Word |
English & Tamil Meaning |
|---|---|
| வருடகாலம் | varuṭa-kālam n. <>வருடம்2+. See வருடாகாலம். (நாமதீப. 560.) . |
| வருடசேடம் | varuṭa-cēṭam n. <>வருடம்+சேடம்1. (Astron.) Annual anomaly, being the difference in time between the sunrise on the New Year Day and the commencement of the new year; வருடப்பிறப்பன்று சூரியோதயந் தொடங்கிப் புதுவருடம் பிறக்கும் வரையுள்ள காலம். (W.) |
| வருடதேவதை | varuṭa-tēvatai n. <>id.+. The presiding deity of the year; குறித்த வருடத்திற்குரிய தேவதை. (யாழ். அக.) |
| வருடப்பாதி | varuṭa-p-pāti n. <>id.+. Half year, being the period of the sun's course northward or southward, from solstice to solstice; அயனம். (நாமதீப. 557, உரை.) |
| வருடபலன் | varuṭa-palaṉ n. <>id.+. 1. See வருஷபலன், 1. . 2 The predictions for the year calculated from the position of the planets at the commencement of the new year; |
| வருடபுட்பம் | varuṭa-puṭpam n. See வருஷபுஷ்பம். (தைலவ. தைல. 46.) . |
| வருடம் 1 | varuṭam n. <>varṣa. 1. Year; ஆண்டு. (பிங்.) 2. Rain; 3. See வருஷம், 3. (நாமதீப. 484.) |
| வருடம் 2 | varuṭam n. <>varṣā. See வர்ஷருது. (பிங்.) . |
| வருடவரன் | varuṭavaraṉ n. <>varṣa-vara. Eunuch; அலி. (யாழ். அக.) |
| வருடாகாலம் | varuṭā-kālam n. <>varṣākāla. Rainy season; கார்காலம். (யாழ். அக.) |
| வருடாங்கம் | varuṭāṅkam n. <>varṣāṅga. Month; மாதம். (யாழ். அக.) |
| வருடாந்தம் | varuṭāntam n. <>varṣānta. End or close of a year; வருடமுடிவு. (யாழ். அக.) |
| வருடாந்தரம் 1 | varuṭāntaram adj. & adv. See வருஷாந்தரம்1. . |
| வருடாந்தரம் 2 | varuṭāntaram n. See வருடாந்தம். . |
| வருடி - த்தல் | varuṭi 11 v. tr. & intr.<>vṟṣ. See வருஷி-. தழையு மாரி வருடியா தோர்வருடம் (திருவிளை. மேருவை. 6). . |
| வருடு - தல் | varuṭu- 5 v. tr. To rub; to massage; தடவுதல். செம்புனல் வந்தங் கடிவருட (தேவா. 112, 5). |
| வருடை 1 | varuṭai n. 1. Mountain sheep; வரையாடு. வரையாடு வருடைத் தோற்றம் போல (பட்டினப். 139). (சூடா.) 2. Sheep; 3. Aries of the zodiac; 4. A fabulous animal. |
| வருடை 2 | varuṭai n. cf. spardhā. Envy, malice; மாற்சரியம். காமச் செற்றக்குரோத லோபமதவருடை (தேவா. 1054, 8). |
| வருடைமான் | varuṭai-māṉ n. <>வருடை1+. See வருடை1, 1. (சிலப். 25, 51, கீழ்க்குறிப்பு.) . |
| வருணகம் | varuṇakam n. <>varṇaka. 1. Letter; எழுத்து. 2. Paint; 3. Sandalwood tree; 4. Redwood. |
| வருணசங்கரம் | varuṇa-caṅkaram n. <>varṇa-samkara. Confusion or mixing of castes due to intermarriage; சாதிக்கலப்பு. |
| வருணசபம் | varuṇa-capam n. <>varuṇa-japa. Vedic prayer for rain, addressed to Varuṇa; மழைவேண்டிச் செபிக்கப்படும் வேத மந்திரங்கள். |
| வருணசரம் | varuṇa-caram n. <>varṇa-sara. Necklace of rubies or red gems; செம்மணிகளாற் செய்த கழுத்தணி. வருணற் கீந்த வருணசரத்தையே (கம்பரா. சேதுப. 35). |
| வருணசிலைவந்தோன் | varuṇa-cilai-vantōṉ n. <>வருணன்+சிலை3+வா-. Diamond; வயிரம். (யாழ். அக.) |
| வருணசூக்கம் | varuṇa-cūkkam n. <>varuṇa + sūkta. A vedic hymn in praise of Varuṇa; வருணனைப்பற்றிய தோத்திரமடங்கிய ஓர் வேதமந்திரம். வருணசூக்க மந்திர நவின்று மூழ்கில் (திருவிளை. தீர்த். 18). |
| வருணதிசை | varuṇa-ticai n. <>id.+dišā. The west; மேற்கு. (திவா.) |
| வருணதேவம் | varuṇa-tēvam n. <>id.+dēva. The 24th nakṣatra; சதயநாள். |
| வருணநாள் | varuṇa-nāḷ n. See வருணனாள் (திவா.) . |
| வருணப்பூதர் | varuṇa-p-pūtar n. <>varṇa+. The four goblins protecting respectively the four castes; நால்வகை வருணங்களையுங் காக்கும் நான்கு பூதங்கள். வருணப்பூதர் நால்வகைப் பாணியும் (சிலப். 6, 35). |
| வருணப்பொருத்தம் | varuṇa-p-poruttam n. <>id.+. (Poet.) Rule of propriety which enjoins that the first word of a poem should contain letters pertaining to the caste of the hero (the vowels and ka, ṅa ca, a ṭa, ṇa being Vaišya, ḻa, ḷa being šūdra), one of ten ceyyuṇ-mutaṉ-moḻi-p-poruttam, q.v.; பன்னீருயிரும் க ங ச ஞ ட ண என்ற மெய்யாறும் பார்ப்பனச்சாதியும், த ந ப ம ய ர என்று ஆறும் மன்னர்சாதியும், ல வ ற ன என்ற நான்கும் வணிகர்சாதியும், ழ ள இரண்டும் சூத்திரசாதியுமாகக் கொண்டு உரியவாறு செய்யுண் முதன்மொழிப் பொருத்தங் கொள்ளுமுறை. (வெண்பாப். முதன். 9, 10.) |
