை | vata-vekkai n. prob. வரள்-+. வெக்கை. A cattle-disease ; See அடைப்பான்.1. (G. Tj. D. I, 11.) |
| வரவெதிர் - தல் | varavetir- v. tr. <>வரவு+ எதிர்-. 1. To wait for; to wait the arrival of; வரவுநோக்கியிருத்தல். 2. See வரவேலை-. |
| வரவெதிர்ந்திருத்தல் | varavetirntiruttal n. <>வரவெதிர்-+. (Puṟap.) A theme in which the heroine is described as awaiting the arrival of the hero at her abode ; தலைவி தன்னிருப்பிடத்துத் தலைவன் வருகையை எதிர்பார்த்திருத்தலைக் கூரும் புறத்துறை. (சங். அக) . |
| வரவேல் - தல்-[வரவேற்றல்] | varavēl- v. tr. <>வரவு + ஏல். To welcome ; எதிர்கொண்டு அழைத்தல். |
| வரவேற்பு | varavēṟpu n. <>வரவேல்-. Reception, welcome ; எதிர்கொண்டுபசரிக்கை . Mod. |
| வரவேற்புக்கழகம் | varavēṟpu-k-kaḻakam n. <>வரவேற்பு+. Reception committee ; பெரிய வரை உபசரித்து அழைப்பதற்காக நிருமிக்கப்பட்ட சபை . Mod. |
| வரவேற்புச்சபை | varavēṟpu-c-capai n. <>id.+. See வரவேற்புக்கழகம். Mod. . |
