Word |
English & Tamil Meaning |
|---|---|
| வரவேற்புப்பத்திரம் | varavēṟpu-p-pattiram n. <>id.+. Address of welcome ; பெரியோரை உபசாரங்கூறி அழைக்கும் பத்திரிகை . Mod. |
| வரவை | varavai n. <>வர-. 1. Plot of paddy-field, compartment in a paddy-field bounded by ridges; வயற் றாக்கு. (W.) 2. Tax; |
| வரள்(ளு) - தல் | varaḷ- 2 v. intr. See வறள்-. . |
| வரள்வாயு | varaḷ-vāyu n. <>வரள்-+. A disease of the colon; குடலைச் சுருட்டிக்கொள்ளும் நோய்வகை. Loc. |
| வரளாரை | varaḷ-ārai n. prob. id.+ ஆரை1 . A species of aquatic cryptogamous plant ; ஆரைவகை. (யாழ். அக) . |
| வரற்கியம் | varaṟkiyam n. cf. வராகி. Lesser galangal ; See சிற்றரத்தை, 1 (சங். அக). |
| வரன் | varaṉ n. <>vara. 1. Superior, great person; சிறந்தவன். தமிழ் முனிவரன் (தக்கயாகப். 40). 2. God; 3. Brahmā; 4. Person belonging to the piramavarar class of cīvaṉ-muttar; 5. Elder brother; 6. Bridegroom; 7. Husband ; |
| வரன்முறை | varaṉ-muṟai n. <>வா-+. 1. Tradition ; அடிப்படவந்தமுறை பாடினை யருமறை வரன்முறையால் (தேவா, 80, 3). 2. Origin, history; 3. Fate; 4. Courtesy, respect to superiors ; |
| வரன்று - தல் | varaṉṟu- 5v. tr. To scrape; to gather up ; வருதல். மணிவரன்றி வீழுமருவி (நாலடி, 369) . |
| வராக்கடன் | varā-k-kaṭaṉ n. <>வா+ ஆ neg.+. Bad debt ; செலவெழுதவேண்டிய கடன். Colloq. |
| வராக்கு | varākku n. A small watermelon ; See கொம்மட்டி, 1 (சங். அக) . |
| வராகக்கிரந்தி | varāka-k-kiranti n. <>varāha-krāntā. A sensitive plant ; See தொட்டால்வாடி, 1 . |
| வராககர்ணி | varākakarṇi n. <>vārāha-karṇī. Indian winter cherry ; See அமுக்கிரா. (தைலவ) . |
| வராககற்பம் | varāka-kaṟpam n. <>Varāha+. The age when Viṣṇu assumed His boarincarnation ; திருமால் வராகாவதாரங் கொண்ட காலம். (பரிபா, 2, 16, உரை) . |
| வராகத்துவாதசி | varāka-t-tuvātaci n. <>id.+. A feast in honour of Viṣṇu, held on the 12th day in the bright fortnight of the lunar month mākam ; மாகமாதத்தில் சுக்கிலபட்சத்துத் துவாதசியன்று திருமாலைக்குறித்துக் கொண்டாடப்படும் விரதம். (பஞ்.) |
| வராகபுடம் | varāka-puṭam n. <>id.+. Calcining metals with 20 or 50 cakes of cowdung ; 20 அல்லது 50 எருவிட்டுப் போடப்படும் புடம். (மூ. அ) . |
| வராகபுராணம் | varāka-purāṇam n. <>id.+. A chief Purāṇa , one of patin-eṇpurāṇam , q.v. ; பதினெண்புராணத்தொன்று . |
| வராகம் 1 | varākam n. <>varāha. 1. Boar, swine; பன்றி கோலமேனி வராகமே (திருவாச, 30). 2. The boar-incarnation of Viṣṇu, one of tacāvatāram , q.v.; 3.(šaiva.) See வராகதனம் மாநிருத்தங் குந்சிதங் குந்சிதம் வராகம் (தத்துவப்.108). 4. An Upanishad, one of 108 ; 5. A chief purāṇa; 6.The region at the foot of mt. malayam; 7. A mathematical treatise; 8. cf. வராகி. Moosly or weevil root. |
| வராகம் 2 | varākam n. <>varāka. Battle ; போர். (யாழ். அக) . |
| வராகமிகிரர் | varāhamikira n. <>Varāhamihira. An ancient astronomer and mathematician, author of many treatises, 6th cent. ; ஆறாம் நூற்றாண்டிலிருந்தவரும் கணிதநூலில் வல்ல வரும் வானசாஸ்திர நூல்கள் பல இயற்றியவருமான ஆசிரியர். |
| வராகன் 1 | varākaṉ n. <>Varāha. 1. Viṣṇu, in His boar-incarnation; வராகரூபியான திருமால் (பிங்). 2. Pagoda, a gold coin=31/2 rupees, as bearing the image of a boar; 3. Pointed leaved hogweed. |
