Word |
English & Tamil Meaning |
|---|---|
| வரிக்கோலம் | vari-k-kōlam n. <>id.+கோலம்.1 Ornamental figures or lines drawn on the breast; தொய்யிலின் பத்திக்கீற்று. (சிலப். 5, 226, அரும்.) |
| வரிக்கோலா | vari-k-kōlā n. <>id.+கோலா.1 Half-beak, sea-fish, dark bluish green, attaining 18 in. in length, Hemirhamphus far; சருநீலப்பச்சை நிறமுடையதும் 18 அங்குல வளர்ச்சியுடையதுமான கடல்மீன்வகை. |
| வரிகயிறு | vari-kayiṟu n. <>வரி3-+. Rope used for fastening the load in a cart; வண்டியில் மூட்டையைப் பிணைத்துக்கட்டுங் கயிறு. (W.) |
| வரிகாரம் | vari-kāram n. perh. வரி6+காரம்1. (சங். அக.) 1. Borax; வெங்காரம். 2. Alum; |
| வரிகோணியல் | vari-kōṇiyal n. <>வரி2-+. Double-bag, a pair of bags, with their mouths joined together used in loading a pack-ox on either side; பொதிமாட்டின் இருபக்கமும் பாரம் ஏற்றுமாறு சேர்த்துத்தைத்த கோணி. |
| வரிகோலம் | vari-kōlam n. <>id.+கோலம்1. See வரிக்கோலம். அவரெழுது வரிகோலம் (சிலப். 5, 226). . |
| வரிச்சந்தி | vari-c-canti n. <>வரி1+ சந்தி1. Place where streets meet, cross-roads; பலதெருக்கள் கூடுமிடம். (பிங்.) |
| வரிச்சம்பா | vari-c-campā n. <>id.+சம்பா1. A kind of striped paddy, sown in Cittirai and maturing in five months; சித்திரை மாதத்துவிதைத்து ஐந்து மாதங்களிற் பயிராவதும் மேலிரேகை யுடையதுமான சம்பாநெல்வகை. |
| வரிச்சல் | variccal n. <>வரி3-. See வரிச்சு. (W.) . |
| வரிச்சலாணி | variccal-āṇi n. <>வரிச்சல்+ஆணி1. Nails for fastening reepers; வரிச்சலிற்பதிக்கும் ஆணி. (W.) |
| வரிச்சாணி | variccāṇi n. <>வரிச்சு+id. See வரிச்சலாணி. (W.) . |
| வரிச்சு | variccu n. <>வரி3-. cf. வரிச்சல். Reeper of a roof; transverse lath; கட்டுவரிச்சல். வரிச்சுமேல் விரிச்சு மூட்டியே (கம்பரா. சித்திர. 46). |
| வரிச்சுருள் | vari-c-curuḷ n. <>வரி1+. A kind of leech; செவ்வட்டை. (சங். அக.) |
| வரிசந்தி | vari-canti n. See வரிச்சந்தி. (யாழ். அக.) . |
| வரிசை 1 | varicai n. <>வரி1. [T. varusa.] 1. Order, regularity; ஒழுங்கு. (சூடா.) 2. Line, row, series; 3. Turn in duty or work; 4. Distinctive mark of honour or privilege granted by a royal or other authority; 5. Insignia of royalty; 6. Honour; 7. Excellence, eminence; 8. Merit, worth; 9. Regard; 10. Good conduct; 11. Good circumstances; 12. Present, especially to a daughter on marriage or other occasion; 13. Rate; proportion; |
| வரிசை 2 | varicai n. <>வரி5. Village dues or rent; கிராம வரிவகை. (I. M. P. Tp. 293.) இந்நிலம் இரண்டு மாவுக்கும் வரிசையாவது (Pudu. Insc. 613). |
| வரிசைக்காரன் | varicai-k-kāraṉ n. <>வரிசை1+ காரன1¢. (W.) 1. Well-behaved man; நன்டைத்தையுள்ளவன். 2. One whose turn of duty is come; |
| வரிசைக்கிரமம் | varicai-k-kiramam n. <>id.+. Proper or regular order; ஒழுங்குமுறை. |
| வரிசைக்குப்பச்சை | varicaikku-p-paccai n. cf. வரிக்குப்பச்சை. A variety of green stone; See நாகப்பச்சை. (யாழ். அக.) |
| வரிசைக்குற்றி | varicai-k-kuṟṟi n. <>வரிசை1+. Stumps of wood set in a row in a brick-kiln; செங்கற்சூளையில் வரிசையாக அடுக்கும் விறகுக்கட்டை. Nā. |
| வரிசைச்சுரம் | varicai-c-curam n. <>id.+சுரம1¢. Intermittent fever; முறைக்காய்ச்சல். |
| வரிசைசெய் - தல் | varicai-cey- v. intr. <>id.+. 1. To render civility or courtesy; மரியாதை செய்தல். (W.) 2. See வரிசையெடு-. |
| வரிசைபார் - த்தல் | varicai-pār- v. intr. <>id.+. To be punctilious, formal or ceremonious; ஓழுங்குமுறையை அளவுக்குமிஞ்சிக் கவனித்தல். (W.) |
| வரிசைமகளிர் | varicai-makaḷir n. <>id.+. A class of female songsters; விறவியர். அடுப்புத்தொழிற் குரியரல்லாத வரிசைமகளிரும் (பதிற்றுப் 18, 6, உரை). |
